அது

ஆள் அரவமற்ற

ஒரு ரயில் நிலையம் என்றாய்...

இருக்கும்

அதனால்தான்

ஒரு குயில் அபூர்வமாகக்

குரலெழுப்பியதையும்,

பயணிகளுக்கான அறிவிப்பு

ஒலித்ததையும்

துல்லியமாக உணர்ந்தேன்.

சிவப்பும், பச்சையுமாய்

வர்ண விளக்குகள் மாறி மாறி

ஒளிர்வதையும்

ரயிலின் பெரு மூச்சுகளையுங் கூட

உணர்கின்றேன்...

வேண்டுமென்றே தவற விட்டு

அடுத்த ரயிலுக்காய்க்

காத்திருக்கிறாய்.

இரண்டு ரயில்களுக்கான

இடைவெளி நேரத்தில்

நாம் எதைப் பேசி முடிக்க

இயலும்?

வெயிலின் சாய்வை

சிறு நூல் கொண்டு இழுத்து,

நிமிர்த்துவது போல

பிரிவின் பிரிவை ஒத்திவைக்க

இப்படித்தான் மண்டியிடுகின்றோம்.

ரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டதாக

இறுதியில் சொல்லுகிறாய்.

உனக்குத் தெரியாது,

உன்னருகில் நானும் பயணிப்பது.

அது

ஆள் அரவமற்ற

ஒரு ரயில் நிலையம் என்றாய்...

இருக்கும்

அதனால்தான்

ஒரு குயில் அபூர்வமாகக்

குரலெழுப்பியதையும்,

பயணிகளுக்கான அறிவிப்பு

ஒலித்ததையும்

துல்லியமாக உணர்ந்தேன்.

சிவப்பும், பச்சையுமாய்

வர்ண விளக்குகள் மாறி மாறி

ஒளிர்வதையும்

ரயிலின் பெரு மூச்சுகளையுங் கூட

உணர்கின்றேன்...

வேண்டுமென்றே தவற விட்டு

அடுத்த ரயிலுக்காய்க்

காத்திருக்கிறாய்.

இரண்டு ரயில்களுக்கான

இடைவெளி நேரத்தில்

நாம் எதைப் பேசி முடிக்க

இயலும்?

வெயிலின் சாய்வை

சிறு நூல் கொண்டு இழுத்து,

நிமிர்த்துவது போல

பிரிவின் பிரிவை ஒத்திவைக்க

இப்படித்தான் மண்டியிடுகின்றோம்.

ரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டதாக

இறுதியில் சொல்லுகிறாய்.

உனக்குத் தெரியாது,

உன்னருகில் நானும் பயணிப்பது.