யார் முதலில்
சொல்வதெனும்
காத்திருப்புகள் துயரம்
கண்கட்டாத உறியடிபோல்
உடைக்கத்தான் வேண்டும்
சில மௌனங்களை.

மழையினூடான
தேநீர் உரையாடலில்
கரைக்கவிருப்பது
கெட்டிப்பட்டுப்போய்
தேங்கிக்கிடக்கும்
சில கசப்புகளை.

எங்கோ தூரத்தில்
யாரும் பார்த்திடாதபடி
காட்டுப்பூக்கள்
சேகரித்திருப்பது
பிரியத்தின் அடைக்கான
சில வாசனைகளை.

பிம்பங்களற்ற தனிமையில்
ரசம் குறையும்
நிலைக்கண்ணாடி இன்னும்
நினைத்துக்கொண்டிருப்பது
நீங்கிடாத
சில முகங்களை.

சிவப்பின் எரிச்சலோடு
பச்சைக்கான காத்திருப்பில்
சில்லறை நீட்டி ஊக்கப்படுத்தாவிடினும்
கண்ணாடி இறக்கி
அள்ளிக்கொடுத்தால் நலம்
சில புன்னகைகளை.

இணைப்பை
எதிர்க்குரல் துண்டிப்பதற்குள்
கிடைக்கும் கணமொன்றில்
கேட்டுவிட ஆசை
துருவேறிக்கிடக்கும்
சில மன்னிப்புகளை.

மண் உதறி
சாலை அடைந்ததும்
மறந்து விட வேண்டியது
மணல் வீட்டை
மனத் துயரை
சில கண்ணீர்த்துளிகளை.

அந்தியில்
கூடடையும் பறவை
அடிவானமெங்கும்
சிதற விட்டிருப்பது
சிறகிலிருக்கும் சமத்துவத்துக்கான
சில வண்ணங்களை.

ரயிலில்
யாசிப்பின் கைகூப்புகளில்லாமல்
கைகளிழந்தவர் விற்கும்
பேனாவில்தான்
எழுத வேண்டும் எழுதப்படாத
சில நம்பிக்கைகளை.

யார் முதலில்
சொல்வதெனும்
காத்திருப்புகள் துயரம்
கண்கட்டாத உறியடிபோல்
உடைக்கத்தான் வேண்டும்
சில மௌனங்களை.

மழையினூடான
தேநீர் உரையாடலில்
கரைக்கவிருப்பது
கெட்டிப்பட்டுப்போய்
தேங்கிக்கிடக்கும்
சில கசப்புகளை.

எங்கோ தூரத்தில்
யாரும் பார்த்திடாதபடி
காட்டுப்பூக்கள்
சேகரித்திருப்பது
பிரியத்தின் அடைக்கான
சில வாசனைகளை.

பிம்பங்களற்ற தனிமையில்
ரசம் குறையும்
நிலைக்கண்ணாடி இன்னும்
நினைத்துக்கொண்டிருப்பது
நீங்கிடாத
சில முகங்களை.

சிவப்பின் எரிச்சலோடு
பச்சைக்கான காத்திருப்பில்
சில்லறை நீட்டி ஊக்கப்படுத்தாவிடினும்
கண்ணாடி இறக்கி
அள்ளிக்கொடுத்தால் நலம்
சில புன்னகைகளை.

இணைப்பை
எதிர்க்குரல் துண்டிப்பதற்குள்
கிடைக்கும் கணமொன்றில்
கேட்டுவிட ஆசை
துருவேறிக்கிடக்கும்
சில மன்னிப்புகளை.

மண் உதறி
சாலை அடைந்ததும்
மறந்து விட வேண்டியது
மணல் வீட்டை
மனத் துயரை
சில கண்ணீர்த்துளிகளை.

அந்தியில்
கூடடையும் பறவை
அடிவானமெங்கும்
சிதற விட்டிருப்பது
சிறகிலிருக்கும் சமத்துவத்துக்கான
சில வண்ணங்களை.

ரயிலில்
யாசிப்பின் கைகூப்புகளில்லாமல்
கைகளிழந்தவர் விற்கும்
பேனாவில்தான்
எழுத வேண்டும் எழுதப்படாத
சில நம்பிக்கைகளை.