சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்குப் பிறகு, பல மாடிகள் கொண்ட வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

சமீபத்தில், மதுரையில் திறக்கப்பட்ட மால் ஒன்று, விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாகப் புகாருக்கு ஆளாகியுள்ளது. அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளும்கட்சி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவே, ‘திருப்பரங்குன்றம் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மால் ஒன்று, விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் சாலையைக் கடக்க முடியாமல் மக்கள் சிரமப் படுகின்றனர். அந்தக் கட்டடம், உரிய விதிமுறைகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டுள்ளதா என்பதை, நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கைகளை கலெக்டர் எடுக்க வேண்டும்’ என்றார்.

ராஜன் செல்லப்பாவின் பேச்சு, மதுரை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெயரைக் குறிப்பிடாமல் அவர் சுட்டிக்காட்டியது, திருப்பரங்குன்றம் சாலையில் திறக்கப்பட்டுள்ள ‘சரவணா செல்வரத்தினம் மால்’தான். ராஜன் செல்லப்பா, ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உண்மையான அக்கறையோடுதான் இந்தக் குற்றச்சாட்டை இவர் எழுப்பியுள்ளாரா... அல்லது இதற்குப் பின்னால் வேறு நோக்கம் எதுவும் இருக்குமா என்ற பேச்சு மதுரை நகர மக்களிடையே உள்ளது.

அவரது குற்றச்சாட்டில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை அறிய சரவணா செல்வரத்தினம் மாலுக்குச் சென்றோம். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்குச் செல்வதற்கான முக்கியச் சாலையில் இந்த மால் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் கோயில், மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி போன்றவற்றுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த மால் அமைந்துள்ள இடம், முழுக்க முழுக்க குடியிருப்புப் பகுதி. மால் வந்துவிட்டதால், இந்தப் பகுதி மிகவும் பரபரப்பாகிவிட்டது.

சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட பக்கத்து மாவட்டங்களில் இருந்தெல்லாம், இந்த மாலுக்கு மக்கள் ஆர்வத்துடன் படையெடுத்து வருகிறார்கள். இதனால், அந்தச் சாலையில் மக்கள் நெரிசல் அதிகமாகிவிட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அந்த இடத்தில் போலீஸார் இருந்தாலும், சாலையைக் கடந்து மாலுக்கு வருவதற்கு மக்கள் திணறுகிறார்கள். முக்கியச் சாலை என்பதால், வாகனங்கள் அதிவேகமாகவே செல்கின்றன. கொஞ்சம் அசந்தாலும் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையில் இருக்கிறது அந்த மால். இதன் நுழைவுப் பகுதியில், இரும்புச் சாரம் கட்டி, கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. அதனால், அந்த இடத்தில், பாதுகாப்பற்ற நிலை உள்ளது. படிக்கட்டுகள் குறுகலாக உள்ளன. நகரும் படிக்கட்டு உள்ளது. அந்தப் பகுதியில் சுவர் பூசப்படாமல் முரட்டுக்கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன. அங்கு, லிஃப்ட் ஒன்றும் உள்ளது. இவை தவிர, அவசர வழிகள் எதுவும் அங்கு இல்லை. குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் நிறைய பேர் வருகிறார்கள். இதில், பொருள்கள் வாங்குபவர்களும் உண்டு; வேடிக்கை பார்க்க வருபவர்களும் உண்டு. எந்தவொரு வர்த்தகக் கட்டடமும், கட்டுமானப் பணிகள் முழுமையடைந்த பின்புதான் திறக்கப்பட வேண்டும் என விதி உள்ளது. இங்கு கட்டுமானம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் வியாபாரமும் களைகட்டுகிறது. எட்டு தளங்களைக் கட்டியுள்ளனர். ‘‘ஆனால் ஆறு தளங்களுக்குத்தான் அனுமதி உள்ளது’’ என மாநகராட்சி வட்டாரம் சொல்கிறது.

மதுரையில் விதிகளை மீறிய கட்டடங்கள் சம்பந்தமாக, உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்ற சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான முத்துக்குமாரிடம் பேசினோம். “விபத்து நடந்த பிறகுதான், நடவடிக்கை எடுப்பதுபோல் அதிகாரிகள் வேகம் காட்டுவார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி சித்திரை வீதி வரை ஒன்பது மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது; வெளி வீதிவரை 15 மீட்டர் உயரத்துக்குக் கட்டவேண்டும் என்று விதிகள் உள்ளன. இந்த விதிகளை மீறி 840 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதைச் சுட்டிக் காட்டி பொது நல வழக்குத் தாக்கல் செய்தேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதிகாரிகள் துணையுடன்தான், அனைத்து விதிமீறல்களும் நடக்கின்றன.
மதுரை கலெக்டராக சகாயம், அன்சுல் மிஸ்ரா ஆகியோர் இருந்த போதெல்லாம் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைத்தார்கள். அவர்கள் போனவுடன் அந்தக் கட்டடங்களைத் திறந்துவிட்டார்கள். மதுரை ஒரு மாநகராட்சி என்றாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் கட்டப்படும் கட்டடங்களின் பிளானுக்கு, சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகள்தான் ஒப்புதல் வழங்க வேண்டும். அந்த அதிகாரிகள், மதுரைக்கு வராமல் சென்னையிலிருந்தே ஓகே செய்து விடுகிறார்கள். மதுரையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்துக்கு சீல் வைத்த மதுரை மாநகராட்சி அதிகாரியைப் பதவியிறக்கம் செய்துவிட்டார்கள்.

மதுரை அண்ணா நகரில், 30 வருடங்களுக்கு முன்பு வீட்டு வசதி வாரியத்தால் குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது. மொத்தம் 4,500 வீட்டுமனைகள். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உருவானவுடன், அண்ணா நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளை, விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி வர்த்தக நிறுவனங்களாக மாற்றிவிட்டார்கள். வர்த்தக நிறுவனங்களால், 80 அடியாக இருந்த சாலை, தற்போது 40 அடியாகச் சுருங்கிவிட்டது. வர்த்தகக் கட்டடங்களில் எங்கேயும் பார்க்கிங் வசதி கிடையாது; அவசர வழிகள் கிடையாது. இதையும் மாநகராட்சி அதிகாரிகள்தான் அனுமதித்துள்ளார்கள். இப்போது டி.பி.கே. சாலையில் கட்டப்பட்டுள்ள சரவணா செல்வரத்தினம் மால் கட்டடத்தை விதிகளை மீறிக் கட்டியுள்ளார்கள் என்று வெளிப்படையாகத் தெரிகிறது” என்றார்.

ராஜன் செல்லப்பாவின் புகார் பற்றி மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் கேட்டோம். “எம்.எல்.ஏ புகார் கொடுத்ததைத் தொடர்ந்து அந்த மால் கட்டடத்தை ஆய்வு செய்தோம். அங்கு, சில விதிமீறல்கள் உள்ளன. அவற்றைச் சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்புவோம். அதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து, நடவடிக்கை எடுப்போம். எக்காரணம் கொண்டும், விதிகளை மீறிய கட்டடங்களை மதுரையில் அனுமதிக்க மாட்டோம்” என்றார் உறுதியாக.

சரவணா செல்வரத்தினம் மாலுக்குச் சென்று விளக்கம் கேட்டோம். யாரும் பேசவில்லை. ‘‘மேனேஜரிடம் பேச வேண்டும்’’ எனப் பல முறை போனில் தொடர்பு கொண்டபோதும் அவர்களிடம் இருந்து உரிய பதில் இல்லை.

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்