Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 23 - அழுத்தும் நோய்ச்சுமை!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 23 - அழுத்தும் நோய்ச்சுமை!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 23 - அழுத்தும் நோய்ச்சுமை!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 23 - அழுத்தும் நோய்ச்சுமை!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 23 - அழுத்தும் நோய்ச்சுமை!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 23 - அழுத்தும் நோய்ச்சுமை!

ஒரு கிரிக்கெட் போட்டியில் நம்மிடம் தோற்றதும் வங்க தேசத்தைக் கிண்டல் செய்கிறோம். ஒரு கிரிக்கெட் போட்டியில் நம்மைத் தோற்கடித்ததும், பாகிஸ்தானையும் நக்கல் அடிக்கிறோம். அந்தத் தேசங்களைவிட இந்தியா மேன்மையானது என்பதை ஒரு விளையாட்டு முடிவு செய்வதில்லை. அதற்கு வேறுவிதமான அளவுகோல்கள் இருக்கின்றன. உலக நோய்ச்சுமை பற்றிய ஆய்வு ஒன்றை,  கடந்த மே மாதம் ‘லேன்செட்’ மருத்துவ இதழ் வெளியிட்டிருந்தது. ‘நோயில் பரிதவிக்கும் மக்களுக்கு மருத்துவச் சேவை எட்டும் தூரத்தில் உள்ளதா’ என்பதை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் தரவரிசை செய்யப்பட்டன. 195 நாடுகளில் இந்தியா பரிதாபமாக 154-வது இடத்தில் உள்ளது. வங்கதேசம், பூடான், இலங்கை மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் நம்மைவிட மேலே இருக்கின்றன.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 23 - அழுத்தும் நோய்ச்சுமை!

பச்சிளம் குழந்தைகள் மரணத்தில் 195 நாடுகளில் நாம் 185-வது இடத்தில் உள்ளோம். உலக நாடுகளில் பத்து மட்டுமே நமக்குக் கீழ் உள்ளன. போர் மலிந்த ஆப்கானிஸ்தானும், வறுமையின் முன்மாதிரியாக நாம் கூறும் சோமாலியாவும் கூட நம்மைவிடச் சிறப்பான நிலையில், தமது இளம் குழந்தைகளை மரணத்திலிருந்து காப்பாற்றி முன் நிற்கின்றன. ஆண்டுக்கு வயிற்றுப் போக்கினால் 4.75 சதவிகிதக் குழந்தைகள் நம் நாட்டில் சாவதாகக் கூறுகிறது கணக்கெடுப்பு. டிப்தீரியா எனும் குரல்வளை அழற்சி நோயால் ஏற்படும் குழந்தைகள் மரணத்தில் 195 நாடுகளில் நாம் 133-வது இடத்தில் நிற்கிறோம். மக்கள் இந்த நிலையிலும் வாழும்போது, மாறிமாறி அணுகுண்டு வெடித்துப் பெருமை பேசிக்கொண்டுள்ளோம்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மிலிண்ட் டியோகாங்கர். சமூக, பொருளாதார சமநிலையற்ற தன்மை நிலவும் நம் நாட்டில், இந்த ஏற்றத்தாழ்வு, மருத்துவச் சேவையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஒரு ஆய்வு செய்தார். ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்துக்காக செய்யப்பட்ட அந்த ஆய்வு மிக முக்கியமானது. ‘இந்தியாவில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறக்கும் குழந்தையைவிட, ஏழைக் குடும்பத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தை, சில நாட்களிலேயே மரணமடையும் ஆபத்து இரண்டரை மடங்கு அதிகம். அப்படிப் பிழைத்தாலும், ஐந்து வயதாவதற்குள் அந்தக் குழந்தை இறப்பதற்கான அபாயம் நான்கு மடங்கு அதிகம். பழங்குடிக் குழந்தையாக இருந்தால், அது ஐந்தாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குள் இறப்பதற்கு இன்னும் ஒன்றரை மடங்கு அதிக அபாயம் உள்ளது’ என அந்த ஆய்வு சொன்னது.   

இந்த நிலை பற்றிய கவலை, வருத்தம், ஆதங்கம், கோபம் எத்தனை இருந்தபோதும், அவற்றையெல்லாம் விலக்கிவிட்டு... குறை காண்பதைத் தவிர்த்து, தீர்வு காண்பது அவசியமாகிறது. இந்த நோய்கள், மரணங்கள் யாவும் பெரும்பாலும் வறுமைப்பட்ட ஏழை மக்களுக்கே நிகழ்கின்றன. இவை எதுவுமே கண்டுபிடிக்கவோ, குணப்படுத்தவோ முடியாத சிக்கலான நோய்கள் இல்லை. இவை யாவற்றுக்கும் காரணம் வறுமை, வறுமை, வறுமை மட்டுமே என்று நூறு முறை கூறலாம். இவற்றை ஏன் தடுக்க முடியவில்லை. விடுதலை பெற்று முக்கால் நூற்றாண்டைத் தொட்ட பின்னும் இந்த நிலை தொடர்வதற்கு அறிவியலின் தவறு காரணமல்ல, ஆட்சியாளர்களின் அலட்சியமே காரணம் எனக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியும். எந்த உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்?

உலகின் நோய்ச்சுமையில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியா சுமக்கிறது. அந்தவகையில், உலகிலேயே அதிக நோயாளிகள் இந்தியாவில்தான் எப்போதும் இருக்கிறார்கள்.  இத்தனை நோயாளிகளுக்கும் சிகிச்சை தரும் அளவுக்கான டாக்டர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே கேள்வி. இந்திய டாக்டர்களில் 74 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில்தான் இருக்கிறார்கள். இந்தியாவின் பல கிராமங்களில் அடிப்படைச் சிகிச்சைகளைத் தருவதற்குக்கூட மருத்துவர்கள் இல்லை. ஏதேனும் மோசமான நோய் வந்தால் அவ்வளவுதான். ‘கிராமப்புறங்களில் 81 சதவிகித அளவுக்கு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் பற்றாக்குறை இருக்கிறது’ என மத்திய அரசே ஒப்புக்கொள்கிறது.
இங்கே மருத்துவச் சேவையில் அரசின் பங்கு குறைந்துகொண்டே வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் வெறும் ஒரு சதவிகித அளவே, மருத்துவச் சேவைகளுக்காக மத்திய அரசால் ஒதுக்கப்படுகிறது. உள்நோயாளியாகத் தங்கி சிகிச்சை பெற உதவும் மருத்துவமனை படுக்கைகளில் 63 சதவிகிதம், தனியார் மருத்துவமனைகளில்தான் உள்ளன. எனவே, மக்கள் தங்கள் கைக்காசைச் செலவழித்தால்தான் நல்ல சிகிச்சை பெற முடியும் என்கிற நிலை இருக்கிறது. நம்மை அடிமைப்படுத்தி, நவீன மருத்துவமுறையை நம் நாட்டில் அறிமுகம் செய்த பிரிட்டனில்கூட இப்படி ஒரு அவலநிலை இல்லை. அங்கு மருத்துவத்துக்காக மக்கள் தங்கள் கைக்காசைச் செலவழிப்பது என்பது வெறும் 10 சதவிகிதம்தான். இந்தியாவில் இது 62 சதவிகிதமாக இருக்கிறது. எவ்வளவு மோசமான முரண்பாடு இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 23 - அழுத்தும் நோய்ச்சுமை!

தொற்று நோய்கள் நமக்குத் தீராத தலைவலி என்றால், இன்னொரு பக்கம் வாழ்க்கைமுறை மாற்றத்தால் வந்திருக்கும் தொற்றா நோய்களும் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளன. இந்தியாவின் 53 சதவிகித நோய்ச்சுமையாக இருப்பவை இவைதான். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய்கள் போன்ற இந்த நோய்கள் இப்போது ஏராளமானவர்களைத் தாக்குகின்றன. கடந்த 2015-ம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த மரணங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்கு இந்த நோய்களே காரணம்.  

உயிர்க்கொல்லும் இந்த வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களில் பலவும் நகர்ப்புறத்தில் வாழும், படித்த மேல்தட்டு மக்களையே பாதிக்கக்கூடியவை. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஊடகக் கண்காணிப்பு என அத்தனையும் இருந்தும் இவர்களைக் காப்பாற்ற முடியவில்லை... ஏன்? பணமும், கல்வியும் நமக்குப் பட்டங்களையும் வசதிகளையும் தரக்கூடும்; ஞானத்தைத் தரவில்லை. நமது கல்வி முறை மதிப்பெண்களைத் தருகிறது; வாழ்வு பற்றிய, சமூகம் பற்றிய மதிப்பை உருவாக்கவில்லை.

இதுபற்றி ஆராய்ச்சி செய்த டாக்டர் கிறிஸ்டோபர் முரே, ‘‘வளமான பொருளாதார வசதிகள் நல் வாழ்வுக்கான அறிவை, ஆரோக்கிய உணர்வை உண்டாக்கி விடாது. சிறந்த டாக்டர்கள், விலை மதிப்புமிக்க பரிசோதனைக் கருவிகள் ஆரோக்கிய வாழ்வைத் தந்துவிடாது” என்கிறார். ஆம், மென்மையான மெத்தையை வாங்கலாம். தூக்கத்தை வாங்க முடியாது. அளவற்ற செல்வத்தை ஈட்டலாம். ஆரோக்கியத்தை வாங்கிவிட முடியாது என்று புனிதர் தலாய் லாமா சொல்வது எத்தனை உண்மை.

காசுக்குக் கல்வி விற்கும் பள்ளிகள், கல்லூரிகள் பெருகியதுடன், நோயும் பெருகியுள்ளது. இந்த இழிநிலைக்குத் தீர்வு காண அரசு சிந்திப்பது அவசியம்.

(நலம் அறிவோம்)