சிற்றாறு எதிரிலிருக்க,
காம்பௌண்ட் சுவருக்குள்,
தோட்டமும்,
தோட்டத்திற்கு நடுவேயான
பாரம்பர்யமான உங்கள் வீட்டில்,
தலைவாழை விருந்துக்கு
என்னை அழைக்க வேண்டாம்...

நகரின் மையமான பகுதியில்,
ஆடம்பர அப்பார்ட்மென்ட்டில்
``கம் ஓவர், லெட்ஸ் ஹேவ் எ பியர்’’
என்றும் அழைக்க வேண்டாம்...

கருங்கற்களால் வேய்த,
செவ்வண்ணம் பூசிய,
சிறிதும், பெரிதுமாய்
டெரகோட்டாக்கள் நிரம்பிய,
கலைவண்ணமான
உங்கள் இல்லத்திற்கு
கவிதை விவாதிக்க
அழைப்பு விடுக்க வேண்டாம்...

``வாங்க, எங்கூருக்கு,
நம்ம தோப்பு எளநிக்கும்,
அம்மா வக்கிற
நாட்டுக்கோழி வறுவலுக்கும்
ஈடே கிடையாது’’
எனத் தூண்டில் போடவேண்டாம்...

அல்லது புதிதாக கட்டி முடித்த
இரண்டடுக்கு வீட்டிற்கு
வற்புறுத்தி,
சிறப்பு செய்ய அழைக்கவே வேண்டாம்...

ஒண்டிக்குடித்தனம்,
ஓல வீடு,
ஓட்டு வீடென
எந்த வகையான சொந்த வீட்டிற்கும்
என்னை
அழைக்க வேண்டாம்...

பயணச்சாலை எங்கும் நிறைந்துள்ள
வீடுகளைக்கண்டு வெதும்பும்
என்னிடத்தில்
அவற்றில் ஒன்று
சொந்தமாய் உங்களுடையதென
என்னிடம்
சொல்லக்கூட வேண்டாம்...

உங்களுக்கு வேண்டுமெனில்,
என் பாலின அடையாளத்தை,
என் கௌரவத்தை
அவமதிக்கும்
நிபந்தனைகள் ஏதுமின்றி
ஒரு
சிறு அறையினை
வாடகைக்குத் தாருங்கள்
வந்து
வசிக்கிறேன்...

சிற்றாறு எதிரிலிருக்க,
காம்பௌண்ட் சுவருக்குள்,
தோட்டமும்,
தோட்டத்திற்கு நடுவேயான
பாரம்பர்யமான உங்கள் வீட்டில்,
தலைவாழை விருந்துக்கு
என்னை அழைக்க வேண்டாம்...

நகரின் மையமான பகுதியில்,
ஆடம்பர அப்பார்ட்மென்ட்டில்
``கம் ஓவர், லெட்ஸ் ஹேவ் எ பியர்’’
என்றும் அழைக்க வேண்டாம்...

கருங்கற்களால் வேய்த,
செவ்வண்ணம் பூசிய,
சிறிதும், பெரிதுமாய்
டெரகோட்டாக்கள் நிரம்பிய,
கலைவண்ணமான
உங்கள் இல்லத்திற்கு
கவிதை விவாதிக்க
அழைப்பு விடுக்க வேண்டாம்...

``வாங்க, எங்கூருக்கு,
நம்ம தோப்பு எளநிக்கும்,
அம்மா வக்கிற
நாட்டுக்கோழி வறுவலுக்கும்
ஈடே கிடையாது’’
எனத் தூண்டில் போடவேண்டாம்...

அல்லது புதிதாக கட்டி முடித்த
இரண்டடுக்கு வீட்டிற்கு
வற்புறுத்தி,
சிறப்பு செய்ய அழைக்கவே வேண்டாம்...

ஒண்டிக்குடித்தனம்,
ஓல வீடு,
ஓட்டு வீடென
எந்த வகையான சொந்த வீட்டிற்கும்
என்னை
அழைக்க வேண்டாம்...

பயணச்சாலை எங்கும் நிறைந்துள்ள
வீடுகளைக்கண்டு வெதும்பும்
என்னிடத்தில்
அவற்றில் ஒன்று
சொந்தமாய் உங்களுடையதென
என்னிடம்
சொல்லக்கூட வேண்டாம்...

உங்களுக்கு வேண்டுமெனில்,
என் பாலின அடையாளத்தை,
என் கௌரவத்தை
அவமதிக்கும்
நிபந்தனைகள் ஏதுமின்றி
ஒரு
சிறு அறையினை
வாடகைக்குத் தாருங்கள்
வந்து
வசிக்கிறேன்...