பொது அறிவு
Published:Updated:

‘நச்’சுனு நாலு கதைகள்!

‘நச்’சுனு நாலு கதைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘நச்’சுனு நாலு கதைகள்!

எஸ்.அபிநயா - ரமணன்

ஓவர் ஆர்வம்!     

‘நச்’சுனு நாலு கதைகள்!

மையும் முயலும் கலந்துகொண்ட ரேஸ் போட்டியில், விசில் அடித்ததுமே வெகுவேகமாக மூச்சிரைத்தபடி ஓடிவந்து வெற்றிக்கோட்டைத் தொட்டது முயல். ‘‘ஏய்ய்ய்.. இப்பவும் எங்கள் இனத்துக்கே வெற்றி... வெற்றி... கப் எனக்குத்தான்’’ என்று குதித்தது. யாரிடமும் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. முயலையே முறைப்புடன் பார்த்த நடுவர் கரடி, ‘‘முந்திரிக்கொட்டை... இது ஸ்லோ ரேஸ்டா. இந்த முறை கோப்பை ஆமைக்குத்தான்’’ எனச் சொல்லி, முயலின் தலையில் நறுக் எனக் குட்டியது.

அப்டேட் அபீட்!     

‘நச்’சுனு நாலு கதைகள்!

தினமும் ஒரு விலங்கைத் தின்றுவந்த சிங்கத்தை வீழ்த்தினால்தான் நிம்மதியாக வாழ முடியும் என்றெண்ணியது முயல். ‘‘எங்க தாத்தா காலத்து டெக்னிக்கையே யூஸ் பண்றேன்’’ என நண்பர்களிடம் சொல்லிவிட்டு, சிங்கத்தைக் கிணறு இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றது. ‘‘உள்ளே பாருங்க ராஜா... உங்களை மாதிரியே ஒருத்தன். அவனோடு சண்டை போட்டு ஜெயிச்சுக் காட்டுங்க’’ என்றவாறு கிணற்றுக்குள் பார்த்த முயல் அதிர்ந்தது. ‘ஆத்தீ... தண்ணியே இல்லே..! அப்டேட் பண்ணிக்காமல் கூட்டி வந்துட்டோமே’ என நினைத்தவாறு ஓட்டம் பிடித்தது.

ராஜாதி ராஜா!    

‘நச்’சுனு நாலு கதைகள்!

புதிய வகுப்பில் நுழைந்த ஆசிரியர், ‘‘விடுமுறையில் எங்கெல்லாம் சென்றீர்கள்?’’ என்று கேட்டார். ஊட்டி, கொடைக்கானல், தஞ்சை பெரிய கோயில், ஏற்காடு என ஒவ்வொரு மாணவரும் சொல்ல, ஹிருத்திக் முறை வந்தது. அவன் எழுந்து, ‘‘நாங்கள் குடும்பத்துடன் ஜெயச்சந்திரன் போய், ராஜாக்களைப் பார்த்தோம்’’ என்றான். ஆசிரியர் குழப்பத்துடன், ‘‘துணிக் கடையில் ராஜாக்களா?’’ என்றார். ‘‘இல்லை சார்... ஜெயச்சந்திரன்  தியேட்டரில் பாகுபலி படம் பார்த்தோம்’’ என்றான் கூலாக.

அரசு விடுமுறை!     

‘நச்’சுனு நாலு கதைகள்!

சுரேஷுக்குப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் கொடுத்தார்கள். அதைப் பார்த்த தங்கை, ‘எனக்கும் சைக்கிள் வேணும்’ என அழுது அடம்பிடித்தாள். இரண்டு நாளாகியும் அவளது அடம் தொடரவே, அப்பா புதிய சைக்கிளை வாங்கிக் கொடுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை தங்கையின் சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தான் சுரேஷ். அதைப் பார்த்த அப்பா, ‘‘உன் சைக்கிளை எடுக்காமல், எதுக்கு தங்கச்சி சைக்கிளை ஓட்டறே?’’ என்று கேட்டார்.

‘‘அப்பா, அது கவர்ன்மென்ட் சைக்கிள். சண்டே ஹாலிடே’’ என்றான் குறும்புடன்.