ஓர் இனத்தின் அடிப்படை அடையாளம் அதன் வரலாற்றிலிருந்தே உருவாகிறது. தொன்மையான வரலாறும் பண்பாட்டுச் செழுமையும் கொண்ட தமிழினம் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களில் தனித்துவம்

வாய்ந்தது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மைக்கு சங்க இலக்கியங்கள் போன்ற இலக்கிய ஆதாரங்கள் தொடங்கி, கல்வெட்டுகள், பழங்காலச் சிற்பங்கள் போன்ற தொல்லியல் ஆதாரங்கள் வரை ஏராளமான சான்றுகள் உள்ளன. இதற்கு இன்னும் வலுச்சேர்க்கும் வகையில் நமக்குக் கிடைத்த வரலாற்று வாய்ப்பு, மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள்.

தமிழ் பிராமி எழுத்துகள், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் மட்டுமல்லாது நன்கு வடிவமைக்கப்பட்ட நகர அமைப்புகளும் கிடைத்திருக்கின்றன. தமிழர்களின் மொழியறிவு, தொழில்நுட்பம், வணிகம், கலை, கட்டடவியல் அறிவு ஆகியவற்றை மெய்ப்பிப்பதாகவே இவை அமைந்துள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தைப் போன்ற ஒரு வளம்மிக்க நாகரிகம் தமிழகத்தில் இருந்துள்ளதையும் தமிழர்கள் நீண்ட நெடிய பண்பாட்டு நாகரிகத்தைக்கொண்டவர்களாக விளங்கியதையும் இவை உறுதிப்படுத்துகின்றன.

ஆனால், இத்தகைய ஆய்வுகளைத் தொடர்வதற்கும் மேம்படுத்துவதற்குமான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டதை அடுத்து எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. ஓர் இனத்தின் வரலாற்றுச் சான்றுகளை அழிப்பதற்கான முயற்சி இது என்ற கண்டனக் குரல்களில் நியாயம் இல்லாமலில்லை. தொல்லியல் ஆய்வை முன்னெடுத்த அதிகாரியை இடமாற்றம் செய்வது, கீழடியில் எடுக்கப்பட்ட ஆய்வுப் பொருள்களைப் பெங்களூருவுக்கு எடுத்துச் செல்வது, ஆய்வுகளுக்குப் போதிய நிதி ஒதுக்காமல் இருப்பது போன்ற அரசுகளின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் அலட்சியமும் அறியாமையும் மட்டும்தான் இருக்கின்றன. ‘கீழடியிலேயே இந்த ஆய்வுப் பொருள்களைப் பாதுகாப்பதற்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவு, வரலாற்றைக் காப்பாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு.

இவற்றையெல்லாம் நீதிமன்றம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற நிலையே அவலம்தான். வரலாற்று உணர்வு இல்லாத எந்த இனமும் வரலாற்றில் நீடித்து நிற்காது.

- ஆசிரியர்