Published:Updated:

சிலை திருடிய காக்கிகள்... - வேலியே பயிரை மேய்ந்த கதை

சிலை திருடிய காக்கிகள்... - வேலியே பயிரை மேய்ந்த கதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிலை திருடிய காக்கிகள்... - வேலியே பயிரை மேய்ந்த கதை

சிலை திருடிய காக்கிகள்... - வேலியே பயிரை மேய்ந்த கதை

சிலை திருடிய காக்கிகள்... - வேலியே பயிரை மேய்ந்த கதை

ழங்கால சாமி சிலைகளுக்குச் சர்வதேச மார்கெட்டில் பெரும் கிராக்கி என்பதால், சிலைக் கடத்தல் மாஃபியாக்கள் இந்தியா முழுவதும் வலை விரித்துக் காத்துக்கிடக்கிறார்கள். இப்போது, திருடர்கள் மட்டுமல்ல... போலீஸும், பூசாரியும்கூட சாமி சிலைகளைக் கடத்தி விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் ஞான அன்பு. அவருடைய தோட்டத்தில், பூமிக்கடியில் சிவன்-பார்வதி சிலைகள் உட்பட ஆறு சிலைகள் கிடைத்துள்ளன. அவற்றை விற்று நல்ல பணம் பார்க்கலாம் என அவர் நினைத்துள்ளார். போட்டோகிராபர் சுந்தரமூர்த்தி என்பவரை வைத்து அந்தச் சிலைகளைப் படம் எடுத்துள்ளார். அந்தப் படங்களை, சுந்தரமூர்த்தி தன் ஸ்டூடியோவில் பிரேம் போட்டு மாட்டிவைத்துள்ளார். அந்த ஸ்டூடியோவுக்கு வந்த போலீஸ்காரர் ஒருவர், ‘இந்தப் படம் எங்கே எடுக்கப்பட்டது?’ என்று சுந்தரமூர்த்தியிடம் விசாரித்துள்ளார்.

சிலை திருடிய காக்கிகள்... - வேலியே பயிரை மேய்ந்த கதை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர் சொன்ன தகவல்களை இன்ஸ்பெக்டராக இருந்த காதர் பாஷாவிடம் தெரிவித்துள்ளார், அந்த போலீஸ்காரர். அதை விசாரித்து வருமாறு ஏட்டு சுப்புராஜை அனுப்பியுள்ளார், காதர் பாஷா. அதையடுத்து ஞான அன்புவையும், சுந்தரமூர்த்தியையும் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி செமத்தியாகக் கவனிக்கின்றனர். அடி பொறுக்காமல், சிலையைக் கொடுத்துவிட்டு, அவர்கள் எஸ்கேப் ஆகின்றனர். இன்ஸ்பெக்டர் காதர் பாஷாவும், ஏட்டு சுப்புராஜுவும், அந்தச் சிலையை, சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளனிடம், 45 லட்சம் ரூபாய்க்கு விற்றனர். அதை டெல்லியில் ஒருவருக்கு மூன்று கோடிக்கு தீனதயாளன் விற்றுவிட்டார். பின்னர், தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆறு கோடி ரூபாய்க்கு அந்தச் சிலை விற்கப்பட்டது. இந்தச் சம்பவங்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை.

இந்த விவரங்கள், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்குக் கடந்த மார்ச் மாதம் தெரியவந்துள்ளது. உடனே அவர் ஆலடிப்பட்டிக்குப் போய் விசாரித்துள்ளார். அந்த விவரங்களை வைத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த சிலைக்கடத்தல் சம்பவம் நடந்தபோது இன்ஸ்பெக்டராக இருந்த காதர் பாஷா, திருவள்ளூர் டி.எஸ்.பி ஆகிவிட்டார். ஏட்டாக இருந்த சுப்புராஜ், கோயம்பேடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆகிவிட்டார். யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்த பிறகு, இந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, கைதுசெய்யப்பட்டு விருதுநகர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், சிறப்பு எஸ்.ஐ சுப்புராஜ். டி.எஸ்.பி காதர்பாஷா தலைமறைவாக உள்ளார்.

சிலை திருடிய காக்கிகள்... - வேலியே பயிரை மேய்ந்த கதை

இந்த நிலையில் நாம், ஆலடிப்பட்டிக்குச் சென்று விசாரணையில் இறங்கினோம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும், ஞானஅன்பு தற்போது அந்த ஊரில் இல்லை. அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று சிலர் சொன்னாலும், வேறு சிலர், நடந்த சம்பவங்களை உறுதி செய்தனர். எஸ்.ஐ. சுப்புராஜின் பூர்வீகம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள சவாஷ்புரம். அவரைப்பற்றி சவாஷ்புரம் மக்களிடம் விசாரித்தபோது, “ சுப்புராஜ் ரொம்ப நல்லவர். ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு உடையவர். அவர், சாமி சிலையைக் கடத்தி விற்றார் என்பதை ஏற்க முடியவில்லை. சவாஷ்புரம் குல தெய்வக் கோயில் திருவிழாவின்போது அவர்தான் அங்கு பூசாரியாகவே இருப்பார். அவர், 90 சிலைக் கடத்தல் சம்பவங்களில் துப்பறிந்து  தடுத்திருக்கிறார். சென்னையில் அவர் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். பெரிய அதிகாரிகள் செய்த குற்றத்துக்கு இவரைப் பலிகடாவாக ஆக்கிவிட்டார்கள்” என்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலிடம் கேட்டோம். “நான் பொறுப்பேற்ற உடனே, இந்த விவகாரம் என் கவனத்துக்கு வந்தது. அதையடுத்து, 2017 பிப்ரவரி 7-ம் தேதி, இதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்பு நடைபெற்ற அனைத்துச் சம்பவங்களையும் தீர விசாரித்த பிறகே, அந்த எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நாங்களே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தயாராக இருந்தோம். இந்த நேரத்தில்தான், நீதிமன்றத்தில் வழக்கு வந்து, எங்கள் தரப்பு பதிலைக் கேட்டனர். அதன்பேரில், வழக்கின் தற்போதைய நிலை, எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றைத் தெளிவுபடுத்தினேன். சுப்புராஜைக் கைது செய்துள்ளோம். டி.எஸ்.பி காதர் பாஷாவும் விரைவில் கைது செய்யப்படுவார். தற்போது அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்” என்றார். 

- ஜோ.ஸ்டாலின், செ.சல்மான்
படம்: ஆர்.எம்.முத்துராஜ்