Published:Updated:

ஜி.எஸ்.டி-யால் எவையெல்லாம் மாறும்?

ஜி.எஸ்.டி-யால் எவையெல்லாம் மாறும்?
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எஸ்.டி-யால் எவையெல்லாம் மாறும்?

ஜி.எஸ்.டி-யால் எவையெல்லாம் மாறும்?

ஜி.எஸ்.டி-யால் எவையெல்லாம் மாறும்?

ஜி.எஸ்.டி-யால் எவையெல்லாம் மாறும்?

Published:Updated:
ஜி.எஸ்.டி-யால் எவையெல்லாம் மாறும்?
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எஸ்.டி-யால் எவையெல்லாம் மாறும்?

‘மனைவியைக்கூட புரிந்துகொள்ளலாம்...ஜி.எஸ்.டி- யைப் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று கிண்டலாகச் சொல்கிறார்கள் பலரும். இந்திய வரலாற்றின் மிகப்பெரிய திருப்பமாக இதைச் சொல்கிறது மத்திய அரசு. எனவே, நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கூட்டி ஜி.எஸ்.டி அறிமுக விழாவை நடத்தியிருக்கிறது.

எதற்கு ஜி.எஸ்.டி?

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே விலை என்ற நிலை இந்தியா முழுக்க வரவும்... வரி மேல் வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்கவும்... வரி தொடர்பாக மத்திய அரசும், பல மாநில அரசுகளும் வைத்திருக்கும் பல சட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே சட்டமாகக் கொண்டு வரவும்... சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி பொய்க் கணக்குக் காட்டி வரி செலுத்தாமல் இருப்பவர்களை வரி செலுத்த வைக்கவும்...  ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டதில் இருந்து, எங்கெல்லாம் சப்ளையாகி, யார் இறுதியாக வாடிக்கையாளரிடம் விற்றார் என்பது வரையான முழு வணிகப் பயணத்தையும் (Audit Trial) கணினிமயமாக்கவும் ஜி.எஸ்.டி தேவை  என்கிறது மத்திய அரசு.

ஜி.எஸ்.டி-யால் எவையெல்லாம் மாறும்?

எவற்றுக்குப் பதில் ஜி.எஸ்.டி?

அரசின் வரி வருவாயை நேரடி வரி, மறைமுக வரி என்று இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். மக்களே நேராக அரசுக்குச் செலுத்தும் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள். ஜி.எஸ்.டி-யால் இவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. மறைமுக வரிகள்தான் காணாமல் போகும். கலால் வரிகள் (சி.வி.டி, எஸ்.ஏ.டி, கூடுதல் கலால் வரிகள், மத்திய விற்பனை வரி, கலால் வரிகளுக்கான செஸ்கள்), சேவை வரி, ஸ்வச் பாரத் செஸ், க்ருஷி கல்யாண் செஸ், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ், செகண்டரி அண்ட் ஹையர் எஜுகேஷன் செஸ், சர்சார்ஜ் போன்ற மத்திய அரசின் மறைமுக வரிகள், ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டால் காணாமல் போகும். சுங்க வரி மட்டும் வழக்கம் போல வசூலிக்கப்படும். மாநில அரசின் மறைமுக வரிகளான கொள்முதல் வரி, மாநில வாட் வரி, பொழுதுபோக்கு வரி, சொகுசு வரி, நுழைவு வரி, விளம்பரங்களின் மீதான வரி, லாட்டரிகள் - சூதாட்டங்கள் மீதான வரிகள் மற்றும் மாநில செஸ்கள், மாநில சர்சார்ஜ்கள் காணாமல் போகும்.

ஜி.எஸ்.டி நடைமுறை என்ன?

இதுவரை பல பெயர்களில் வசூலிக்கப்பட்டு வந்த வரிகளுக்குப் பதிலாக இனி ஜி.எஸ்.டி என்கிற ஒற்றை வரி மட்டுமே வசூலிக்கப்படும். அவ்வளவுதான். இந்த ஜி.எஸ்.டி வரியில் ஒரே ஒரு சிறப்பு என்னவென்றால், முதலில் பொருளை வாங்குபவர், ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாகச் செலுத்துவார். அதற்கடுத்ததாக அந்தப் பொருளை வாங்குபவர், தான் செலுத்த வேண்டிய வரித் தொகையில், முதலாமவர் செலுத்திய வரித்தொகையை வரவாக வைத்துக்கொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதாரணமாக, ரவி ஒரு பொருளுக்கு வரியாக 10 ரூபாய் செலுத்துகிறார். பின் ரவி தன் லாபத்தை வைத்து முருகனிடம் விற்கும்போது, முருகன், வரியாக 12 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். அப்போது ரவி செலுத்திய 10 ரூபாயை முருகன் தன் வரிக் கணக்கில் வரவு வைத்துக்கொண்டு, வெறும் 2 ரூபாயை மட்டும் வரியாகச் செலுத்தினால் போதும். இது ‘இன்புட் டாக்ஸ் க்ரெடிட்’ (Input Tax Credit) என்று சொல்லப்படுகிறது.

எப்படி ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும்?


வரி இல்லாதவை, 5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியவை, 12 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியவை, 18 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியவை, 28 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியவை என ஐந்து வரி வரம்புகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் கடலை மிட்டாய்க்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். கோவில்பட்டியில் செய்த கடலை மிட்டாயை, சென்னையில் விற்பனை செய்தால் அதற்கு     சி.ஜி.எஸ்.டி - 9% மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி - 9% என்று 18% செலுத்த வேண்டும். (இது ‘இன்ட்ரா ஸ்டேட்’ என்றழைக்கப்படும் ஒரே மாநிலத்துக்குள் நடக்கும் வணிகப் பரிமாற்றம்). கொஞ்சம் தள்ளிப் போய் திருப்பதியில் விற்பனை செய்தால், ஐ.ஜி.எஸ்.டி வரியாக 18% செலுத்த வேண்டும். இது, இரு மாநிலங்களுக்கிடையே நடக்கும் பரிவர்த்தனை.

ஜி.எஸ்.டி-க்கு முன், ஒரு பொருளின் விற்பனையின்போது மட்டுமே வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி ஒரு பொருளின் ஒவ்வொரு சப்ளையின் போதும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும். எந்த மாநிலத்தில் விற்கப்படுகிறதோ, அந்த மாநிலத்தில்தான் மாநில ஜி.எஸ்.டி (எஸ்.ஜி.எஸ்.டி) வசூலிக்கப்படும்.

சி.ஜி.எஸ்.டி வழக்கம் போல் மத்திய அரசுக்குச் சென்றுவிடும். ஒரு பொருளை வாங்குபவர் எந்த மாநிலத்தில் இருக்கிறாரோ, அந்த மாநிலத்தில்தான் மாநில ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும். ஒரு பொருளை வாங்குகிறவர்தான், அந்தப் பொருளின் விலைக்கு வரியைச் செலுத்துவார். பொருளை விற்கிறவர்தான் வரியை வசூலித்து அரசிடம் கட்டுவார்.

எவற்றுக்கு ஜி.எஸ்.டி இல்லை?


மது பானங்கள், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் (ஏ.டி.எஃப்), இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்ற ஆறு பொருள்களுக்கும் பழைய நடைமுறையில் உள்ள வரிகளே தொடரும். புகையிலைப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியோடு கூடுதலாக கலால் வரி மற்றும் செஸ்கள் விதிக்கப்படும். இதுவரை மாநில அரசுகளும், மத்திய அரசும் தொழில்துறையினை மேம்படுத்த சில வரிச் சலுகைகளைக் கொடுத்திருக்கும். இனி அந்த வரிச் சலுகைகள் எல்லாம் செல்லுபடியாகாது.

- மு.சா.கெளதமன், த.கருப்பையா, ஜி.கார்த்திகேயன்
படம்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism