உலகமே ‘நெட்டிசம்’ என்ற இணையவழிச் சமூக வலைதளச் செயல்பாடுகளுக்குள் அடங்கிக் கிடக்கிறது என்பது வெற்று மாயை. இன்றைய இளைய தலைமுறையின் மனதையும் மூளையையும் ‘நெகட்டிவிசம்’ என்ற எதிர்ச் செயல்பாடுகளை நோக்கி சமூக வலைதளங்கள் துரத்திக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பொட்டில் அடிக்கும் உண்மை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கான எதிர்வினைகளும், சோஷியல் மீடியா என்ற இணையத்தின் பயங்கரவாதக் கிடங்குகளில் தினம் தினம் வெளிவரும் பகீர் கருத்துகளும் இதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.

‘ஜல்லிக்கட்டு புகழ்’ ஜூலியானா, இன்று ‘பிக் பாஸ்’ ஜூலியானாவாகக் காட்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளதும் அதில் ஒரு துளிதான். பட்டாசுக் கிடங்குக்குள் தவறுதலாக மாட்டிக் கொண்ட கரப்பான் பூச்சியின் நிலைதான் ஜூலியானாவுக்கும். ஜல்லிக்கட்டுப் போராட்டக் களத்தில், மீசை முளைத்த போராளியாக அவரை சித்திரித்த அதே சோஷியல் மீடியா பக்கங்கள்தான், இன்று ஓடவும் ஒளியவும் வழியின்றி ஜூலியானாவைக் குற்றவாளியைப் போல சித்திரித்து வருகின்றன. பாவம்... இது எதுவும் தெரியாமல், பிக் பாஸ் வீட்டுக்குள் ‘சோறுண்ணே சோறு’ என்று வலிந்து திணிக்கப்பட்டது போன்ற வெகுளித்தனத்துடன் சுற்றிக்கொண்டிருக்கிறார் ஜூலி.

இங்கு பிரச்னை, ஜூலியைப் பற்றியது அல்ல. உண்மையில், அந்தப் பெண் இயல்பிலேயே கள்ளமில்லாதவராக இருக்கலாம். ஆனால், முதன்முதலில் புகழ் மழையில் நனைபவர்களுக்கு ஏற்படும் அந்த குளிர்விட்ட தன்மைக்குள் ஜூலி சிக்கிக் கொண்டதுதான், இன்று அவர் மூலைக்கு மூலை வறுபடுவதற்கும் காரணம். பிக் பாஸ், ஜூலி, சமூக வலைதளம் என்பது பற்றிய விரிவான முன்வைப்புகளுக்கு முன்பாக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடிநாதமான ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சி பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

1999-ம் ஆண்டு, ஜான் டி மோல் என்கிற தயாரிப்பாளருக்குள் உதித்த ‘சிறப்பான’ சிந்தனைதான், இந்த ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சி. நெதர்லாந்து டி.வி சேனல் ஒன்றில் வெளியான தொடர் இது. அன்றாட வாழ்வில் மனிதர்களுக்கிடையேயான புரிந்துணர்வினையும், உணர்ச்சி மாற்றங்களையும் கண்ட அவர், ‘இவர்களை ஆதிமனித வாழ்க்கை முறையைப் போல, ஒரே இடத்தில் அடைத்து வைத்தால் என்னவெல்லாம் நடக்கலாம்’ என்று யோசித்ததன் விளைவே இந்த நிகழ்ச்சி. கிட்டத்தட்ட சிறைச்சாலையை விடக் கொடுமையான கான்செப்ட் இது. வெளியுலகத் தொடர்பே இல்லாமல், ஒரே இடத்தில் அடைந்து கிடந்து, ஒருவரின் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டால் என்னவாகும்? முதலில் மூளை குழம்பும், பிறகு எரிச்சல் வரும்... போகப் போகப் பைத்தியம் பிடிக்காத குறைதான்.

ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்தெல்லாம் நடக்கிற காரியமில்லை இது. இரண்டு நாள்கள் நடிக்கலாம், மூன்று நாள்கள் நடிக்கலாம். நான்காவது நாள் புத்தியும், மனமும் தங்களுடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்துவிடும். கோபம், எரிச்சல், காதல், ஈகோ என எல்லா உணர்வுகளும் இந்தக் குழுவுக்குள் ஏற்படத் தொடங்கும். ஆனால், மூன்று கோடி ரூபாய்க்கும் மேலான பரிசுத்தொகை என்கிற ஆசை பெரும்பாலான பங்கேற்பாளர்களைக் கட்டிப்போட்டுவிடும். என்னதான் தங்கக் கூண்டில் அடைத்துவைத்துப் பால்சோறு கொடுத்தாலும், சிறை சிறைதானே. தனிமைப்படுத்துதல்... அதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியும் கூட. ஹாலாந்து, அமெரிக்கா என்று பல்வேறு நாடுகளின் சேனல்களிலும், இந்திய சேனல்களிலும் பல்வேறு பெயர்களில் சக்கைப் போடு போட்டுள்ளது இந்த நிகழ்ச்சி. இது ஒரு வியாபாரச் சந்தை. மக்களை மயக்கி மயக்கிப் பார்க்க வைப்பது... அதையே பார்க்க வைப்பது... மற்றவற்றை மறக்க வைப்பது.

இந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தமிழில் காட்சிப்படுத்தும் உரிமையைப் பெற்றுக் களத்தில் இறக்கியுள்ளது விஜய் டி.வி. ‘15 செலிபிரிட்டி போட்டியாளர்கள் பங்கேற்பார்கள்’ என்ற நிலையில், ஜல்லிக்கட்டு ஜூலியானா இதற்குள் எப்படி நுழைந்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு மணி நேர நிகழ்ச்சியிலும் சரி, ஓரிரு நிமிட ப்ரோமோவிலும் சரி, ஜூலியின் பங்கு மிக அதிகம். அவர் சிரிப்பது, அழுவது, டான்ஸ் ஆடுவது என்று போட்டுத் தாக்குகிறார்கள் சேனல் தரப்பினர்.

இன்னொரு பக்கம், “ஜல்லிக்கட்டு என்றால் அதற்காக மட்டும்தான் போராடணும்” என்று அவரை கார்னர் செய்ய முயல்கிறார்கள் சக போட்டியாளர்கள். இவர்கள், சினிமா மற்றும் அரசியல் பின்னணி கொண்டவர்கள். ‘நாமெல்லாம் ஊரறிந்த நட்சத்திரங்கள். நமக்கு நடுவில் இந்தப் பெண்ணா?’ என்ற பொறாமை உணர்வும் இதற்குள் இருக்கிறதா எனத் தெரியவில்லை. சக போட்டி யாளர்களில், நிறையப் பேருக்கு ஜூலியைப் பிடிக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இவை அனைத்தும் பணம் சம்பந்தப்பட்டது. சமூகம் கண்டிக்க வேண்டியது இந்த நடைமுறைகளைத்தான். ஆனால், இதற்கு எதிர்வினை என்ற பெயரால் ஒரு கூட்டமே பெண் இனத்தைக் கொச்சைப்படுத்திவருகிறது.

ஏற்கெனவே, சமூக வலைதளங்களில் பெண்கள் சிக்கிச் சேதாரமாகிக் கொண்டிருக்கும் நிலையில், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கிறது ஜூலி மீதான இந்தத் தாக்குதல்.

பெண்களின் அங்கங்களை வர்ணித்தல், கேரக்டர் அசாசினேஷன் என்னும் கீழ்நிலைப் படுத்துதல், ஆபாசப் புகைப்படங்கள் என்றெல்லாம் எந்தளவுக்கு இறங்கி அடிக்க முடியுமோ, அந்தளவுக்குப் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இணையத் தீவிரவாதிகள், இப்படி ஒரு நல்ல சான்ஸ் கிடைத்தால் விட்டுவிடுவார்களா என்ன? அதுதான் மீம்ஸ், வீடியோக்கள், ஆபாச அர்ச்சனைகள் என ஜூலியின் மீதான தாக்குதல்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கால்வாசி பேரின் மனநிலை, ‘இந்தப் பொண்ணுக்கெல்லாம் சான்ஸ் கிடைச்சுருக்கே... நம்மால பாப்புலர் ஆக முடியலையே’ என்கிற மீடியா என்ட்ரி மீதான பசியாகவே இருக்கிறது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ஜூலி அவராகவே வந்து, ‘‘வாங்க... நான் போராடுறேன். என்னை வாழ்த்துங்க ஃப்ரெண்ட்ஸ்” என்று சமூக வலைதளங்களில் கெஞ்சிக் கூத்தாடவில்லை. ‘வீரத்தமிழச்சி’ என்று பெயரிடச் சொல்லவில்லை. அதற்கே அந்தப் பெண்ணைச் சாகடித்து போஸ்டரெல்லாம் ஒட்டியாயிற்று. அதிலும் துளிகூட அந்தப் பெண்ணுக்குச் சம்பந்தமில்லை. ஜூலியானாவுக்கு எதிர்பாராமல் கிடைத்த அந்த சோஷியல் மீடியா புகழைப் பயன்படுத்திக்கொள்ள, இப்போது சரியாக வகுக்கப்பட்ட சக்கர வியூகம் தான், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் அவரையும் ஒருவராக்கியது. அவரது உச்சபட்ச அவசர புத்தியாலும், மனிதர்களைத் தரம் பிரித்துப் பார்க்கத் தெரியாத வெகுளித் தன்மையாலும், ‘அதெப்படி ஒரு பெண் இவ்வளவு பிரபலமாகலாம்’ என்கிற சிலரின் கீழ்த்தரமான சிந்தனைகளாலும், சோஷியல் மீடியா, ஜூலியின் எதிர்பாராத புகழைப் பிய்த்துத் தின்றுகொண்டிருக்கிறது.

போகப் போக இந்த நிலை மேலும் மோசமடையலாம். நடிப்போ, உண்மையோ, ஒருவரை அசிங்கப்படுத்த நடத்தையைக் கேவலப்படுத்தும் வீடியோக்களும், மீம்களும் ஜூலியை நோக்கி விரிவடையலாம். இந்த எதிர்மறை பப்ளிசிட்டி, பிரிட்டன் டி.வி-யில் ஷில்பா ஷெட்டி மீது நிகழ்த்தப்பட்ட இனவெறித் தாக்குதல் போல எக்கச்சக்க ரேட்டிங் தரலாம். இதற்காகவே ஜூலியைக் கடைசிவரை நிகழ்ச்சிக்குள் வைத்திருந்து, மற்ற போட்டியாளர்களால் அவரைத் தனிமைப்படுத்த வைத்து, அவரது அந்தரங்கங்களைப் படம்பிடித்துக் காட்டி, தமிழக மக்களின் வாக்குகளை மொத்தமாக ஜூலியின் மீது பொழிய வைத்து அவரையே வெற்றியாளராக அறிவிக்கலாம். ஒருவேளை அப்படி நடந்தால், ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய ஒரு விவரம் தெரியாத பெண்ணை அவமானப்படுத்திய திருப்தியும், அதே நேரத்தில் அவரையே வெற்றியாளராக்கி கண்ணீர் மழையில் காசு மழையைக் கொட்டச் செய்யும் தந்திரமும் ஒரு சேரக் கிடைக்கலாம். அது இனி சேனல் கையிலும், சமூக வலைதள போராளிகள் கையிலும்தான் இருக்கிறது.

உணர்வுகளைக் கடைபரப்பும் செயலை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி கையிலெடுத்துள்ளது. அதைவிட உணர்வுகளைப் பந்தாடும் செயலைச் சமூக வலைதளங்கள் செய்யப்போகின்றன. தூக்கிக் கொண்டாடுதலும், தூக்கிப் போட்டு மிதித்தலும் ஒருசேர இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெண்ணுடலை மட்டுமே பூஜிக்கும் இந்தச் சமூகத்தில், ஜூலிகளின் நிலை இனி இதுதான்!

- பா.விஜயலட்சுமி