‘‘கார்ப்பரேட்களின் லாப வேட்டையின்முன் மனித சமூகம் மட்டுமல்ல... ஒட்டுமொத்த இயற்கையும், அதன் பல்லுயிர்ச் சூழலின் எதிர்காலமும் சிதைந்து வருகிறது. அடிப்படை மனித அறம், விழுமியங்கள் என்பவற்றுக்கெல்லாம் என்னதான் பொருள்? எளிமையான இந்தக் கேள்வியை நீங்கள் அடுத்த முறை மொறுமொறுப்பான கிட் கேட் சாக்லெட்டைக் கடிக்கும்போது கேளுங்கள். உங்கள் கடைவாய்ப் பற்களின் இடையில் நொறுங்கும் கிட்கேட் சாக்லெட்டின் ‘க்ரஞ்சி’ சப்தங்களுக்கிடையே மெல்லியதாய்க் கேட்கும் உராங்குட்டான் குரங்குகளின் மரண ஓலங்கள் ஒருவேளை பதில் சொல்லலாம்.” - இப்படி நெற்றிப் போட்டில் அடிப்பது போலக் கேட்கும் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

அரிசி, சோறு, சாம்பார், வத்தக்குழம்பு, வடை, பாயசம், முறுக்கு, சேவு எனப் பேசப்பட்டு வந்த சமூகத்தில் பிட்சா, பர்கர், கோக், பெப்ஸி, நூடுல்ஸ், நெஸ்லே, கே.எஃப்.சி, லேஸ், குர்குரே, சீட்டோஸ், கிண்டர் ஜாய், சீஸ் பால் போன்ற வார்த்தைகள் மிகமிகச் சாதாரணமாகிவிட்டன. இவை கார்ப்பரேட்களின் வியாபாரத் தந்திரங்களால் புற்றீசல் மாதிரி முளைத்தவைதான். ஆனால், அது மட்டும்தானா? இல்லை... உயர்தர வர்க்கமும் மத்தியத் தர வர்க்கமும் இந்த உணவுகளுக்குப் படிப்படியாக அடிமையாகிவிட்டதைச் சுட்டிக் காட்டுகின்றன இந்தக் கட்டுரைகள். ‘இவர்களின் வாயும் மூளையும் மட்டுமல்ல, வயிறும் கூட மேற்கத்திய அடிமைத்தனத்துக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக் கிறது’ என்கிறது இந்தப் புத்தகம்.

அனைவரையும் ஒரே மாதிரி உண்ண வைப்பதே வியாபாரத் தந்திரம்தான். ‘தேசங்களின் எல்லைகள், மக்களின் கலாசாரங்கள், பிராந்திய அளவிலான விவசாயத்தின் தன்மை, வெவ்வேறு நாடுகளின் மாறுபட்ட சீதோஷ்ண நிலை என்கிற வேறுபாடுகளை அழித்து, முதலாளிகளின் லாபத்துக்காக ஒரே ருசி, ஒரே உணவு, ஒரே பண்பாடு என்பவை படையெடுப்பு போல நடந்து வருகின்றன. அவ்வகையில் நமது பண்பாடு மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூட இவர்களைப் பொறுத்தவரைக் கழிவறைக் காகிதம்தான்’ என்ற வார்த்தைகள், நாம் சாப்பிடும் உணவின் மணத்தை அல்ல... நிஜ துர்நாற்றத்தை நினைவுபடுத்துகின்றன.

என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் சாப்பிடுகிறோம். ‘விலை அதிகமாய் இருந்தால் உயர்வானது, பாக்கெட்டில் அடைத்துக் கொடுத்தால் சுத்தமானது, விளம்பரம் செய்தால் அதிகம் பேரால் சாப்பிடப்படுவது’ என நினைக்கிறோம். அவை அனைத்துமே தவறு எனக் கண்டிக்கின்றன இந்தக் கட்டுரைகள்.

சாப்பிடும் முன் நினைவுக்கு வர வேண்டிய புத்தகம்.

பன்றித் தீனி
- தொப்பை வயிறு
சப்பை மூளை
குப்பை உணவு

கீழைக்காற்று,
10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை, சென்னை-2
தொடர்புக்கு: 044 - 28412367

விலை: ரூ.60/-

- புத்தகன்