இந்திய - சீன எல்லையில் இருக்கும் டோகா லா என்ற பகுதியை மையமாக வைத்து எழுந்துள்ள பிரச்னை, சீனா - பூடான் - இந்தியா என முப்பரிமாண மோதலாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியக் கண்டத்தில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் சக்திமிக்க நாடாக தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் சீனா தீவிரமாகக் காய்நகர்த்தி வருகிறது. இந்த நிலையில், சமீப காலமாக சீனாவுக்கு இதில் பலத்த போட்டியை இந்தியா கொடுத்துவருகிறது. இது, சீனாவுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இப்படியான சூழலில்தான், இந்தியா - பூடான் - சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள திபெத் ஆகிய மூன்று நாடுகளின் எல்லை முச்சந்திப்பில் உள்ள டோகா லா என்ற பகுதியை மையமாக வைத்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய மோதல் வெடித்துள்ளது. டோகா லா அருகே லால்டன் என்ற இடத்தில், 2012-ம் ஆண்டு இந்திய ராணுவம் இரண்டு பதுங்கு குழிகளை அமைத்தது. இந்நிலையில், ‘‘டோகா லா பகுதி எங்களுக்குச் சொந்தமானது. இதில் இந்தியாவுக்கோ பூடானுக்கோ உரிமை இல்லை. அந்த இரண்டு பதுங்கு குழிகளையும் அகற்ற வேண்டும்’’ என்று கடந்த ஜூன் 1-ம் தேதி சீன ராணுவம் கூறியது. அதை ஏற்க மறுத்த இந்திய ராணுவம், அந்தப் பகுதியில் ரோந்துப் பணியையும் உஷார்படுத்தியது.

ஜூன் 6-ம் தேதி இரவு இந்தியப் பகுதிக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினர், புல்டோசர்கள் மூலம் அந்த இரண்டு பதுங்கு குழிகளையும் அழித்தனர். மேலும், டோகா லா பகுதியை ஒட்டிய பூடான் நாட்டு எல்லையில் சாலை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதற்கு பூடான் எதிர்ப்பு தெரிவித்தது. பூடானின் நட்பு நாடான இந்தியா இதில் தலையிட்டது. இதையடுத்து, மேற்கொண்டு எந்தப் பணிகளையும் செய்ய விடாமல் சீன ராணுவத்தை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்து, மோதலாக மாறியது. 8-ம் தேதி, இந்திய ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். இரு தரப்பு வீரர்களும் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டுக் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தையடுத்து இருதரப்பு ராணுவமும் எல்லையில் கூடுதல் வீரர்களைக் குவிக்கத் தொடங்கின. தற்போது இரு தரப்பிலும் தலா 3,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1962-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே நடந்த போருக்குப் பிறகு, இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே நீண்ட நாள்களாக மோதல் போக்கு நிலவுவது இதுவே முதன்முறை. ‘‘இந்தியா - பூடான் எல்லையில் நடைபெறும் செயல்களைக் கண்காணிப்பதற்காகத்தான், டோகா லா பகுதிக்குச் சீனா சொந்தம் கொண்டாட முயல்கிறது. டோகா லா, நம் சிலிகுரி பகுதிக்கு மிக அருகில் உள்ளது. குறுகலான இந்த சிலிகுரி வழியாகவே, நம் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் மைய நிலத்தோடு தொடர்பில் இருக்கின்றன. இந்தத் தொடர்பை அறுக்க சீனா எதிர்காலத்தில் முயற்சி செய்யக்கூடும்’’ எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போதைய மோதலைத் தொடர்ந்து, “1962-ல் நடந்த போரிலிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும்” என்று சீனா கூற, “1962-ல் நிலவிய சூழல் வேறு, 2017-ன் சூழல் வேறு. எனவே, இந்தியாவைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி பதிலடி கொடுத்துள்ளார்.

டோகா லா பகுதியில் இந்தியா - சீன ராணுவங்களுக்கு இடையே மோதல் உச்சத்தில் இருந்த நேரம்... அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அமெரிக்காவுக்குப் போட்டியான வல்லரசாக தன்னை நினைத்துக்கொள்ளும் சீனாவுக்கு, இந்திய - அமெரிக்க உறவு எப்போதும் நெருடலாகவே இருக்கிறது. சமீபகாலமாக பாகிஸ்தானுடன் இணைந்து சீனா மேற்கொண்டு வரும் பொருளாதாரப் பாதைத் திட்டம், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளும் ‘One Belt One Road’ திட்டம் என்று எல்லாவற்றையும் இந்தியா எதிர்க்கவோ, புறக்கணிக்கவோ செய்கிறது. இந்த எல்லாக் கோபமும் எல்லையில் வெளிப்படுவதாகச் சொல்கிறார்கள், இந்திய ராணுவ அதிகாரிகள்.

அதேசமயம், ‘இந்தியாவில் ஜி.எஸ்.டி-க்கு எழுந்துள்ள எதிர்ப்பு, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை யினர் மீதான தாக்குதல்கள் பற்றிய சர்ச்சை போன்றவற்றால் மத்திய அரசு மீது எழுந்துள்ள அதிருப்தியை மறைப்பதற்காக எல்லைப் பிரச்னையைப் பெரிதுபடுத்து கிறார்கள்’ என முன்வைக்கப்படும் வாதத்தையும் புறக்கணிக்க முடியவில்லை.

இன்னும் சில தினங்களில் ஹம்பர்க் நகரில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்கிறார்கள். அங்கு இருவரும் நேருக்கு நேர் பேசினால், இந்தப் பதற்றம் தணியக்கூடும்.

- பா.முகிலன்