‘‘ஜி.எஸ்.டி அறிமுகம் ஆகும் இந்த இரவில் ஒரு புதிய இந்தியா பிறந்திருக்கிறது’’ என்றார் பிரதமர் மோடி. ‘‘இது ஒரு வரலாற்று சாதனை. இது அமலானால் அரசுக்கு நிறைய வரி வருமானம் வரும். ஏழைகள் மற்றும் நடுத்தரக் குடும்ப மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு நிறைய நிதியைச் செலவிட முடியும்’’ என்றது அவருடைய அரசு. ஆனால், இந்த வரி வருமானம் எங்கிருந்து வரப் போகிறது என்பதைத்தான் சொல்லவில்லை. கிட்டத்தட்ட ஏழைகள் மற்றும் மிடில் கிளாஸ் மக்களின் பாக்கெட்டில் இருந்துதான் இந்தக் கூடுதல் வருமானத்தை அபகரிக்கப் போகிறார்கள். ஆனால், இதெல்லாம் இந்த மக்களுக்கே திரும்பி வருமா? அது நிச்சயமில்லை!

எந்தப் பெயர் சொல்லி எத்தனை இடங்களில் வசூல் செய்தாலும், ‘வரி’ என்பது வரிதான். ஒரு சராசரி மிடில் கிளாஸ் குடிமகனுக்கு, அதிகாலை தூங்கி எழும்போதே ஜி.எஸ்.டி-யின் சுமை தெரிய ஆரம்பித்துவிடும். பல் தேய்க்கும்போது டூத் பிரஷ்ஷை அழுத்தியெல்லாம் இனி கடித்துவிடக் கூடாது. பிரஷ் விலை ஏறிவிட்டது. அடிக்கடி புதிது வாங்க முடியாது. ஹாயாக ஷாம்பு போட்டுக் குளிப்பது எல்லாம் இனி ஆடம்பரம். ஷாம்புக்கு ஜி.எஸ்.டி-யில் 28 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. நிம்மதியாகவும் நிறைவாகவும் காலை உணவு சாப்பிடலாம் என்று நினைத்தால், இனி பட்ஜெட் சுடும். உணவுப்பொருள்களுக்கு வரி இல்லை என்றாலும், பேக் செய்யப்பட்டு விற்கப்படும் எந்த உணவுக்கும் ஐந்து சதவிகிதம் வரி இனி உண்டு. துவரம் பருப்பு, உளுந்து, கோதுமை மாவு, இட்லி மாவு என எல்லாமே பாக்கெட்டுகளில்தான் இப்போது விற்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு சட்டப்படி, பாக்கெட்டில் அடைக்காமல் உணவுப் பொருள்களை விற்பது குற்றம். எனவே, எப்படி இருந்தாலும், ஜி.எஸ்.டி வரி கட்டாமல் எதையும் வாங்க முடியாது. காஸ் சிலிண்டருக்கும் வரியை உயர்த்தி, அதே நேரத்தில் சாமர்த்தியமாக மானியத்தையும் குறைத்து விளையாடி இருக்கிறது அரசு. எனவே, சிலிண்டர் விலையும் 30 ரூபாய்க்கு மேல் அதிகமாகும். அதனால், அளவாக சாப்பிடுவது பர்ஸுக்கு நல்லது. குறிப்பாக நெய் தோசை, நெய் பொங்கல் என்றெல்லாம் ஆசைப்படுவது ஆபத்தானது. ஐந்து சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது நெய் மீதான வரி. ஏதோ, உங்கள் கொழுப்பைக் குறைக்க அரசால் முடிந்த சேவை!

இவற்றையெல்லாம் நினைத்து டென்ஷன் எகிறி, நிறைய தண்ணீரையும் குடிக்கக்கூடாது. தண்ணீர் கேன்களுக்கு முதல்முறையாக வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, 20 லிட்டர் தண்ணீர் கேன் சுமார் 10 ரூபாய் வரை விலை ஏறக்கூடும்.

பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு நோட்டுகள் வாங்கித் தர வேண்டுமானால், இனி கூடுதல் வரி செலுத்த வேண்டும். அவர்களின் படிப்புத் தேவைக்காக கம்ப்யூட்டர், லேப்டாப் வாங்குவதும் இனி காஸ்ட்லி ஆகிவிடும். ஆறு சதவிகிதம் என்று இருந்த வரியை 18 சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறார்கள். ‘டிஜிட்டல் இந்தியா’வுக்குள் நுழைவதென்றால் சும்மாவா?

ஸ்கூல் அட்மிஷன் நேரம், தீபாவளி, பொங்கல் என டிரஸ் எடுப்பதில் இனி குடும்பத் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 1,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் துணி வகைகளுக்கு 12 சதவிகிதம் வரி. ரெடிமேட் ஆடைகளும் இரண்டு முதல் மூன்று சதவிகிதம் விலை கூடும். இதர துணிகளுக்கும் ஐந்து முதல் 18 சதவிகிதம் வரை வரி விகிதம் உள்ளது.

பிள்ளைகள் ஆசைப்படுகிறார்களே என்று ஒரு நாள் தியேட்டருக்குப் போய்விட்டு, ஹோட்டலுக்குச் சாப்பிடக் கூட்டிச் சென்றால், அதைவிட ஆபத்தான விஷயம் வேறு எதுவுமில்லை. ஐந்து சதவிகிதத்தில் ஆரம்பித்து 28 சதவிகிதம் வரை ஹோட்டல் உணவுகளுக்கு வரி விதித்திருக்கிறார்கள். சினிமா பார்ப்பதை எல்லாம் ஆடம்பரம் என்ற பிரிவில் சேர்த்து, 28 சதவிகிதம் வரி போட்டிருக்கிறார்கள். அது போதாது என்று, தமிழக அரசு தனியாக கேளிக்கை வரி என 30 சதவிகிதம் விதித்து இருக்கிறது.

ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி என்று சொகுசு வாழ்க்கைக்கு மிடில் கிளாஸ் பழகிவிடக்கூடாது என்ற அக்கறையோடு, இவற்றின் மீதான வரிகளை உயர்த்தி இருக்கிறது அரசு. சரி, சிக்கனமாக இருந்து குடும்பத்தின் எதிர்காலத் தேவைக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம் என்றால், அதன் மீதான வரியும் 15 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக எகிறிவிட்டது. ‘எதுவுமே வேண்டாம், பிள்ளைகளுக்காக ஒரு வீடு வாங்குவோம்’ என முடிவெடுத்தால், அபார்ட்மென்ட்களுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி கட்ட வேண்டும்.

ஏழைகளும் மிடில் கிளாஸும் என்னதான் செய்வது? ‘‘மெர்சிடீஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஜாகுவார் மற்றும் ஆடி போன்ற சொகுசு கார்களை வாங்குங்கள்’’ என்று பரிந்துரைக்கிறது அரசு. ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்தபிறகு அதிகபட்சமாக ஒரு சொகுசு காரின் விலை 10 லட்ச ரூபாய் வரை குறைந்திருக்கிறது.

மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என்று ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி முறை அமலுக்கு வந்த பல நாடுகளிலும், இந்த வரி அறிமுகம் செய்யப்பட்ட உடனே விலைவாசி எகிறியது. பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்து, பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மக்கள் பல சிரமங்களை அனுபவித்தனர். பல நாடுகளில் ஜி.எஸ்.டி அமலானபோது ஏற்பட்ட விளைவுகளை இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு செய்தது. கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட ‘State Finances: A Study of Budgets of 2016-17’ என்ற அறிக்கையில் அந்த விஷயங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தது. ‘அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, மலேசியா, நியூசிலாந்து மற்றும் ரஷ்யா என எல்லா நாட்டு ஜி.எஸ்.டி முறையிலும் ஏராளமான பலவீனங்கள் இருந்தன. இதேபோன்ற பிரச்னைகள் இந்தியாவிலும் ஏற்படலாம். சிறிய வியாபாரிகள் பதிவு செய்யாமல் போகலாம். வியாபாரிகள் உண்மையான விற்பனையைக் காட்டாமல், கணக்கைக் குறைத்துக் காட்டலாம். வாடிக்கையாளர்களிடம் பிடித்தம் செய்த வரியை அரசுக்குச் செலுத்தாமல் போகலாம். அதைவிட முக்கியமாக, தவறான கணக்குக் காட்டி, கட்டிய வரியைத் திரும்ப வாங்க முயற்சி செய்யலாம். இந்த விஷயங்களில் வரித்துறையினர் கவனமாக இருக்க வேண்டும்’ என்கிறது அந்த அறிக்கை.

பாராட்டு மழையில் நனைந்திருக்கும் மோடி அரசுக்கு இவற்றையெல்லாம் கவனிக்க நேரமிருக்குமா என்று தெரியவில்லை. இந்தப் பாராட்டுகளில் மிக முக்கியமான ஒன்று, அமெரிக்காவில் கிடைத்தது. மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின்போது, வெள்ளை மாளிகையில் அவரை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘‘இந்தியாவின் 130 கோடி மக்களையும் ஒரே வரி விகிதத்தின்கீழ் கொண்டு வந்து விட்டீர்கள். இனிமேல் இந்திய மார்க்கெட்டில் நுழைவதற்கு எல்லா நிறுவனங்களுக்கும் சுலபமாக இருக்கும்’’ என்று பாராட்டினார்.

ஜி.எஸ்.டி யாருக்காக வந்திருக்கிறது என்பது ட்ரம்புக்குத் தெரிகிறது. நாம்தான் குழப்பத்தில் இருக்கிறோம்.

- தி.முருகன்

அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ், ஈ.ஜெ.நந்தகுமார்

வரி குறைந்தும் விலை மாறாதது ஏன்?

ஜி.எஸ்.டி அமலுக்கு வந்த பிறகு, விலை மாறியுள்ளதா என்று பார்த்தால், சில பொருள்களுக்கு வரி குறைந்துள்ளது; சில பொருள்களுக்கு வரி அதிகரித்துள்ளது. ஆனால், பல பொருள்களின் வாங்கும் விலையில் எந்த மாற்றமும் இல்லை; சில பொருள்களிலோ உடனடியாக இந்த மாற்றம் தெரிகிறது.

ஏன் பலவற்றின் விலை குறையவில்லை? விற்பனையாளர் ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் ஸ்டாக்கின் விலையில் மாற்றம் இருக்காது. உதாரணமாக, ரமேஷ் என்பவர் 100 கிராம் வெண்ணெயை ஜூன் 30-ம் தேதியன்று 44 ரூபாய்க்கு வாங்குகிறார். அதே அளவு வெண்ணையை ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்பு வாங்குகிறார். அப்போதும் 44 ரூபாய்தான். ஏற்கெனவே 14.5 சதவிகிதம் வாட் வரி விதிக்கப்பட்டு வந்த வெண்ணெய், ஜி.எஸ்.டி-யில் 12 சதவிகித வரிப் பிரிவில் உள்ளது. நியாயப்படி விலை குறைய வேண்டும். ஆனால், அந்தப் பொருள் ஜி.எஸ்.டி அமலாக்கத்துக்கு முன்பே வாங்கி ஸ்டாக் செய்யப்பட்ட பொருள். அதற்கான பழைய வரியைத்தான் விற்பனை செய்பவர் கட்டியிருப்பார். அதனால், இப்படிப்பட்ட பொருள்களின் விலையில் மாற்றம் இருக்காது.

ஆனால், ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு வாங்கி விற்கப்படும் பொருள்களின் விலையில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும். விலையேற்றம் ஹோட்டல் பில்லில் கண்டிப்பாகப் பிரதிபலிக்கும். ஏனெனில், உணவுகள் ஜூலை 1-ம் தேதிக்கு பின் தயாரிக்கப்பட்டவை. ஸ்டாக்காக இல்லாத பொருள்களின் விலையில் நேரடியாக ஜி.எஸ்.டி-யின் தாக்கம் இருக்கும். ஒரு மொத்த விற்பனயாளர், பொருள்களை வாங்கி ஸ்டாக் செய்த தேதி நுகர்வோருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஜூலை 1-ம் தேதிக்குப் பின் தயாரிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் ஜி.எஸ்.டியின் கீழ்தான் வரும். ஒருவேளை வரிக்கு மேல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரிந்தால் Anti Profiteering Committee-க்கு புகார் அளிக்கலாம்.

வரி குறைந்த பொருள்களின் விலை குறைய வில்லையே என்று மக்கள் யோசிக்க வேண்டாம். பழைய ஸ்டாக்குகள் தீர்ந்தால்தான் மக்களால் விலை குறைந்ததை உணர முடியும்.

- ஸ்ரீராம்

கசக்கும் கடலை மிட்டாய்!

தமிழகத்தின் பாரம்பர்ய தின்பண்டங்களில் கடலை மிட்டாய்க்குத் தனி இடம் உண்டு. எந்தப் பெட்டிக்கடையாக இருந்தாலும், அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள் கடலைமிட்டாய் இல்லாமல் இருக்காது. இனிப்புச்சுவைக்காக மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்காகவும் விரும்பிச் சாப்பிடக்கூடியது இது. பன்னாட்டு கம்பெனிகளின் மிட்டாய்களுக்கு மத்தியில், கடலை மிட்டாயின் மவுசு இன்றும் குறையவில்லை.

கடலை மிட்டாயின் அடையாளம், கோவில்பட்டி. அங்கு இதைக் குடிசைத் தொழிலாக ஏராளமானவர்கள் செய்துவருகின்றனர். அந்தத் தொழிலை நம்பியிருப்பவர்கள், ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து, கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் நலச் சங்கத்தின் செயலாளர் கண்ணனிடம் பேசினோம்.

“இது ஒரு கம்பெனித் தொழில் அல்ல. முழுக்க முழுக்க குடிசைத் தொழில்தான். நேரடியாக 1,200 பேரும், மறைமுகமாக 2,500 பேரும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சராசரியாக 10 டன் முதல் 15 டன் வரை கடலை மிட்டாய் தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது. ரூ.14 லட்சம் முதல் ரூ. 21 லட்சம் வரையிலான மதிப்புள்ள கடலை மிட்டாய், தினமும் கடைகளுக்கு விற்பனைக்குச் செல்கிறது. இதுவரை கடலை மிட்டாய்க்கு வரி ஏதும் இல்லை. இப்போது, 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளனர். இதனால், எங்கள் தொழில் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. இதை நம்பியுள்ள தொழிலாளர்களும், வியாபாரிகளும் பெரும் கவலையில் உள்ளனர்.

ஏற்கெனவே, நிலக்கடலை மற்றும் உருண்டை வெல்லத்தின் உற்பத்தி குறைவாக உள்ளது. பல சிரமங்களுக்கு இடையே தொழில் நடத்தி வருகிறோம். இந்தச் சூழலில், வரி விதித்தால் நாங்கள் என்ன செய்வது? இப்போது, ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.140- என விற்பனை செய்கிறோம். இதில், 18 சதவிகிதம் என்றால் ரூ. 25.20 வரியாகப் போய்விடும். விலை உயர்ந்த முந்திரி, பாதாம் பருப்புகளை வாங்கி சாப்பிட முடியாத சாமானிய மக்கள்தான், விலை மலிவான கடலை மிட்டாயை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

பர்கர், பீட்சாவுக்கு ஐந்து சதவிகிதம் வரி விதித்துவிட்டு, கடலை மிட்டாய்க்கு 18 சதவிகிதம் என்பது என்ன நியாயம்? எங்களுக்கு முன்பு போல முழுமையாக வரிவிலக்கு வேண்டும். இல்லையென்றால், நாங்கள் எல்லோரும் இந்தத் தொழிலை இழுத்து மூடிவிட்டுப் போய்விட வேண்டியதுதான்’’ என்றார்.

இனிப்பான கடலை மிட்டாயைத் தயாரிப்பவர்களின் வாழ்க்கை, இப்போது கசப்பை நோக்கி...

- இ.கார்த்திகேயன்

தகிக்கும் கந்தக பூமி!

தீபாவளிக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், சிவகாசி உள்பட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. கூடவே, ஆயிரக்கணக்கான தீப்பெட்டி தொழிற்சாலைகளின் கதவுகளும் சாத்தப்பட்டுள்ளன.

சீனப் பட்டாசுகளின் வரவால் அடிவாங்கிக்கொண்டிருக்கும் நிலையில், பட்டாசு உற்பத்தித் தொழிலுக்கு ஜி.எஸ்.டி-யில் 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழிலுக்கு ஐந்து முதல் பதினெட்டு சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பியிடம் பேசினோம். “ஏற்கெனவே கலால் வரி 12.5 சதவிகிதம், மாநில அரசின் வரி 14.5 சதவிகிதம் கட்டி வருவதால், அந்த வரிகளையும் சேவை வரியையும் சேர்த்து 28 சதவிகிதமாக ஜி.எஸ்.டி.யில் கொண்டு வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். நாட்டில் உள்ள 1,200 பட்டாசு ஆலைகளில், 50 பட்டாசு ஆலைகள்தான் கலால் வரி கட்டுகிறார்கள். மற்றவை அந்த வரம்புக்குள் வரவில்லை. மாநில அரசின் 14.5 சதவிகித வரியை மட்டுமே கட்டிவருகிறார்கள். அதுவே அதிகம் என்று சொல்லிவருகிறோம். இப்போது 28 சதவிகிதமாக வரியை உயர்த்துவதன் மூலம் பட்டாசுத் தொழிலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.

பட்டாசின் அடக்க விலையில் முப்பது சதவிகிதம் மட்டுமே மூலப்பொருள்கள், சேவைகளின் பங்கு உள்ளது. அதற்கு மட்டுமே வரி விதிக்க வேண்டும். அடக்க விலையில் மீதமுள்ள எழுபது சதவிகிதம் தொழிலாளர்களின் கூலி, போனஸ், கிராஜுவிட்டி, இ.எஸ்.ஐ போன்றவற்றுக்குச் சென்று விடுகிறது. எனவே, அவற்றுக்கு உள்ளீட்டு வரி விதிப்பது நியாயமில்லை” என்றார்.

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அலெக்சாண்டரிடம் பேசினோம். “இங்கே நூற்றுக்கு எண்பது உற்பத்தியகங்களில், பாதி அளவுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தியே தீப்பெட்டி தயாரிக்கிறோம். அதற்கு 18 சதவிகிதமாக வரியை உயர்த்தியுள்ளனர். முழுக்க முழுக்க இயந்திரங்கள் மூலம் தீப்பெட்டி தயாரிப்பவர்களுக்கு வரியைக் குறைத்து, எங்களுக்கு வரியை உயர்த்தியுள்ளனர். எங்களிடம்தான் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். வரியை உயர்த்தியிருப்பதால், அவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும். வரிக் கணக்கு பார்க்காமல், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கைக் கணக்கைப் பார்க்க வேண்டும்” என்றார் அவர்.

கந்தக பூமியில் ஜி.எஸ்.டி-க்கு எதிரான போராட்டம் பற்றி எரிகிறது.

- செ.சல்மான்