Published:Updated:

நடிகை பாவனா வழக்கு... சிக்கும் நட்சத்திரத் தம்பதி!

நடிகை பாவனா வழக்கு... சிக்கும் நட்சத்திரத் தம்பதி!
பிரீமியம் ஸ்டோரி
நடிகை பாவனா வழக்கு... சிக்கும் நட்சத்திரத் தம்பதி!

நடிகை பாவனா வழக்கு... சிக்கும் நட்சத்திரத் தம்பதி!

நடிகை பாவனா வழக்கு... சிக்கும் நட்சத்திரத் தம்பதி!

நடிகை பாவனா வழக்கு... சிக்கும் நட்சத்திரத் தம்பதி!

Published:Updated:
நடிகை பாவனா வழக்கு... சிக்கும் நட்சத்திரத் தம்பதி!
பிரீமியம் ஸ்டோரி
நடிகை பாவனா வழக்கு... சிக்கும் நட்சத்திரத் தம்பதி!

‘‘எங்களை மட்டும் கைது செய்தார்கள். இந்தக் குற்றத்துக்கு மூளையாக செயல்பட்ட பெரிய சுறாக்கள் இன்னும் வெளியில் சுதந்திரமாக இருக்கின்றன.’’ - நடிகை பாவனா வழக்கில் முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனி, கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது இப்படிக் கத்தினான். அதுமட்டுமில்லை... அவன் ஜாமீன் கேட்கவும் இல்லை. ‘‘வெளியில் வந்தால் பல்சர் சுனியைக் கொன்றுவிடுவார்கள்’’ என்றார், அவனுடைய வழக்கறிஞர். 

பாவனா வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், அவர் திரையில் நடித்த படங்களின் திரைக்கதைகளைவிட திகிலும் திருப்பங்களும் நிறைந்தவை. பாவனா கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, மலையாளத் திரை உலகின் முன்னணி நடிகர் திலீப், அவருடைய மனைவி காவ்யா மாதவன் உள்ளிட்ட சிலர் எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை உள்ளது.

நடிகை பாவனா வழக்கு... சிக்கும் நட்சத்திரத் தம்பதி!

தமிழ், மலையாளம், தெலுங்குத் திரையுலகின் குறிப்பிடத்தக்க நடிகை பாவனா. கடந்த பிப்ரவரி 17-ம் தேதி, கொச்சியில் பாவனா காரில் போய்க்கொண்டிருந்தபோது, டெம்போ வேன் ஒன்று கார் மீது மோதியது. அந்த டெம்போவில் இருந்து இறங்கிய ஒரு கும்பல், காரைக் கடத்தியது. பாவனாவின் காருக்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தது. அதை செல்போனிலும் வீடியோ எடுத்துவிட்டு, அந்தக் கும்பல் மறைந்தது. பாவனா சொன்ன அடையாளங்களை வைத்து ஆறு பேரை போலீஸ் கைது செய்தது. முக்கியக் குற்றவாளியான சுனில் என்கிற பல்சர் சுனி மட்டும் கடைசியாக நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது சிக்கினான்.

இந்த விவகாரம் பற்றி சினிமா வட்டாரத்தில் கிடைத்த தகவல்களைக் கேட்டு போலீஸாரே அதிர்ந்துபோனார்கள். அதைத் தொடர்ந்து போலீஸின் பார்வை நடிகர் திலீப் மற்றும் காவ்யா மாதவன் ஆகியோர் பக்கம் திரும்பியது. நடிகை மஞ்சு வாரியரைத் திருமணம் செய்திருந்தார், நடிகர் திலீப். மஞ்சுவுக்கு காவ்யா மாதவனும் பாவனாவும் நல்ல தோழிகளாக இருந்தனர். நடிகர் திலீப், பல சொத்துக்களை மஞ்சு வாரியர், காவ்யா மாதவன், பாவனா பெயர்களில் வாங்கிப்போட்டதாகத் தெரிகிறது. நான்கு பேரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தனர். இடையில் திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் காதல் ஏற்பட்டது. இதற்கிடையே காவ்யாவுக்கு வேறு ஒருவரோடு திருமணமானது. அதன்பிறகும் காதல் தொடர்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடிகை பாவனா வழக்கு... சிக்கும் நட்சத்திரத் தம்பதி!

இந்த விவகாரம் பாவனாவுக்குத் தெரிய வந்தது. உடனே, அதை மஞ்சு வாரியரிடம் சொல்லி எச்சரித்தார் பாவனா. திலீப் குடும்பத்தில் புகைச்சல் ஏற்பட்டது. அது, திலீப் - மஞ்சு வாரியர் விவாகரத்தில் முடிந்தது. காவ்யா மாதவனும் திலீப்பும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும், பாவனா மீது திலீப்புக்கு ஆத்திரம் இருந்தது. பாவனாவின் பெயரில் தாம் வாங்கிப் போட்ட சொத்துக்களைத் திருப்பிக் கேட்டார் திலீப். அதில் அவர்களுக்குள் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பட வாய்ப்புகளைத் தடுப்பது உட்பட பல தொந்தரவுகளைப் பாவனாவுக்கு திலீப் கொடுத்துள்ளார். இதுபற்றி, பல மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக பேட்டி கொடுத்தார் பாவனா. இந்தப் பின்னணியில்தான், பாவனாவுக்கு இப்படி ஒரு கொடூரம் நேர்ந்தது.

இதுபற்றி பல்சர் சுனி ஆரம்பத்தில் வாய் திறக்கவில்லை. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு, ‘‘என்னிடம் ஒன்றரை கோடி ரூபாய் கேட்டு பிளாக்மெயில் செய்கிறார்கள். இல்லாவிட்டால், பாவனா வழக்கில் சிக்க வைத்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்’’ என்று திலீப் பேட்டி கொடுத்தார். சிறையில் இருந்து பல்சர் சுனி ஒரு கடிதத்தை திலீப்புக்கு அனுப்பி வைத்தது தெரிந்தது. ‘பேசியபடி பணம் தராவிட்டால் எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுவேன்’ என்கிற தொனியில் அந்தக் கடிதம் இருந்தது.

இப்போது இந்த விவகாரத்தில் திலீப்புக்கு இருக்கும் தொடர்புகள் பற்றிய ஆதாரங்களைச் சேகரிப்பதில் போலீஸ் தீவிரம் காட்டுகிறது. எனவே, சிறையில் இருக்கும் ஒரு கைதி மூலம் சுனி கைக்கு செல்போன் கிடைக்குமாறு போலீஸ் ஏற்பாடு செய்தது. செல்போன் கிடைத்த ஆர்வத்தில், அவன் உடனடியாக இரண்டு நபர்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளான். அதில் ஒருவர் பெயர் நதிர்ஷா; மற்றொருவர் அப்புண்ணி. நதிர்ஷா இயக்குநர் மற்றும் நடிகர். திலீப்புக்கு நெருக்கமானவர். அப்புண்ணி, திலீப்பின் மேனேஜர்.

நடிகை பாவனா வழக்கு... சிக்கும் நட்சத்திரத் தம்பதி!

இவர்களையும், திலீப்பின் சகோதரர் அனூப்பையும் போலீஸ் பல மணி நேரம் விசாரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கொச்சியில் காவ்யா மாதவன் நடத்தும் பொட்டிக் ஷாப்பில் சோதனை நடந்தது. நடிகை பாவனாவை பல்சர் சுனி பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவின் மெமரி கார்டு அங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடந்தது. ‘‘இந்த வழக்கில் விரைவில் சில பேர் கைது செய்யப்படலாம்’’ என்று சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார், கேரள காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹ்ரா. 

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism