Published:Updated:

“தீர்த்துக்கட்ட நினைத்தே ரகசியமாகக் கைது செய்தது போலீஸ்!”

“தீர்த்துக்கட்ட நினைத்தே ரகசியமாகக் கைது செய்தது போலீஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
“தீர்த்துக்கட்ட நினைத்தே ரகசியமாகக் கைது செய்தது போலீஸ்!”

பரபரக்க வைத்த பெண் மாவோயிஸ்ட் விவகாரம்

“தீர்த்துக்கட்ட நினைத்தே ரகசியமாகக் கைது செய்தது போலீஸ்!”

பரபரக்க வைத்த பெண் மாவோயிஸ்ட் விவகாரம்

Published:Updated:
“தீர்த்துக்கட்ட நினைத்தே ரகசியமாகக் கைது செய்தது போலீஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
“தீர்த்துக்கட்ட நினைத்தே ரகசியமாகக் கைது செய்தது போலீஸ்!”

ரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள ஈங்கூர் ரயில் நிலையத்தில், கடந்த 3-ம் தேதி இரவு அந்த எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. அதில் பயணித்த ஒரு பெண், ஆந்திர மாநில சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்டார். ‘‘இவர் மாவோயிஸ்ட்’’ என்று போலீஸார் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர் கைது செய்யப்பட்டது பற்றி தமிழக போலீஸுக்கோ, அவரின் குடும்பத்துக்கோ எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்பதுதான் பரபரப்புக்குக் காரணம்.

“தீர்த்துக்கட்ட நினைத்தே ரகசியமாகக் கைது செய்தது போலீஸ்!”

கைது செய்யப்பட்ட பெண் யார்?

அந்தப் பெண்ணின் பெயர் பத்மா. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 20 ஆண்டுகளுக்கு முன் ஐ.டி.ஐ முடித்துவிட்டு வேலை தேடி சென்னைக்கு வந்தார். சென்னை தி.நகரில் உள்ள தன்னுடைய பெரியப்பா காக்கர்லா வீட்டில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்று வந்தார். காக்கர்லா ஒரு சினிமா நடிகராக இருந்தாலும், மாவோயிஸ்ட் இயக்கத்தின் மீது தீவிர ஈடுபாடு உடையவர். பெரியப்பா வீட்டில் இருந்ததால், பத்மாவுக்கும் அந்தச் சிந்தனை மேலோங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற மாவோயிஸ்ட் அமைப்பின் ‘பெண் உரிமைக் கழகம்’ என்ற பெண்கள் அமைப்பு அப்போது உருவானது. பத்மா தனியார் வேலையை உதறிவிட்டு அந்த அமைப்பில் முழுநேர ஊழியராகச் சேர்ந்தார்.

அந்த அமைப்பின் மூலம் தமிழ்நாடு முழுக்கப் பயணித்து பெண் விடுதலை, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சமூக மாற்றத்துக்காகக் குரல் கொடுத்து வந்ததோடு, ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடியும் வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில், கல்பனா சுமதி என்ற பெண்ணை ஒரு எஸ்.ஐ., போலீஸ் ஸ்டேஷனிலேயே வன்புணர்ச்சி செய்ததை எதிர்த்து மிகக் கடுமையாகப் போராடியதோடு, நீதிமன்றத்துக்குள்ளே புகுந்து அந்த எஸ்.ஐ மீது செருப்பு, விளக்குமாறு கொண்டு தாக்குதல் நடத்தியவர்களில் இவரும் ஒருவர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல பாலியல் வழக்கில் கைதான பிரேமானந்தா மீது முட்டையையும் தக்காளியையும் வீசி எதிர்ப்பு தெரிவித்தார். இப்படி தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அங்கு பத்மா போராளியாக நிற்பார்.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மாவோயிஸ்ட் அமைப்பை, பெண்கள் மத்தியில் வளர்க்கும் முயற்சியில் இருந்தபோது, இயக்கத் தோழரான திண்டுக்கல் விவேகானந்தனை மணந்தார். பத்மா, 2002-ல் தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பொடா வழக்கில் மூன்றரை ஆண்டுகள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பெயிலில் வெளியில் வந்த பிறகு, புரட்சிகர பெண்கள் விடுதலை மையம் என்ற அமைப்பைத் தொடங்கி ஈழப் போராட்டம், முத்துக்குமார் நினைவுநாள் கூட்டம், தலித் மக்களுக்கான இடஒதுக்கீடு எனத் தொடந்து இயங்கி வந்தார். ஒரு கட்டத்தில் காவல்துறை இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்கியது. இவரின் போராட்டங்களுக்குத் தடை விதித்தது. இவரைக் கைதுசெய்யும் சூழ்நிலை உருவாகியது. அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவானார். இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதுபற்றி பத்மாவின் கணவர் விவேகானந்தனிடம் பேசினோம். ‘‘பத்மா கைது செய்யப்பட்டதைப் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறலாகத்தான் பார்க்க வேண்டும். உளவுத் துறையின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. பத்மாவை ரகசியமாகக் கைதுசெய்து அழைத்துப் போயிருக்கிறார்கள். அதை அங்கிருந்த தோழர் பார்த்து இன்னொரு தோழரிடம் தகவல் சொல்லி இருக்கிறார். அவர் என்னிடமும், பத்திரிகையாளர்களிடமும் தெரிவித்து இருக்கிறார். அதன் பிறகுதான் கைது சம்பவம் வெளியில் தெரிந்திருக்கிறது. இல்லையென்றால் அஜீதா, குப்புராஜ் போன்றவர்களைக் கைதுசெய்து ரகசியமாகத் தீர்த்துக் கட்டியதைப்போல பத்மாவையும் கொலை செய்திருப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தீர்த்துக்கட்ட நினைத்தே ரகசியமாகக் கைது செய்தது போலீஸ்!”

பிரச்னைகளுக்காகப் போராடும்போது, அதை அரசு ஒடுக்க நினைக்கும். ஆனால், அந்த ஒடுக்குமுறைதான், அந்தப் போராட்டத்தை பல மடங்கு வீரியமாக எழுச்சி பெற வைக்கும். மக்களுக்காகப் போராடுபவர்களை ஒடுக்குவதை நிறுத்திவிட்டு, சமத்துவத்துக்காக அரசு செயல்பட வேண்டும். அரச பங்கரவாதத்தைப் போராளிகள் மீது ஏவ நினைத்தால் அரசுதான் வீழ்ந்து போகும்’’ என்றார்.

ஈரோடு எஸ்.பி-யான சிவக்குமாரிடம் கேட்டபோது, ‘‘இதுபற்றி எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. இந்த விஷயத்தில் உண்மையான தகவல் தெரியவில்லை. நானே செய்தித்தாள்களைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். ஒருவேளை இது பொய்யான தகவலாக இருக்கலாம்’’ என்றார்.

இதற்கிடையே பத்மாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனுவும்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism