Published:Updated:

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

Published:Updated:
‘நீட்’டா ஒரு டெஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

கீழ்க்காணும் கேள்விகளுக்கு சரியான பதில்களை அளிக்கவும்:

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

பார்த்தவுடனே குபீர் சிரிப்பை வரவழைக்கும் காமெடி ஜோடி இவற்றில் எது?

அ) கவுண்டமணி - செந்தில்
ஆ) தீபா - மாதவன்
இ) வடிவேலு - சிங்கமுத்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

அ.தி.மு.க-வில் மொத்தம் எத்தனை அணிகள் உள்ளன?

அ) 4
ஆ) 6
இ) அ.தி.மு.க-வா? அது எங்க இங்க இருக்கு?

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

தினகரனுக்கு எத்தனை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது?

அ) 21
ஆ) 34* (கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது)
இ) பாவத்த... இதுக்குப் பதில் அவருக்கே தெரியாதே!

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

மோடி இதுவரை எத்தனை முறை இந்தியாவை புதிதாகப் பிறக்க வைத்து பெயர் சூட்டியிருக்கிறார்?

அ) 1
ஆ) 2
இ) கணக்கெல்லாம் கிடையாது பாஸ். பொழுது போகாதப்போ எல்லாம் இப்படி பண்ணுவாரு!

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

இவர்களில் யாருடைய வெளிநடப்புக் காட்சிகளை அதிக முறை பார்த்திருக்கிறீர்கள்?

அ) ‘முத்து’, ‘அருணாச்சலம்’ போன்ற படங்களில் வீட்டை விட்டு வெளியேறும் ரஜினி
ஆ) சட்டமன்றத்தில் அடிக்கடி சண்டை போட்டு வெளியேறும் ஸ்டாலின்
இ) பிரகாஷோடு மல்லுகட்டி ஆக்ரோஷமாக வெளியேறும் ‘தெய்வ மகள்’ அண்ணியார்

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

இவர்களில் அதிக பார்ட்னர்ஷிப்களை உடைத்த சாதனைக்குரிய பவுலர் யார்?

அ) மேற்கிந்தியத் தீவுகளின் புயல் அம்புரோஸ்
ஆ) பாகிஸ்தான் புயல் வாசிம் அக்ரம்
இ) தென் தமிழகத்தின் புரட்சிப் புயல் வைகோ

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

நீங்கள் பிறந்ததில் இருந்து கேட்டுக்கொண்டிருக்கும் வசனம் இவற்றில் எது?

அ) ‘‘காமராஜரின் ஆட்சியைத் தமிழகத்தில் அமைப்போம்.’’
ஆ) ‘‘கடவுள் ஆணையிட்டால் அரசியலுக்கு வருவேன்.’’
இ) ‘‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் பா.ம.க-வைத் தேர்ந்தெடுப்பார்கள்.’’

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

இவற்றில் யாருடைய ஃபார்ம் அவுட் நம்மை மிகவும் பாதிக்கிறது?

அ) முன்னாள் கேப்டன் தோனி
ஆ) இந்நாள் கேப்டன் கோலி
இ) என்றென்றும் கேப்டன் விஜயகாந்த்

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

இடைவெளியே இல்லாமல் பாடப்படும் இந்தப் பாடல்களில் உங்கள் மனம் கவர்ந்தது எது?

அ) எஸ்.பி.பி-யின் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’
ஆ) எஸ்.பி.பி-யின் ‘மண்ணில் இந்தக் காதல் இன்றி’
இ) அன்பு அண்ணன் சீமானின் ‘என் இனமான தம்பிகளே’

‘நீட்’டா ஒரு டெஸ்ட்!

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு என நீங்கள் நினைப்பது?

அ) நீர் ஆவியாகாமல் தடுக்கும் தெர்மாகோல் - உபயம்: செல்லூர் ராஜு
ஆ) உலகின் முன்னணி வரலாற்று ஆய்வாளரான ஹெச்.ராஜாவின் ‘அசைவம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல’ என்ற கூற்று.
இ) கொட்டாவியை வைத்தே காதலைக் கண்டுபிடிக்கும் ‘அன்பானவன், அசராதவன் அடங்காதவன்’ சிம்புவின் தியரி. 

கேள்விகளுக்கான சரியான விடைகளை டிக் செய்து, அ.தி.மு.க-வின் ஏதாவது ஒரு அணிக்கு (முடிந்தால் எல்லா அணிகளுக்கும்) தபாலில் அனுப்பவும். எல்லா அணிகளுமே ஈ ஓட்டுவதால், உங்கள் பதில்களைக் கண்டு சிலிர்த்து அவர்கள் கட்சிப் பதவி தர வாய்ப்பு இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism