Published:Updated:

எமோஜி என் நண்பன்!

எமோஜி என் நண்பன்!
பிரீமியம் ஸ்டோரி
எமோஜி என் நண்பன்!

கார்க்கி பவா

எமோஜி என் நண்பன்!

கார்க்கி பவா

Published:Updated:
எமோஜி என் நண்பன்!
பிரீமியம் ஸ்டோரி
எமோஜி என் நண்பன்!

லகம் ஒரு புதிய விஷயத்தைக் கொண்டாடினாலோ, பயந்தாலோ,  ஹாலிவுட்காரர்கள் சந்தோஷமடைந்து விடுவார்கள். காரணம், அடுத்த படத்துக்கான களம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது என அர்த்தம். அப்படி, ‘அடுத்து என்ன என்ன’ எனக் காத்திருந்தவர்களுக்கு 2015ல் கிடைத்த ஐடியா ‘எமோஜி’.    

எமோஜி என் நண்பன்!

எமோஜியை வைத்து அனிமேஷன் படம்தான் எடுக்க முடியும் என்றதும், வார்னர் பிரதர்ஸ், பாராமவுன்ட் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகியவை போட்டியில் இறங்கின. இந்த ஏலத்தை சோனி பிக்சர்ஸ் வென்றது. பிறகு உடனடியாக வேலைகள் தொடங்கின. எரிக் சீகல் மற்றும் டோனி லியோண்டிஸ் எழுதிய ஸ்க்ரிப்ட்டை டோனியே இயக்குவதாக முடிவானது. 2016-ல் ஆரம்பித்த புராஜெக்ட் முழுவதுமாக முடிந்து இந்த மாதம் 28 ஆம் தேதி ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.

இன்று எமோஜிக்கள் தெரியாமல், பயன்படுத்தாமல் யாருமே இருக்க முடியாது. இந்தத் தலைமுறைக்கு எதையும் சொற்கள் மூலம் சொல்லாமல், படங்கள் மூலம் சொல்வதுதான் பிடித்திருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நம் ஒவ்வொருவருக்கும் பெஸ்ட் ஃப்ரெண்ட் போல ‘பெஸ்ட் எமோஜி’ ஒன்று இருக்கும். அதைப் பயன்படுத்தும்போது நம்மையறியாமல் ஒரு சந்தோஷம் வருவது உண்மைதானே? அந்த ஃபேவரைட் எமோஜியைப் பெரிய திரையில் காணலாம் என்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட்.    

எமோஜி என் நண்பன்!

தி எமோஜி படத்தின் கதை சுவாரஸ்யமானது. ஸ்மார்ட்போன் ஒன்றுக்குள் எல்லா எமோஜிக்களும் சந்தோஷமாக வாழ்கின்றன. மொபைலைப் பயன்படுத்துபவர் தங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் அவற்றின் ஆசை. இல்லையேல், அவை மொபைலை விட்டு வெளியேறி ஆக வேண்டும். ஒவ்வொரு எமோஜிக்கும் ஒரேயொரு முகபாவனைதான். ஆனால், அந்த லிஸ்ட்டில் ஜீன்(Gene)என்ற எமோஜிக்கு மட்டும் ஒரு பிரச்னை. ஜீன் மட்டும் ஒவ்வொரு சமயமும் விதம்விதமான முகபாவனைகளை வெளிப்படுத்தும். மற்ற எமோஜிக்கள் போல, தானும் ஒரேயொரு பாவனையுடன் வாழ ஜீன் விரும்புகிறது. இந்தப் பிரச்னைக்கு மொபைல் ஓனர் ஜேம்ஸ் கார்டன் உதவி செய்ய முன்வருகிறார். அவருடன் கோட்(Code) எழுதத் தெரிந்த அன்னாவும் சேர்ந்துகொள்கிறார். இந்த மூன்று பேரும் சேர்ந்து செய்யும் ஆப்ரேஷனில் மொபைலுக்கே ஒரு பெரிய பிரச்னை வருகிறது. அது என்ன பிரச்னை? ஸ்மார்ட்போனுக்கு என்ன ஆனது? ஜீன் நார்மல் எமோஜி ஆனதா என்பதே கதை.

சில மாதங்களுக்கு முன்பு எமோஜி படத்தின் டிரெயிலர் வெளியானது. ‘‘உங்கள் மொபைலுக்குள் இருக்கும் புதிய உலகுக்கு உங்களை வரவேற்கிறோம்” என்ற பன்ச் லைனே ரசிகர்களை குஷிப்படுத்தியது. இதுவரை இப்படி ஒரு முயற்சி யாரும் செய்யாதது என்பதால் டிரெயிலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.   

எமோஜி என் நண்பன்!

பக்கத்து மாநிலம் போனாலே நாம் பேசுவது பிறருக்குப் புரியாது. அவர்கள் உணவு நமக்குப் பிடிக்காது. ஆனால், உலகின் எந்த மூலைக்குப் போனாலும் எமோஜியைத் தெரியும்; புரியும். அதனால்தான் உலக அளவில் இந்தப் படம் பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எமோஜியின் கதை:

மோஜிக்கு இப்போது 19 வயதாகிறது. 1998-ல், NTT டொகொமோ என்ற ஜப்பான் நிறுவனம்தான் எமோஜியை முதலில் உருவாக்கியது. ஷிகேடிகா குரிடா என்பவர்தான் முதலில் எமோஜியைத் தனது கற்பனையில் யோசித்துப் பார்த்தவர். ஜப்பான் நாட்டு வானிலை அறிக்கையில் ‘கனமழை பெய்யும்’ எனச் சொல்வதற்குப் பதிலாக, ஒரு குடையின் மேல் நீர் ஊற்றுவது போல படம் காட்டியிருக்கிறார்கள். ஷிகேடிகாவுக்கு இதன் எளிமை பிடித்துப்போனது. 1998-ல்    மொபைல் மூலம் படங்கள் அனுப்புவது கொஞ்சம் சிரமமான விஷயம். அதற்காக அவர் யோசித்து உருவாக்கியதுதான் எமோஜி.