Published:Updated:

பிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்!

பிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்!

பிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்!

பிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்!

பிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்!

Published:Updated:
பிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்!

.தி.மு.க-வுக்கும் கமலுக்கும் எப்போதும் ஒத்துப் போகாது. ‘விஸ்வரூப’த்தில் வெடித்த விவகாரம் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ‘பீகார் மாநிலத்தைவிட அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் அதிகம்’ என்று கமல் சொல்ல, அவரைப் பாய்ந்து பிடுங்குகிறார்கள் தமிழக அமைச்சர்கள். ‘எந்த நேரமும் கமல் மீது வழக்குப் பாயலாம்... அவரைக் கைதும் செய்யலாம்’ என்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து அரசியல் பிரமுகர்களிடம் கருத்து கேட்டோம்.

பிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்!

ஜெயக்குமார் (நிதி அமைச்சர்): புரட்சித் தலைவி அம்மா இருந்தபோது வாயைப் பொத்திக்கொண்டு இருந்த கமலுக்கு இப்போது எங்கிருந்து தைரியம் வந்தது? பொத்தாம் பொதுவாக ‘ஊழல் இருக்கிறது’ என்று சொல்லக் கூடாது. ஆதாரம் வேண்டும். எந்தத் துறையில் ஊழல் என்று சொல்ல வேண்டும். கமலின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆதரவு கருத்து வெளியிட்டுள்ளார். எனவே, ‘ஸ்டாலின் சொல்லித்தான் கமல் இவ்வாறு பேசினாரோ’ என்று தோன்றுகிறது. இருவரின் பேச்சிலும் உள்நோக்கம் உள்ளதாகத் தெரிகிறது. நடிகர் கமலை, தி.மு.க நம்பியிருப்பது மிகவும் அவமானம். ‘சிஸ்டம்’ எனக் கமல் எதைக் குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை. எந்த சிஸ்டம் இருந்தால் அவருக்கு வசதியாக இருக்கும்?

தைரியம் இருந்தால் கமல், அரசியல் கட்சி ஆரம்பிக்கட்டும். யாருடைய கைப்பாவையாகவோ இருந்துகொண்டு அம்மாவின் அரசு மீது புழுதி வாரித் தூற்றுவதை நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.

சி.வி.சண்முகம் (சட்ட அமைச்சர்): கமலுக்கு எப்படிக் கருத்துச் சொல்ல உரிமை உள்ளதோ, அதே உரிமை எங்களுக்கும் உள்ளது. வாய்க்கு வந்தபடியெல்லாம் வசைபாடுவார், நாங்கள் பதில் சொல்லக்கூடாதா? தி.மு.க ஆட்சியில் இருந்தபோது ஊழலே நடக்கவில்லையா? சினிமாத் துறையே தி.மு.க கட்டுப்பாட்டில் இருந்ததே... அப்போது கமல் எங்கே போனார்? நிகழ்ச்சி ஒன்றில் கமல் அமர்ந்திருக்க, ‘நடிகர்களை மிரட்டுகிறார்கள்’ என அஜித் பேசினாரே, அப்போது ஏன் அமைதியாக இருந்தார்? இப்போது நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் யாருடைய ஊதுகுழலாகவோ பேசிக் கொண்டிருக்கிறார். சமூகத்தைச் சீரழிக்கிற, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை விமர்சனம் செய்கிற ஒரு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கைக் கோருவதில் என்ன தவறு உள்ளது? முதலில் அவர் முதுகில் உள்ள அழுக்கைச் சுத்தப்படுத்தட்டும். பிறகு எங்களுக்கு அறிவுரை சொல்ல வரட்டும்.

பிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்!

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): ‘தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது’ என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர். முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா ஆகியோரை நீதிமன்றமே குற்றவாளி எனக் கூறியுள்ளது. கர்நாடக சிறையில் நடந்த ஊழல்களும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இப்படியான சூழலில் பலரும் ஊழல் குறித்துப் பேசி வருகிறார்கள். ‘ஊழல் மலிந்துவிட்டது’ என்று கமல் கூறியுள்ள கருத்துக்கு ‘அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்’ எனக் கடுமையாக விமர்சிக்கத் தேவையில்லை. ‘ஊழல் நடைபெறவில்லை’ என்று சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு கமலை ஏன் மிரட்ட வேண்டும்?

தமிழிசை சவுந்திரராஜன் (பி.ஜே.பி): அரசியல் குறித்துக் கருத்துச் சொல்ல அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கமல்ஹாசன் தன் துறையில் உள்ள குறைகளை முதலில் களைய வேண்டும். திரைப்படத் துறையில் அடிமட்டத் தொழிலாளர்கள் எவ்வளவோ பிரச்னைகளில் தவிக்கிறார்கள். அவர்களின் நலனில் கமல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். கடந்த காலங்களிலும் தமிழகம் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்தது. அப்போது அவருடைய குரல் ஓங்கி ஒலித்ததா? இப்போது எப்படி ஒலிக்கிறது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும்.

பிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்!

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையும் சசிகலாவையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன், திகார் சிறையில் இருந்துவிட்டு வந்துள்ளார். கர்நாடகா சிறையில் சசிகலாவுக்கு வசதிசெய்வது தொடர்பாகச் சிறைத்துறை அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்தாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருவமானவரித் துறை சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களில் ஆர்.கே. நகர் தேர்தல் பணப்பட்டுவாடா பட்டியல் வெளியானது. இப்படிப் பல குற்றச்சாட்டுகள் இருக்கும்போது தமிழக அரசின் ஊழலைப்பற்றி கமல் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் நிர்வாகத்தைப் பற்றிப் பேச உரிமை உள்ளது என்பதை அ.தி.மு.க அமைச்சர்கள் உணர வேண்டும்.

கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): கமல் நடத்தும் நிகழ்ச்சியில் தலித் மக்களைப் புண்படுத்தும் வார்த்தைகளை ஒருவர் பயன்படுக்கிறார் என்றால், அதற்கு கமல்தான் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே நேரத்தில், அரசியல் குறித்துப் பேசுவதற்கு கமலுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசின் நிர்வாகம் குறித்தும் அரசியல் குறித்தும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. அ.தி.மு.க அமைச்சர்களின் மோசமான விமர்சனத்தை ஏற்க முடியாது.

- கே.புவனேஸ்வரி