Published:Updated:

‘டேக் இட் ஈஸி’ ஓவியா... - வெள்ளந்தி மனசு அன்புமணி!

‘டேக் இட் ஈஸி’ ஓவியா... - வெள்ளந்தி மனசு அன்புமணி!
பிரீமியம் ஸ்டோரி
‘டேக் இட் ஈஸி’ ஓவியா... - வெள்ளந்தி மனசு அன்புமணி!

‘டேக் இட் ஈஸி’ ஓவியா... - வெள்ளந்தி மனசு அன்புமணி!

‘டேக் இட் ஈஸி’ ஓவியா... - வெள்ளந்தி மனசு அன்புமணி!

‘டேக் இட் ஈஸி’ ஓவியா... - வெள்ளந்தி மனசு அன்புமணி!

Published:Updated:
‘டேக் இட் ஈஸி’ ஓவியா... - வெள்ளந்தி மனசு அன்புமணி!
பிரீமியம் ஸ்டோரி
‘டேக் இட் ஈஸி’ ஓவியா... - வெள்ளந்தி மனசு அன்புமணி!

‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வாங்கிய ஓட்டுகளை நான் வாங்கியிருந்தால் தமிழ்நாட்டைக் காப்பாற்றியிருப்பேன்’ என நொந்து போய்ச் சொல்லியிருக்கிறார் பா.ம.க-வின் அன்புமணி. யெஸ், அவர் கேட்பதும் நியாயம்தான். ஓவியாவைவிட எல்லா வகையிலும் ஓட்டு வாங்கத் தகுதியானவர் அன்புமணிதான். காரணங்கள் கீழே...

• ஓவியா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த முதல் நாள் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் கேமராவைப் பார்த்து, புல்லைப் பார்த்து, குருவியைப் பார்த்தெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். ‘ஐயோ, பாவம் பொண்ணு’ என இதைப் பார்த்தே கணிசமானவர்கள் அனுதாப ஓட்டுப் போட்டனர். சொல்லப்போனால் ஓவியாவுக்கு முன்பாகவே, ‘நான்தான் முதல்வர் வேட்பாளர், நான்தான் முதல்வர் வேட்பாளர்’ என தனியாகப் பேசத் தொடங்கியது அன்புமணிதான். ஆனாலும் கட்சிகளோ, மக்களோ கண்டுகொள்ளவே இல்லை. என்ன கொடுமை சார் இது?

‘டேக் இட் ஈஸி’ ஓவியா... - வெள்ளந்தி மனசு அன்புமணி!

• ஓவியாவின் ப்ளஸ்ஸே அவரின் ‘டேக் இட் ஈஸி’ பாலிஸிதான். யார் தன்னைப் பற்றி என்ன சொன்னாலும் சரி, தான் யாரோடு சண்டை போட்டாலும் சரி, கொஞ்ச நேரத்திலேயே சகஜமாகி அவர்களோடு சிரித்துப் பேசத் தொடங்கிவிடுவார். கிடைப்பதற்கரிய இந்தக் கலாசாரத்துக்கான ஊற்றுக்கண்ணே பா.ம.க-தானே. மூச்சுக்கு முந்நூறு முறை தாங்கள் விமர்சித்த தி.மு.க-வோடு காபி குடிக்கும் கேப்பில் கூட்டணி வைத்ததாகட்டும், தங்களை வறுத்தெடுத்த விஜயகாந்த்தோடு ‘கமான் கேப்டன்’ எனக் கை குலுக்கியதாகட்டும்... வாவ்! அன்புமணிக்கு நாம ஓட்டு போட்டிருக்கணும் பாஸ்!

* பிக் பாஸில் ஓவியாவின் ஒன்லைன் பன்ச், ‘எனக்கு வாழைப்பழமும், க்ரீன் டீயும் வேண்டும்’ என்பதுதான். இந்த இடத்தில் ஒரு குறியீட்டைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். க்ரீன் டீ பச்சைக் கலர், வாழைப்பழம் மஞ்சள் கலர். சட்டமன்றத் தேர்தலின்போது அன்புமணி பயன்படுத்திய தமிழ்நாடு லோகோவை மனதில் வைத்துப் பாருங்கள்! ஓவியாவுக்கு மட்டும் ஓட்டுப் போட்டுக் கத்துதா அந்த கவுளி?

• முழுநேரமும் மைக் மாட்டிக்கொண்டு உண்மையைப் பேசித் திரிவதால்தான் ஓவியாவுக்கு இத்தனை ஓட்டுகளாம். வண்டலூர் மாநாட்டில் மூன்று மணி நேரம் மைக்கை காதோரம் மாட்டிக்கொண்டு திணறத் திணறப் பேசிய அன்புமணியைவிட ஓவியா எந்த வகையில் பெட்டர்? பேசியவை உண்மையா, இல்லையா என்பது மேட்டர் இல்லை. ஆன்சர் தி கொஸ்டீன் ஐ ஸே!

‘டேக் இட் ஈஸி’ ஓவியா... - வெள்ளந்தி மனசு அன்புமணி!

• சோஷியல் மீடியாவில் ஓவியாவுக்கு ஓட்டுப் போட்ட தமிழ் மக்கள் அனைவரும் சொல்வது... ‘ஓவியாதான் அடுத்த தலைவர்’. மூன்று வாரங்கள் பார்த்த ஓவியாவையே தலைவராக்க வேண்டும் எனத் துடிக்கும் தமிழினம், மூன்று தேர்தல்களாக பல குரல்களில் பேசும் அன்புமணியை முதல்வராக்க நினைக்காதது ஏன்? சிந்திக்க வேண்டும் என் மக்காள்!

• ‘கொக்கு நெட்டகொக்கு நெட்டகொக்கு இட்ட முட்ட கட்டை முட்ட’ - ஓவியாவின் இந்த ராப் பாடலுக்குத்தான் எத்தனை லட்சம் ரசிகர்கள்!  அப்படிப் பார்த்தால்... ‘அன்புமணியாகிய நான்’, ‘மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி’, ‘அன்புமணி4சிஎம்’ என பன்ச்சையே பாட்டாகப் பாடிய அன்புமணிக்கும் ஓட்டுகளை அள்ளிப் போட்டிருக்க வேண்டுமே! வாட் இஸ் திஸ்?

• ‘ஓவியாவின் வெள்ளந்தி மனசுதான் அவர் இத்தனை லட்சம் ஓட்டுகள் வாங்கக் காரணம்’ என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு(?). ‘ஓவியாவுக்குப் போட்ட ஓட்டை ஏன் ஃப்ரெண்ட்ஸ் எனக்குப் போடலை?’ என உரிமையாய் கேட்கும் அன்புமணியின் வெள்ளந்தி மனசு இருக்கே... அதான் சார் கடவுள். அதுக்காகவாவது அடுத்த எவிக்‌ஷன் ரவுண்டில் மறக்காம ஓட்டுப்போடணும் மக்களே!