Published:Updated:

“பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நில்லுங்கள்!”

“பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நில்லுங்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நில்லுங்கள்!”

“பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நில்லுங்கள்!”

“பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நில்லுங்கள்!”

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2017-2018 பேட்ஜ் தொடங்கி விட்டது. பல  கட்டத்   தேர்வுகளுக்குப்பின் 71 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 21, 22, 23 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

விகடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், மாணவர்களுக்கான நெறிமுறைகளையும் வழிமுறைகளையும் சொல்லி, பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்தார். நடிகரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரியோ, எருமை சாணி (யூ டியூப் சேனல்) விஜய், மெட்ராஸ் சென்ட்ரல் (யூ டியூப் சேனல்) கோபி-சுதாகர், நடிகர் டேனியல், நடிகரும் பின்னணிப் பாடகருமான அருண்ராஜா காமராஜ், புகைப்படக் கலைஞர் அருண் டைட்டன், ஒளிப்பதிவாளர் பால் கிரிகோரி, நியூஸ் போட்டோகிராபர் செல்வபிரகாஷ், திரைப்பட இயக்குநர் ராம், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன், சாதி ஒழிப்புப் போராளி கௌசல்யா சங்கர், திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், தகவல் உரிமை ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து, வழிகாட்டல்களை வழங்கினர்.

“பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நில்லுங்கள்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாணவப் பத்திரிகையாளர்களுக்கான கலைநிகழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளைக் குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன், புதுகை பூபாளம் குழுவினர், நடிகர் ஜெயச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில்கள் அளித்தார். ‘மாறி வரும் மீடியா’ என்ற தலைப்பில் ‘நியூஸ் 18’ தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரன்,  ‘புதிய தலைமுறை’ செய்தி ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், ‘நியூஸ் 7’ சிறப்புச் செய்தியாளர் சுகிதா ஆகியோர் உரையாற்றினர்.

குணசேகரன்: ‘‘ஒரு செய்தியை எழுதுவதற்கு முன்னால், அதைப் பற்றிய புரிதல் மிக அவசியம். உங்களுக்குத் தெளிவில்லாத ஒரு செய்தியை, அதைப் பற்றிய புரிதல் இல்லாமல் எழுதுவதைத் தவிருங்கள். ஒரு செய்தியை எழுதுவதற்கு முன்பு, பத்திரிகையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. ஒன்று, அது பற்றிய தகவல்களை நாமே தேடியெடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு, நமக்குப் புரிதல் இல்லாத ஒரு செய்தியைக் கையிலெடுக்கும்போது, யாரை அணுகினால் மிகச்சரியான தகவல்களை நமக்குப் புரியும்படி சொல்கிறாரோ, அவரிடம் செய்தியைப் பெற்று, பின்பு எழுத ஆரம்பிக்க வேண்டும்.”

“பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நில்லுங்கள்!”

கார்த்திகைச் செல்வன்: ‘‘செய்தி எப்போதும் உண்மைத்தன்மையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். தான் சார்ந்த கொள்கைகளை மையப்படுத்தி ஒருபோதும் நாம் செயல்படக் கூடாது. பத்திரிகையாளனாக ஆவதற்கு இரண்டு முக்கியத் தகுதிகள் வேண்டும். ஒன்று, செய்திகள் சேகரிக்கச் செல்லும்போது, அங்கு நேரம் காலம் பார்க்கக்கூடாது. மற்றொன்று செய்தியைத் தேடித் தேடி செல்ல வேண்டும். எக்ஸ்க்ளூசிவ் செய்தியை மிகத்தரமாகத் தரவேண்டும் என்றால், ஆர்.டி.ஐ உங்களுக்குக் கைகொடுக்கும்.”

சுகிதா: “மீடியா உலகில் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவாக இருக்கும் நிலையில், இங்கு மாணவ பத்திரிகையாளர்களில் 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் வந்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. இந்தத் துறையிலும் பெண்கள் கோலோச்ச வேண்டும். புத்தக வாசிப்பு அவசியம். ‘சமூகம் சம்பந்தப்பட்ட செய்திகளில் நீங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கிறீர்களா... அல்லது, அதிகாரத்தின் பக்கம் நிற்கிறீர்களா?’ என்பதே முக்கியம்.”

“பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நில்லுங்கள்!”

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் கடந்த ஆண்டு ‘தலைசிறந்த’ தகுதியுடன் தேறியவர்கள் உ.சுதர்சன் காந்தி, ம.சுந்தர விந்தன்,  ம.காசி விஸ்வநாதன், அ.சரண்குமார், ஜெ.நிவேதா, வெ.வித்யா காயத்ரி, ஆ.ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர். இவர்களைத் தவிர ‘மிகச் சிறப்பு’, ‘சிறப்புத் தகுதி’, ‘முதல் வகுப்பு’ ஆகிய தகுதிகள் பெற்றவர்களுக்கும் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் பரிசுகள் வழங்கினார். சிறந்த மாணவர்களுக்கான பேனா பரிசை, விகடன் வாசகரான பா.சத்தியநாராயணன் வழங்கினார்.

கடந்த ஆண்டு மாணவப் பத்திரிகை யாளர்களாகச் செயல்பட்டவர்களின் அனுபவச் சாரலில் நனைந்தபடி, சொந்த ஊர்களை நோக்கி சிட்டுக்குருவிகளாய் பறந்தனர், புதிய மாணவப் பத்திரிகையாளர்கள். இந்தச் சிட்டுக்குருவிகள், அடுத்த ஒரு வருடத்துக்குத் தங்களின் எழுத்துகளால் கட்டிப்போட உங்களின் இல்லங்கள் நோக்கிப் பறந்து வருவார்கள்.

- ஜெ.அன்பரசன்
படங்கள்: ஆ.முத்துகுமார், தி.குமரகுருபரன், க.பாலாஜி