Published:Updated:

திவ்யாவின் திகில் கொலை! - மறைக்க உதவும் இளவரசியின் உறவினர்

திவ்யாவின் திகில் கொலை! - மறைக்க உதவும் இளவரசியின் உறவினர்
பிரீமியம் ஸ்டோரி
திவ்யாவின் திகில் கொலை! - மறைக்க உதவும் இளவரசியின் உறவினர்

திவ்யாவின் திகில் கொலை! - மறைக்க உதவும் இளவரசியின் உறவினர்

திவ்யாவின் திகில் கொலை! - மறைக்க உதவும் இளவரசியின் உறவினர்

திவ்யாவின் திகில் கொலை! - மறைக்க உதவும் இளவரசியின் உறவினர்

Published:Updated:
திவ்யாவின் திகில் கொலை! - மறைக்க உதவும் இளவரசியின் உறவினர்
பிரீமியம் ஸ்டோரி
திவ்யாவின் திகில் கொலை! - மறைக்க உதவும் இளவரசியின் உறவினர்

“அக்கா, இன்னைக்கு ஆடி முதல் தேதி (17-7-17). இது அஷ்டமியில வந்திருக்கு. அதனால நல்லதில்ல. வீட்டுல மாவிளக்கு ஏத்து. அப்போதான் வீட்டுக்காரருக்கு நல்லது. நானும் இப்போதான் ஏத்தினேன்...’’ - தன் பெரியம்மாவின் மகள் கவிதாவுக்கு போன் செய்தார் திவ்யா. அப்போது மாலை ஏழு மணி. அடுத்த சில மணி நேரத்தில் திவ்யா வீட்டுக்குத் தகவல் வருகிறது... “உங்க பொண்ணு திவ்யா செத்துட்டா!’’

பதறியடித்துக்கொண்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு ஓடினார்கள் திவ்யாவின் குடும்பத்தினர். அங்கே முகமெல்லாம் காயங்களோடு, இறந்த உடலாகக் கிடந்தார் திவ்யா. ‘‘எந்தக் கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்று மாவிளக்கு ஏற்றினாரோ, அதே கணவன் குடும்பத்தினரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் திவ்யா’’ எனச் சொல்லி மன்னார்குடி மக்கள், அவர் மரணத்துக்கு நீதி கேட்டு, சாலைமறியல் செய்தனர்.

திவ்யாவின் திகில் கொலை! - மறைக்க உதவும் இளவரசியின் உறவினர்

‘‘சேரன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ கார்த்திகேயன் மகள் திவ்யா. மன்னார்குடி முத்தழகன் - ராணி தம்பதியின் மகனான இளஞ்சேரனுக்குத் திவ்யாவைக் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். திருச்சி அப்போலோ மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகிறார் இளஞ்சேரன்.

முத்தழகனுக்கு ஒரு சின்ன பின்னணி... அவர், மன்னார்குடி  முன்னாள்  எம்.எல்.ஏ கு.பாலகிருஷ்ணன் மகன். அதைவிட முக்கிய உறவு ஒன்றுள்ளது. முத்தழகனின் சகோதரி வளர்மதியை வடுகநாதன் என்பவருக்குக் கட்டிக்கொடுத்துள்ளனர். அந்த வடுகநாதன் யார் என்றால், சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவோடு சேர்ந்து தண்டனை அனுபவித்துவரும் இளவரசியின் அண்ணன். இது போதாதா? அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தக் கொலையை மறைக்க இவர்கள் நடத்திய நாடகம், குற்றங்களின் உச்சம்’’ என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார்குடி மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திவ்யாவின் திகில் கொலை! - மறைக்க உதவும் இளவரசியின் உறவினர்

நடந்ததைக் கண்ணீரோடு விவரிக்கிறார் திவ்யாவின் அண்ணன் பிரேம்குமார். “என் தங்கச்சிக்கு 100 பவுன் நகை, காருக்கு 10 லட்சம், அதோடு சீர்வரிசை கொடுத்துகட்டிக்கொடுத்தோம். அதுக்கப்புறமும் அடிக்கடி பணம் கேட்டவங்க, கடைசியா ஆஸ்பத்திரி கட்டணும்னு 12 லட்ச ரூபாய் கேட்டு தங்கச்சியை அடிக்க ஆரம்பிச்சாங்க. கொலை நடந்த அன்னைக்கும் பணம் கேட்டு பெல்ட்டாலேயே தங்கச்சியை முத்தழகன் அடிச்சிருக்காரு. தங்கச்சியோட ஒரு வயதுக் குழந்தை, அறைக்கு வெளியே இருந்திருக்கான். கொஞ்ச நேரத்தில வீட்டுக்குள்ள பரபரப்பு. அதுக்கப்புறம் வீட்டுக்கு நிறைய பேர் வந்திருக்காங்க. அதுல ஒருத்தர் தி.மு.க நகரச் செயலாளர் வீரா கணேசன். அதேநேரம் இளவரசி அண்ணன்கள் வடுகநாதன், கண்ணதாசன், அண்ணாதுரைன்னு வந்தாங்க. இவற்றையெல்லாம் அக்கம்பக்கத்தில பார்த்திருக்காங்க. அடிபட்டுக் கிடந்த என் தங்கச்சியை, இவங்க குடும்ப டாக்டர் சித்ராவோட ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. மூளைச்சாவு அடைஞ்சிருக்கலாம்னு அவங்க சொல்லியிருக்காங்க. அதுக்கப்புறம்தான் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிட்டுப் போனாங்க. அங்க, ‘இறந்து ஒரு மணி நேரம் ஆகுது’ன்னு சொல்லிட்டாங்க.

சென்னையில் இருக்கற உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருத்தருக்கு போன் பண்ணி ஐடியா கேட்டிருக்காங்க. அவர் சொன்னபடி முதல்ல ‘தற்கொலை’ன்னு சொன்னாங்க. ‘உடம்பெல்லாம் காயமாயிருக்கே’ன்னு நாங்க கேட்கவே, ‘திருடன் வந்து நகைக்காக கொன்னுட்டான்’னு சொன்னாங்க. பிறகு அதிலேயும் சந்தேகம் வரவும்தான் ‘டிரைவர் ராஜேஷ், பணத்துக்காக கொன்னுட்டான்’னு சொல்லி சரணடைய வெச்சாங்க. இவை எல்லாத்துக்கும் போலீஸும் உடந்தை. பொதுமக்கள் போராட்டம் பெருசாகி, உயர் அதிகாரிகள் தலையிட்டபின்தான் ராஜேஷை விடுவித்துவிட்டு, உண்மைக் குற்றவாளிகளைக் கைது செஞ்சாங்க” என்றார் குமுறலாக.

இதுகுறித்து நாம் மன்னார்குடி டி.எஸ்.பி அசோகனிடம் பேசினோம். “பாதிக்கப்பட்டவங்க ஆதங்கத்தில் இயல்பாவே போலீஸைக் குற்றம் சொல்வார்கள். அதில் உண்மையில்லை.

திவ்யாவின் திகில் கொலை! - மறைக்க உதவும் இளவரசியின் உறவினர்

ஆர்.டி.ஓ விசாரணையையொட்டி வரதட்சணைக் கொடுமை என்று வழக்குப்பதிவு செய்துள்ளோம். இளஞ்சேரன், முத்தழகன், ராணி ஆகியோரைக் கைது செய்துள்ளோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க முடியும்” என்றார்.

போலீஸில் ஒரு தரப்பினர், மரணத்தின் பின்னணியை விளக்கினர். “முத்தழகன் சபலபுத்தி கொண்டவர். ஒரு பெண்ணுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றதை, திவ்யா பார்த்துவிட்டார். அதேநேரம் இளஞ்சேரன் மருத்துவம் படிக்கும்போதே கேரளாவைச் சேர்ந்த சக மாணவியை விரும்பி வந்தார். அவருடன் கல்யாணத்துக்குப் பிறகும் தொடர்பு இருந்தது. இது ஒருநாள் திவ்யாவுக்குத் தெரியவந்து, அதனால வீட்டில் சண்டை ஏற்பட்டது. ‘அப்பாவுக்குப் புள்ளை தப்பாம பிறந்திருக்கே’ன்னு கோபத்தில திவ்யா திட்டியிருக்கு. ‘ஆம்பிளைனா அப்படித்தான் இருப்பாங்க’ன்னு குடும்பமே சேர்ந்து கடுமையா தாக்கியிருக்காங்க. கேரளப் பெண்ணோட திருச்சியிலேயே தனிக்குடித்தனம் நடத்த ஏற்பாடு ஆனது. இதை எதிர்த்துக் கேட்டதால் திவ்யா கொல்லப்பட்டார்’’ என்றனர் வேதனையோடு.

அதிகாரமும் அரசியலும் எளிய பெண்களையே காவு வாங்குகின்றன.

- சே.த.இளங்கோவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism