Published:Updated:

அடுத்து என்ன? - பிரளயன்

அடுத்து என்ன? - பிரளயன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - பிரளயன்

வீராயியும் மத்தவிலாசப் பிரகசனமும்படம் : வே.நிவேதன்

அடுத்து என்ன? - பிரளயன்

வீராயியும் மத்தவிலாசப் பிரகசனமும்படம் : வே.நிவேதன்

Published:Updated:
அடுத்து என்ன? - பிரளயன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - பிரளயன்

தேசிய நாடகப் பள்ளி, பெங்களூரு மையத்தின் சார்பில், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தோடு இணைந்து ஒரு மாத கால நாடகப் பயிலரங்கு ஒன்று கடந்த மே மாதம் நடந்தது. அந்தப் பயிலரங்கின் இயக்குநர் எனும் வகையில் பயிற்சியின் ஒரு பகுதியாக ஒரு நாடகத்தினையும் தயாரிக்க வேண்டியிருந்தது. ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆசான் எனக் கருதப்பட்டவரும் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான கவிஞர். தமிழ்ஒளி எழுதிய ‘வீராயி’ எனும் குறுங்காவியத்தை அப்பயிலரங்க மாணவர்களைக்கொண்டு ஒரு நாடகமாகத் தயாரித்தோம். இன்னும் சற்று முழுமை பெற வேண்டிய நாடகம் அது. எனினும் பயிலரங்கின் ஒரு பகுதியாக நிறைவுநாளன்று முற்றிலும் முழுமை பெறாத நிலையில் ஒரு சிறிய பார்வையாளர் வட்டத்திற்கு இந்நாடகம் நிகழ்த்தப்பட்டது.

1947-ல் எழுதப்பட்ட இது, பல சமகால அதிர்வுகளைக்கொண்டது. தமிழ்ச் சமூகப் பெருமிதத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் ‘சாதிய வன்மத்தை’ அதன் பண்பாட்டுப் போலித்தனத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எழுத்துகளில் ஒன்றுதான் இந்த ‘வீராயி’. இன்னும் பத்து நாள்கள் தொடர்ந்து வேலை செய்தோமெனில் இதனை நிறைவு செய்துவிடலாம். இப்பணி முடியுமெனில், சென்னை, புதுவை, பெங்களூரு ஆகிய இடங்களில் இந்த நாடகம் மேடையேற வாய்ப்புகளும் உள்ளன. அதற்கான வேலையில் தற்போது இறங்கியுள்ளோம்.

அடுத்து என்ன? - பிரளயன்

அடுத்த நாடக வேலைகளுக்கான ஆயத்தங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவனால் எழுதப்பட்டதாக சமஸ்கிருதத்தில் நமக்குக் கிடைத்திருக்கிற நாடகமான ‘மத்தவிலாசப் பிரகசன’த்தைத் தமிழில் தயாரிக்கிற முயற்சியில் உள்ளோம். நாட்டிய சாஸ்திரம், நாடகங்களை ‘தச ரூபம்’ எனப் பத்து வகையாகப் பிரிக்கிறது. அதில், ஒருவகைதான் ‘பிரகசனம்’ என்பது. அங்கதச் சுவையுள்ள நாடக வகையே இங்கு பிரகசனம் எனச் சொல்லப்படுவதாகக் கருதலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்யசோமன் எனும் காபாலிகன் அவனது சக தோழி தேவசோமா, புத்த பிட்சு நாகசேனன், பாப்ரு கல்பன் எனும் பாசுபத சைவன், மற்றும் ஒரு மனநலங்குன்றியவன் பின்னர் இந்நாடகத்தை அறிமுகம் செய்யும் ஒரு நடன் மற்றும் நடி அதாவது ஒரு கட்டியங்காரன் மற்றும் கட்டியங்காரி போன்ற பாத்திரங்களைக்கொண்டு நிகழ்த்தப்படுகிற நாடகம் இது.

அடுத்து என்ன? - பிரளயன்

காபாலிகம் என்பது அன்றிருந்த ஒரு சமயப் பிரிவு. இவர்கள் சிவனை மட்டுமே வழிபடுபவர்கள். மது, மைத்துனம் [கலவி], மச்சம் [மீன்], மாமிசம், முத்ரா [வெயிலில் அல்லது அனலில் வறுத்தெடுக்கப்பட்ட தானியங்கள்] இவையெல்லாம் இவர்களது நிவேதனப் பொருட்கள்; வழிபடும் முறைகள். கபால ஓட்டில் பிச்சை வாங்கி உண்பதுதான் ஒரு காபாலிகனின் நியமம். கபால ஓடு அவர்களது பிச்சைப் பாத்திரமாக இருப்பதால்தான், காபாலிகர்கள் என அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். மது போதையிலுள்ள காபாலிகன் சத்ய சோமனது பிச்சைப் பாத்திரத்தை நாயொன்று தூக்கிச் சென்றுவிடுகிறது. அதையறியாது அவனும் அவனது தோழி தேவசோமாவும் பிச்சைப் பாத்திரத்தைத் தேடியலைகின்றனர். மது பருக வேறு பாத்திரமின்றிக் கடைசியில் மாட்டுக் கொம்பில் மதுவை வாங்கிப் பருகுகின்றனர் இருவரும். பிறகு, தனது பிச்சைப் பாத்திரத்தைக் களவாடிவிட்டதாகக் குற்றம் சாட்டி அங்கு வரும் ஒரு புத்த பிட்சுவிடம் மல்லுக்கு நிற்கிறான் காபாலிகன். இப்படிச் சுழல்கிறது நாடகத்தின் கதையாடல்.

ஒரு கட்டத்தில், “சாங்கியத்தையும் [இறை மறுப்பு சிந்தனை] வேதாந்தத்தையும் நீ திருடிக்கொண்டுவிட்டாய்’’ எனப் புத்த பிட்சுவைக் குற்றம் சாட்டுகிறான் காபாலிகன். அன்றிருந்த சமயங்களை, அவற்றுக்குள் உள்ள பிணக்குகளை, நீதி மன்றங்களை அங்கதச் சுவையோடு சித்தரிக்க முயல்கிறது இந்நாடகம். இந்நாடகத்தில் வரும் தேவசோமா என்னும் பெண்பாத்திரம் எப்போதும் காபாலிகனைப்போல் குடித்துக் கொண்டேயிருப்பார். மதுவின் கடவுளான ‘சோமதேவன்’ என்பதன் ‘உல்டா’தான் தேவசோமா என்பது.  இதுபோன்ற பகடிகள் நாடகம் முழுக்க உண்டு.

நாடகக் கதை ‘காஞ்சி நகரத்தில்’ நிகழ்வதாகப் புனையப்பட்டுள்ளது. தமிழ்நாட்டினது சமயங்களின் வரலாற்றை, பல்லவர் காலத்து நகர வாழ்வை, அன்றைய சமுக வரலாற்றை விரித்துணர, சாத்தியங்களுள்ள நாடகப் பிரதி இது. இதில் 23 பாடல்கள் உள்ளன.  இ. ஜான் ஆசீர்வாதம் தமிழில் மொழிபெயர்க்க, கிறித்தவ இலக்கியச் சங்கம் 1981-ம் ஆண்டு இதனை வெளியிட்டிருக்கிறது.இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பையும் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வைத்துக்கொண்டு முதற்கட்டமாகப் பாடல்களை எழுதும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism