Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

மீபகாலமாகத் தமிழகத்தில் கல்விமுறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் கவனிக்கத்தக்கவையாகவும் வரவேற்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான விதை பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகளிலேயே விதைக்கப்படுகின்றன என்பது உலகமெங்கும் உள்ள சமூக ஆர்வலர்களின்

தலையங்கம்

கருத்தாகவும் அனுபவமாகவும் மிளிர்ந்திருக்கிறது. நீண்டநெடுங்காலமாக நமது பாடத்திட்டங்கள் சந்தைக்கான போட்டியாளர்களை உற்பத்தி செய்பவையாகவும் பொருத்தமான குமாஸ்தாக்களை உற்பத்தி செய்யும் களங்களாகவும் மட்டுமே இருந்திருக்கின்றன. ‘உங்கள் குழந்தைகள் உங்களிடமிருந்து வந்தவர்களே தவிர, அவர்கள் உங்களுடைய குழந்தைகள் அல்ல’ என்பது கலீல் ஜிப்ரானின் அர்த்தம் பொதிந்த வரி. ஆனால், நாமோ பாடப்புத்தகங்களைப் பாதுகாத்துவிட்டு குழந்தைகளை, அவர்களின் குழந்தைமையை, கனவுகளைக் கிழித்துக்கொண்டிருக்கிறோம். அர்த்தம் புரியாத வெற்று மனப்பாடச் சடங்காகக் கல்விமுறையை மாற்றி வைத்திருக்கிறோம். இப்போது நடந்திருக்கும் மாற்றங்கள் ஒட்டுமொத்தமாகக் கல்வித்துறையையே புரட்டிப்போட்டுவிடவில்லை என்றாலும் சில தேக்கங்களை உடைத்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால், அதேநேரத்தில் கல்வித்துறைக் களத்தில் நாம் பயணிக்க வேண்டிய தூரமும் பாதைகளின் நீளமும் அதிகம் என்பதையும் சிந்திக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம், ஒரே நுழைவுத்தேர்வு என்று இப்போது முன்னெடுக்கப்படும் முயற்சியானது, வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பன்மைத்தன்மையை அழிக்கும் முயற்சி. நம் குழந்தைகள் வெவ்வேறு சாதி, வெவ்வேறு வர்க்கம், வெவ்வேறு இனக்குழுக்கள், வெவ்வேறு மொழி, வெவ்வேறு தேசிய இனப்பின்னணியில் இருந்து வருபவர்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு தேசிய இனமும், ஒவ்வொரு மொழியும் தனக்கான தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது. மாநில அளவிலான பாடத்திட்டங்கள் என்பவை இந்த

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்

வித்தியாசங்களைக் கவனத்தில்கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம், ஒரே நுழைவுத்தேர்வு என்னும் முன்னெடுப்பு,  வித்தியாசங்களை அழித்து ஒற்றை அடையாளத்தை நம் மீது வலுக்கட்டாயமாகத் திணித்துவிடும். கல்வி என்பது மாநில அரசுப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டு, இப்போது மத்திய அரசின் அதிகாரத்துக்குக் கீழ் மட்டும் அடங்கும் பொருளாக மாற்றப்பட்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மண்சார்ந்த வரலாறுகளும், போராட்டங்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாட்டு அம்சங்களும் ஒற்றைப் பாடத்திட்டத்தில் முழுமையாகப் பதிவுசெய்யப்பட வாய்ப்பே இல்லை. குழந்தைகள் தாங்கள் வாழும் மண்ணின் வரலாற்றையும் இயல்பையும் புரிந்துகொள்ளாமல், அறிந்துகொள்ளாமல் திணிக்கப்பட்ட பாடத்திட்டத்தைப் படிப்பது என்பது எவ்விதத்தில் பயன்படும்? நமது பாடத்திட்டம், நமது மண்ணின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாது சமத்துவத்தையும் அறவுணர்வையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாலின உரிமைகளையும் குழந்தைகளுக்குப் புகட்டுவதாக அமைய வேண்டும். இதுவே நமது ஒளிமிக்க எதிர்காலத்துக்கான உறுதிப்பாடு.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism