
மன்னிப்பு
நேரில் சண்டை போட்டுக்கொண்ட கணவனும் மனைவியும் ஸாரி கேட்டுப் பேசிக்கொண்டார்கள் வாட்ஸ்அப்பில்!
- கிருஷ்ணகுமார்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
புகார்
“நேற்று ரேவதி மிஸ் ஹோம் வொர்க் எதுவும் கொடுக்கல” ஹெட்மிஸ்டரஸிடம்புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் கீர்த்தனாவின் அம்மா.
- விகடபாரதி

ஹவுஸ்மேட்ஸ்
``சண்டை போட்டுக்காம விளையாடுங்க’’ என்ற அம்மாவிடம் குழந்தைகள் சொன்னது ``இது பிக்பாஸ் விளையாட்டும்மா!’’
- ரியாஸ்

முதலும் முடிவும்
“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை!” என்ற ராகவன் ஹாஸ்பிட்டல் பில்லைப்பார்த்ததும் சண்டை போடத் தயாரானான்.
- விகடபாரதி

என்னாச்சு?
பைக்கில் அடிபட்டு இரண்டு நாள்களாக மயக்கத்தில் இருந்தவன், கண் விழித்தவுடன் கேட்ட கேள்வி “ஓவியாக்கு என்னாச்சு?”
- A. சண்முக ராஜன்

சம்பவம்
“சின்ன ஆபரேஷன்தான். பயப்படாதீங்க...” டாக்டர் ஆறுதல் சொன்னார், கூலிப்படைத் தலைவனுக்கு!
- பெ.பாண்டியன்

காலிங் ராகுல்
மாமா, சித்தி, அத்தை, அண்ணன், அண்ணி, சித்தப்பா, பெரியப்பா எல்லாருக்கும் போன் பண்ணிச் சொன்னான் ராகுல், லைக்ஸ் போடச் சொல்லி...
- விகடபாரதி

உத்தரவு
‘`பிக்பாஸ் முடியறதுக்குள்ள எல்லா போராளிகளையும் கைது பண்ணி உள்ளே வெச்சுப் பின்னியெடுங்க’’ என்று உத்தரவிட்டார் அமைச்சர்!
- கே.சதீஷ்

ஏற்பு
வருங்கால மாமனார், ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்ததுமே நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தான் வினோத்!
- கே.மணிகண்டன்

அடி
வீட்டில் குழந்தையைப் போட்டு சாத்தினாள், நல்ல மிஸ் என்று பெயரெடுத்த ஆசிரியை!
- சி.சாமிநாதன்

அதிகபட்சம்
10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ500. உங்கள் கதைகளை 10seconds tory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!