Published:Updated:

“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!

“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!
பிரீமியம் ஸ்டோரி
“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!

“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!

“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!

“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!

Published:Updated:
“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!
பிரீமியம் ஸ்டோரி
“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!

துரை ஆதீனத்தை விதவிதமான தந்திரங்களால் தன் கைப்பிடிக்குள் கொண்டு வர முயன்ற நித்யானந்தாவின் லேட்டஸ்ட் டார்கெட், காஞ்சிபுரம். இங்கிருக்கும் தொண்டை மண்டல ஆதீன ஞானப்பிரகாச மடம் மற்றும் மடத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கைப்பற்ற நித்யானந்தா முயற்சி செய்கிறார் என்ற பகீர் குற்றச்சாட்டால் பரபரத்துக் கிடக்கிறது காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பழைமையான மடம். இதன் 232-வது மடாதிபதியாக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் உள்ளார். இவர், நித்யானந்தா சொல்வதையே கேட்டு நடப்பதாகவும், மடத்தின் ஒழுக்கநெறிகளை மீறிச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள், தொண்டை மண்டல முதலியார் சங்கத்தினர்.

“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!

தொண்டை மண்டல முதலியார் சங்கத்தின் நிறுவனத் தலைவர் விஜயகுமாரிடம் பேசினோம். ‘‘ஞானப்பிரகாச பரமாச்சாரியார் பதவிக்கு வந்ததிலிருந்தே ஆன்மிக விழாக்கள், பூஜைகள் என எதுவும் சரியாக நடக்கவில்லை. மடத்துக்குச் சொந்தமாகத் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புடைய சுமார் 200 ஏக்கர் நிலங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 66 வீடுகள் உள்ளன. வங்கியில் ஒன்றரைக் கோடி ரூபாய் உள்ளது. மடத்தில் கிடைத்த புதையல் வேறு உள்ளது.  இந்தச் சொத்துகளிலிருந்து எந்த வருமானமும் மடத்துக்குக் கிடைப்பதில்லை. அதற்கான முயற்சிகளையும் இவர் செய்யவில்லை.

சமூகத்தின் சார்பாக ஆதீனத்துக்கு ஒரு கார் வாங்கிக் கொடுக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தாமல், நித்யானந்தாவின் காரைத்தான் இவர் பயன்படுத்துகிறார். ‘திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள்’ எனப் பட்டம் பெற்ற பிறகு, பழைய பெயரைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், ‘உத்தமர்’ என்ற தனது பழைய பெயரை இவர் பயன்படுத்துகிறார். இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். உத்தமர் என்ற பெயரில் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!

இது ஒரு சந்நியாசி மடம். இங்கு பெண்கள் தங்கக் கூடாது. முதலில், நித்யானந்தாவின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பேர் இங்கு வந்தனர். அவர்களுடன் இப்போது பெண்களும் தங்கியுள்ளனர். இதனால், மடத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிட்டது. ‘ஆத்மலிங்கம்’ என்ற லிங்கத்தைத்தான் மடாதிபதி கழுத்தில் அணிய வேண்டும். மாறாக, நித்யானந்தா கொடுத்த மாலையையே அணிந்துகொள்கிறார். பூஜையறையில் நித்யானந்தாவின் படத்தை வைத்துத்தான், அவரின் சீடர்கள் பூஜை செய்து வருகிறார்கள். இந்த மடத்தில் தனிநபரை யாரும் வணங்கக் கூடாது. ‘நமச்சிவாய’ என்ற நாமம் ஒலிக்க வேண்டிய இடத்தில், ‘நித்யானந்தா வாழ்க’ எனத் தனிநபர் துதிபாடுகிறார்கள். நித்யானந்தா என்றாலே பெண்களைப் பற்றிய கிசுகிசுக்கள்தான் அதிகமாக வருகின்றன. இந்தப் பிரச்னைகள் காஞ்சிபுரம் மடத்துக்கு வரக்கூடாது என நினைக்கிறோம்” என்றார் வேதனையுடன்.

“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!

அனைத்து முதலியார் சங்க ஒருங்கிணைப்பாளர் பாபு, “ஆதீனம் செய்யும் தவறுகள் தொடர்பாகத் தொண்டை மண்டல சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தோம். அவரும் ஆதீனத்திடம் பேசினார். இதுதொடர்பாக ஆதீனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தமிழகம் முழுவதிலும் உள்ள தொண்டை மண்டல ஆதீன நிர்வாகக் குழு நிர்வாகிகளை அழைத்திருந்தோம். அன்று நாங்கள் மடத்துக்குச் சென்றபோது, அங்கு பூட்டுப் போடப்பட்டிருந்தது. உள்ளே நித்யானந்தாவின் ஆட்கள் இருந்தனர். வெளியே காவல்துறையினர் பாதுகாப்புக்கு இருந்தனர். அதன்பிறகு ‘ஆதீனத்தைக் காணவில்லை’ என்று சிவகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தோம்” என்றார்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மடத்துக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ரமணி வந்தார். அவர், நித்யானந்தாவின் சீடர்களிடம் விசாரணை நடத்தினார். ஆதீனத்திடம் போனில் பேசியபோது, அவர் பூஜைக்காக பெங்களூருவில் இருப்பதாகச் சொன்னார். அதிகாரிகள் வரச் சொன்னதும், அன்று இரவே காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார். பிறகு அவரிடம் அறநிலையத் துறை அதிகாரிகள் பேசிவிட்டுப் போனார்கள்.

“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!

மடத்துக்குச் சென்றோம். லேப்டாப் உள்ளிட்ட ஹைடெக் வசதிகளுடன் நித்யானந்தாவின் சீடர்கள் தங்கியிருந்தனர். அவர்களிடம் பேசினோம். “சீடர்கள் கடந்த நான்கு வருடங்களாக இங்கே வந்து தங்கிப் பயிற்சி பெற்றுவிட்டுச் செல்கிறார்கள். பயிற்சிபெறுவதற்காக மட்டுமே வந்துள்ளோம். மடத்தின் சொத்துகள் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.” என்றனர்.

குற்றச்சாட்டுகள் குறித்து, ஆதீனம் ஞானப்பிரகாசப் பரமாச்சாரியாரிடம் பேசினோம். “மடத்துக்குச் சொந்தமான எல்லா சொத்துகளும் அப்படியேதான் உள்ளன. ஒரு சென்ட் நிலம் கூட யாருக்கும் செல்லவில்லை. மடத்தை நித்யானந்தா கைப்பற்றப்போகிறார் என்பதெல்லாம் வடிகட்டிய பொய். என் மீது தேவையில்லாமல் வீண் பழியைச் சிலர் சுமத்துகின்றனர். யார் வேண்டுமானாலும் புகார் எழுப்பட்டும். அதை நான் நீதிமன்றத்தில் சந்திப்பேன்” என்றார் அதிரடியாக.

முதலியார் சங்கத்தினரோ ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் எனப் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

நித்யானந்தா என்றாலே சர்ச்சைகள்தானே!

- பா.ஜெயவேல்

“உங்கள் வீட்டுக்குள் நாங்கள் வந்தால் சும்மா இருப்பீர்களா?”

“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!

‘திருவண்ணாமலை பவளக்குன்று மலையில் உட்கார்ந்திருந்தபோதுதான் எனக்கு ஞானம் கிடைத்தது. எனவே, அந்த மலை எனக்குத்தான் சொந்தம்’ என்று நித்யானந்தா உரிமை கொண்டாடி வருகிறார். சுமார் 3,100 ஏக்கர் பரப்பில் கிரிவலப்பாதையில் இருக்கும் அரசு இடமான பவளக்குன்று மலையில் ஆடம்பர ஆசிரமம் அமைக்க வேண்டும் என்பது நித்யானந்தாவின் கனவு. இதனை எதிர்ப்பவர்கள் மீது சமூக வலைதளங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் நித்யானந்தாவின் சீடர்கள். தற்போது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் கருப்பு கருணாவைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்.

“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா?” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்!

“மலையை ஆக்கிரமிக்கும் முயற்சியை நாங்கள் மக்கள் போராட்டம் மூலம் தடுத்து நிறுத்தினோம். இதனால் ஆத்திரம் அடைந்து, திருவண்ணாமலையில் இருக்கும் சில அமைப்புகளைத் தூண்டிவிட்டு எங்களுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டச் சொன்னார்கள். நித்யானந்தாவின் சீடர்கள், சமூக வலைளதங்களில் என்மீது தரக்குறைவான தாக்குதல் நடத்திவருகிறார்கள். என் குடும்பத்தினரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்கள். என் ஃபேஸ்புக் பக்கத்தில் கீழ்த்தரமான முறையில் கமென்ட்களைப் பதிவிட்டு வருகிறார்கள். பவளக்குன்று மலையை ஆக்கிரமிக்கும் நித்யானந்தாவின் தொடர் முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், த.மு.எ.க.ச-வும்தான் மக்களுடன் சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனால் ஆத்திரடைந்துள்ள நித்யானந்தா தரப்பு, எங்களில் இரண்டு பேரையாவது போட்டுத்தள்ளினால்தான், ஓர் அச்சத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறது. கடந்த வாரம் என் வீட்டைச் சிலர் நோட்டம்விட்டுச் சென்றுள்ளனர். இதுபற்றி போலீஸில் புகார் செய்துள்ளேன். டி.ஜி.பி-யிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் புகார் அளித்திருக்கிறார்” என்றார் கருப்பு கருணா.

திருவண்ணாமலை எஸ்.பி-யான பொன்னியிடம் கேட்டபோது, “புகார் வந்துள்ளது. இதுபற்றி விசாரித்து வருகிறோம். விசாரணையின் முடிவில் வழக்குப் பதிவுசெய்வோம்” என்றார்.

பவளக்குன்று மலையில் நித்யானந்தா சீடர்களின் நடமாட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டு  அங்கு சென்றோம். நித்யானந்தாவின் இரண்டு சீடர்கள் அங்கு இருந்தனர். நம்மைப் பார்த்தவுடன், “நீங்கள் யார்?” என்று மிரட்டலுடன் கேட்டனர். “சும்மா இந்த இடத்தைப் பார்க்க வந்தோம்” என்றோம். “இங்கெல்லாம் வரக்கூடாது” என்றார்கள். “ஏன் வரக்கூடாது?” என்று கேட்டதற்கு, “உங்கள் வீட்டுக்குள் நாங்கள் அனுமதியின்றி வந்தால் சும்மா இருப்பீர்களா?” என்று கேட்டார்கள்.

அரசு நிலம் இப்போது நித்யானந்தாவின் வீடா?

- கா.முரளி