Published:Updated:

‘‘கிரிமினல் பின்னணி கொண்டவர் துணைவேந்தரா?’’

‘‘கிரிமினல் பின்னணி கொண்டவர் துணைவேந்தரா?’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘கிரிமினல் பின்னணி கொண்டவர் துணைவேந்தரா?’’

கோர்ட்டுக்கு வந்த காமராசர் பல்கலைக்கழக விவகாரம்!

‘‘கிரிமினல் பின்னணி கொண்டவர் துணைவேந்தரா?’’

கோர்ட்டுக்கு வந்த காமராசர் பல்கலைக்கழக விவகாரம்!

Published:Updated:
‘‘கிரிமினல் பின்னணி கொண்டவர் துணைவேந்தரா?’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘கிரிமினல் பின்னணி கொண்டவர் துணைவேந்தரா?’’
‘‘கிரிமினல் பின்னணி கொண்டவர் துணைவேந்தரா?’’

‘எங்களிடம் கட்டாயப்படுத்திக் கையெழுத்து வாங்கினார்கள்’ என்று துணைவேந்தர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த இரண்டு பேர் கோர்ட்டில் சொல்ல, மதுரை காமராசர் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தர் செல்லத்துரையின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது.

காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து, மதுரை மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் லயோனல் அந்தோணிராஜ், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், வழக்குத் தொடர்ந்தார். ‘செல்லத்துரை பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இல்லாதவர். பல்கலைக்கழகப் பாதுகாப்புக்குழு கன்வீனராக செயல்பட்ட பேராசிரியர் சீனிவாசனைக் கொலை செய்ய முயன்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்டார். அப்படிப்பட்டவரைத் துணைவேந்தராக நியமித்ததை ரத்துசெய்ய வேண்டும்’ என வழக்கில் குறிப்பிட்டிருந்தார் லயோனல் அந்தோணிராஜ்.

‘‘கிரிமினல் பின்னணி கொண்டவர் துணைவேந்தரா?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்பம் முதலே செல்லத்துரை தேர்வு விஷயத்தில் சர்ச்சைகள் தொடர்ந்தன. “துணைவேந்தர் தேர்வுக்குழுவின் கன்வீனர் முருகதாஸ் சரியில்லை; தேர்வில் முறைகேடு நடைபெறுகிறது” என்று அறிவித்துவிட்டு, உறுப்பினர் குழுவில் இருந்து வெளியேறிய பேராசிரியர் மு.ராமசாமியிடம் பேசினோம். “இந்தக் கமிட்டிக்குள்ளே போன பிறகுதான் இது அரசியலும், பணமும் விளையாடுகிற இடமென்று தெரிந்தது. கன்வீனராக வந்த முருகதாஸ், ‘துணைவேந்தர் பதவிக்குக் குற்ற வழக்குகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது’ என்றவர், சில நாள்கள் கழித்து, ‘அந்த நிபந்தனையை எடுத்துவிட வேண்டும்’

‘‘கிரிமினல் பின்னணி கொண்டவர் துணைவேந்தரா?’’

என்றார். ‘ஏன்’ என்ற கேள்விக்கு எந்தப் பதிலும் இல்லை. ‘விண்ணப்பங்கள் எத்தனை வந்துள்ளன’ எனக் கேட்டதற்கு ‘அதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். ஆவணங்களின்படி வந்த விண்ணப்பங்கள் 112. ஆனால், முருகதாஸ் சொன்ன எண்ணிக்கை 144. அப்போதே எனக்கு அவர்மேல் நம்பிக்கை போய்விட்டது. தனக்கு வேண்டப்பட்டவர்களை எல்லாம் சேர்த்திருந்தார். இதற்குமேல் குழுவில் இருந்தால் நமக்கு அவப்பெயர் வரும் என்பதால் இவர் மீதான குற்றச்சாட்டுகளை கவர்னருக்கு அனுப்பிவிட்டு விலகினேன். அதற்கு கவர்னர் மாளிகையிலிருந்து, ‘நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று சொல்லாமல், என்னை ‘ரிலீவ் செய்வதாக’ பதில் அனுப்பினார்கள்’’ என்றார்.

இப்போது ‘நிர்பந்தத்தால் மட்டுமே செல்லத்துரையைத் துணைவேந்தராகத் தேர்வு செய்தோம்’ என்று கோர்ட்டில் பதில் மனு செய்திருப்பவர்கள், துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினர்களான ஹரீஷ் மேத்தா,  ராமகிருஷ்ணன் ஆகியோர்.

‘‘இப்போது கோர்ட்டில் கூறிய விவரங்களை, செல்லத்துரையைத் துணைவேந்தராக அறிவிக்கும் முன் ஏன் கூறவில்லை?” என்று ஹரீஷ் மேத்தாவிடம் கேட்டோம். ‘‘நானும் ராமகிருஷ்ணனும் தொடர்ந்து கூறிக்கொண்டுதான் இருந்தோம். ‘துணைவேந்தர் பதவிக்கு செல்லத்துரை கொஞ்சமும் தகுதியில்லாதவர். அவரை லிஸ்ட்டில் சேர்க்க வேண்டாம்’ என்று சொன்னதற்கு, ‘அவர் பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறையில் டைரக்டராக இருந்திருக்கிறார்’ என்றார் முருகதாஸ். அதெல்லாம் பேராசிரியர் பணிக்கு இணையாகாது என்று சொல்லி, அவர் மீது வழக்கு உள்ளதையும் சுட்டிக்காட்டினோம். அவ்வளவு சொல்லியும் கடைசி நாளில் கவர்னருக்குக் கொடுக்கும் பட்டியலில் அவர் பெயரைச் சேர்த்துவிட்டார் முருகதாஸ். நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால், நடந்த உண்மைகளை இங்கு சொல்கிறோம்’’ என்றார். 

‘‘கிரிமினல் பின்னணி கொண்டவர் துணைவேந்தரா?’’

முருகதாஸிடம் பேசினோம். “எல்லாம் முறைப்படிதான் நடந்தது. பதவி கிடைக்காதவர்கள் வதந்தி பரப்புகிறார்கள். ராமசாமிகூட விண்ணப்ப எண்ணிக்கை முரண்பாடாக இருக்கிறது என்றுதான் ராஜினாமா செய்தார். என்மேல் எந்தப் புகாரும் சொல்லவில்லை. மூன்று பேர் கொண்ட இறுதியான லிஸ்ட்டைத் தயாரித்தவரே ராமகிருஷ்ணன்தான். அகரவரிசைப்படி செல்லத்துரை, மரியஜான், பெருமாள் சாமி என மூன்று பேர் அடங்கிய லிஸ்ட்டைக் கொடுத்தோம். கவர்னர், அவர்களிடம் நேர்காணல் நடத்தித்தான் செல்லத்துரையைத் தேர்வுசெய்தார். இதில் எந்தத் தவறும் நடக்கவில்லை. நீதிமன்றத்தில் அனைத்து விவரங்களையும் ஆதாரத்துடன் தெரிவிப்போம்’’ என்றார்.

இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருந்த மரியஜான், ‘பத்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் செல்லத்துரைக்கு இல்லை. அவரைத் துணைவேந்தராக நியமித்தது செல்லாது’ என நீதிமன்றத்தில் மனு போட்டிருகிறார்.

‘‘இது  ஜோடிக்கப்பட்ட வழக்கு. என் பெயரைக் கெடுக்க பெரும் சதித்திட்டம் நடக்கிறது. ஆனால், சத்தியம்தான் கடைசியில் வெல்லும்.  கலக்கிவிட்டுப் பார்க்க நான் ஒன்றும் குட்டையில்லை, நீரோடை. கண்டிப்பாக இந்த வழக்கில் சட்டபூர்வமாக வெற்றி காண்பேன்’’ என்கிறார் செல்லத்துரை.

கர்ம வீரர் பல்கலைக்கழகத்தில் கரன்சி புரள்கிறது!

- செ.சல்மான், படங்கள்: வி.சதீஷ்குமார்