Published:Updated:

“மீம்ஸ் போட்டால் இன்டர்நெட் நஹி!”

“மீம்ஸ் போட்டால் இன்டர்நெட் நஹி!”
பிரீமியம் ஸ்டோரி
“மீம்ஸ் போட்டால் இன்டர்நெட் நஹி!”

“மீம்ஸ் போட்டால் இன்டர்நெட் நஹி!”

“மீம்ஸ் போட்டால் இன்டர்நெட் நஹி!”

“மீம்ஸ் போட்டால் இன்டர்நெட் நஹி!”

Published:Updated:
“மீம்ஸ் போட்டால் இன்டர்நெட் நஹி!”
பிரீமியம் ஸ்டோரி
“மீம்ஸ் போட்டால் இன்டர்நெட் நஹி!”

‘என்ன இன்னிக்கு எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க? சரி, ஏதாவது அறிவிப்பு விட்டு ஆப்பு வைப்போம்’ என்கிற ரேஞ்சுக்கு இறங்கியடிக்கிறது மத்திய அரசு. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி-யைத் தொடர்ந்து ‘சமையல் எரிவாயுவுக்கு மானியம் கிடையாது’ என அறிவித்து... அப்புறம், ‘ஐயோ அதை நான் சொல்லலை, நான் வாயை குவிக்க, யாரோ டப் பண்ணிட்டாங்க’ எனப் பின் வாங்கியிருக்கிறது மத்திய அரசு. போதாக்குறைக்கு மோடியின் அசிஸ்டென்ட்களான எடப்பாடி அண்ட் கோ, ‘ஃப்ரிட்ஜ் இருக்கா, என்னது ஏ.சி இருக்கா? அப்ப ரேஷன் கார்டு கிடையாது போ’ என விரட்டுகிறது. அனேகமாக, அடுத்து இந்த மாதிரியான அறிவிப்புகள் கூட வரலாம். யார் கண்டது?

• சதா நாட்டுக்காகவே சாப்பிட்டு, நாட்டுக்காகவே குளித்து, நாட்டுக்காகவே ரோஸ் பவுடர் போட்டு வாழும் மோடிஜி, நேரங்காலம் எல்லாம் பார்க்காமல் ‘மன் கி பாத்’ என ரேடியோவில் பேசினால், ‘ச்சை இந்தப் பாட்டு நல்லாவே இல்ல’ எனச் சட்டெனக் கடந்துவிடுகிறார்கள் சாமானியர்கள். அப்படி தேசபக்தி இல்லாமல் அலைவரிசை மாறுபவர்களுக்கு எஃப்.எம் வசதியையே கட் செய்யும் அறிவிப்பு வெளியாகலாம்.

“மீம்ஸ் போட்டால் இன்டர்நெட் நஹி!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலிக்கு அடுத்தபடியாக அதிகம் வறுபடுவது ‘அக்கா’ காயத்ரிதான். யார் இந்த காயத்ரி மாஸ்டர்? தமிழக பி.ஜே.பி-யின் பத்து தூண்களில் ஒருவர். மொத்தம் இருப்பதே பத்து பேர்தான். அதிலும் ஒருவர் இப்படி வறுபட்டால் கட்சிக்குத்தானே கெட்ட பெயர்! எனவே, ‘இனி காயத்ரியைத் திட்டும் வீடுகளுக்கு எல்லாம் கேபிள் கனெக்‌ஷன் கிடையாது’ என்ற அறிவிப்பு வெளியாகலாம்.

• ‘ஃப்ரிட்ஜ் வெச்சுக்குற அளவுக்கு வசதி இருந்தா ஏன் ரேஷன் கார்டு?’ என்பதுதான் இவர்களின் அகா துகா லாஜிக்காக இருக்கிறது. இதே லாஜிக்படி யோசித்தால் அடுத்து இவர்கள் கை வைக்கப்போவது மின்சாரத்தில்தான். யு.பி.எஸ் இருக்கும் வீடுகளில் எல்லாம் இரண்டு மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்துவார்கள். இதனால் சேமிக்கப்படும் மின்சக்தி, கரன்ட்டே இல்லாமல் கஷ்டப்படும் அமைச்சர்களின் கார் ஷெட்களுக்கும், பண்ணை வீடுகளுக்கும்  பிரித்து வழங்கப்படும்.

“மீம்ஸ் போட்டால் இன்டர்நெட் நஹி!”

• மோடிக்கு அடுத்தபடியாக நாடி, தாடி எல்லாம் தேசபக்தி பீறிட்டு ஓடுவது பாபா ராம்தேவுக்குத்தான். அப்பேர்ப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகியின்(?) நிறுவனமான பதஞ்சலியின் பொருட்களைப் புறக்கணிப்பது எவ்வளவு பெரிய துரோகம்? அதனால் ‘இனி பதஞ்சலி சமையல் பொருட்களை பயன்படுத்தாதவர்களுக்கு மானியம் மட்டுமல்ல, கேஸ் சிலிண்டரே கட்’ என்ற அறிவிப்பு வரும். பாருங்க மக்களே!

• ‘என்னது ஆதார் கார்டு இல்லையா? கன்னத்துல போடு கன்னத்துல போடு’ என அலறுகிறது மத்திய அரசு.  ‘கேஸ் மானியம் வேணுமா? அப்ப ஆதார் கார்டு வாங்கு’ என வாங்க வைத்து, ‘வாங்கிட்டியா? இப்ப மானியம் கிடையாது போ’ என விபரீத விளையாட்டு விளையாடுகிறார்கள். இதன் உச்சமாக, ‘ஆதார் கார்டு இல்லாதவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு ரத்து’ என்ற அறிவிப்பும் வெளியாகலாம். இல்லாத கார்டை எப்படி ரத்து பண்ணுவாங்க என்ற லாஜிக் கவலை எல்லாம் நமக்குத்தான். ‘இட்ஸ் எ சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என இதற்கும் குதூகலிக்கும் கூட்டமும் இருக்கத்தான் போகிறது.

ன்னதான் புது அறிவிப்புகள் வெளியிட்டாலும், போட்டோஷாப் ஜித்து வேலைகள் பார்த்தாலும், மத்திய அரசை ஒயிட்ரைஸ் வெள்ளைசாமியாகத்தான் டீல் செய்கிறார்கள் நெட்டிசன்கள். இந்த நிலைமையை மாற்ற, ‘இனி மத்திய அரசைக் கண்டித்து, கலாய்த்து ஸ்டேட்டஸ், மீம்ஸ் போடுபவர்களுக்கு இன்டர்நெட் கனெக்‌ஷன் கிடையாது’ என அறிவிப்பு வெளியாகலாம். ஆனா, இதுக்கும் வெச்சு செய்வாங்களே பாஸ்!

கற்பனை: எஸ்.நித்திஷ்
ஓவியம்: கோ.ராமமூர்த்தி