Published:Updated:

வியூகம் வகுக்கும் வருமானவரித் துறை! - வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்

வியூகம் வகுக்கும் வருமானவரித் துறை! - வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
வியூகம் வகுக்கும் வருமானவரித் துறை! - வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்

வியூகம் வகுக்கும் வருமானவரித் துறை! - வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்

வியூகம் வகுக்கும் வருமானவரித் துறை! - வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்

வியூகம் வகுக்கும் வருமானவரித் துறை! - வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்

Published:Updated:
வியூகம் வகுக்கும் வருமானவரித் துறை! - வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
வியூகம் வகுக்கும் வருமானவரித் துறை! - வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்

நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற பிரதமருடன் உட்கார்ந்து பேசும் தகுதியில் இருந்தாலும், நோட்டீஸ் அனுப்பி வரச்சொல்லி விசாரிக்கிறது வருமானவரித் துறை. தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் போல இத்தனை சர்ச்சைகளில் எந்த அமைச்சரும் இதுவரை சிக்கியதில்லை. ரெய்டு முதல், குவாரியின் சொத்துகள் வரை விஜயபாஸ்கர் விவகாரத்தில் எல்லாம் அதிரடிதான்.  இத்தனைக்கும் அசராத மனிதரை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ எனக் கேட்காதவர்கள் கிடையாது.

விஜயபாஸ்கர் முதல் குறி!


மணல் மாஃபியாவாக வலம் வந்த சேகர் ரெட்டியைக் கைது செய்தபோதே, அவருடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் பலருக்கும் குறி வைத்தனர் வருமானவரித் துறையினர். அதில் முதலில் சிக்கியவர், விஜயபாஸ்கர். அ.தி.மு.க-வின் அதிகாரச் சக்தியாக இருந்த சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான நபராக விஜயபாஸ்கரை மத்திய அரசு பார்த்தது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரனின் நம்பிக்கைக்குரிய நபராக வலம்வந்த விஜயபாஸ்கர் மீது வருமானவரித் துறை கண்வைத்தது. அதிகாலை நேரத்தில் அதிரடியாக விஜயபாஸ்கரின் அரசு பங்களாவுக்குள் நுழைந்தனர். ஆர்.கே நகர் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களைக் கைப்பற்றினார்கள். சுமார் 89 கோடி ரூபாய் பங்கு பிரிக்கப்பட்டு, பல அமைச்சர்கள் பெயர் டைப் செய்யப்பட்ட ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல், விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு என்று பல இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.

வியூகம் வகுக்கும் வருமானவரித் துறை! - வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்

அதிகாரிகள் காட்டிய முனைப்பு!

வருவாய் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் முரளிகுமார் மற்றும் இயக்குநர் பவன் குமார் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த ரெய்டு, விஜயபாஸ்கருக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. விஜயபாஸ்கரின் மனைவி, அப்பா, அண்ணன் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களையும் விசாரணைக்கு அழைத்தனர். விஜயபாஸ்கரைக் காப்பாற்ற தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் சில அமைச்சர்கள் வருமானவரித் துறை அதிகாரிகளோடு மல்லுக்கட்டினர்.ஆனால், வருமானவரித் துறையினரோ விஜயபாஸ்கர் ஆதரவாளர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர். அந்த அளவுக்கு வருமானவரித் துறையின் பார்வை விஜயபாஸ்கர் மீதே விழுந்து கிடந்தது.

அடுத்தடுத்த சிக்கல்!


வருமானவரி ரெய்டு முடிந்த சில நாள்களில் விஜயபாஸ்கருக்கு அடுத்த சிக்கல் ஏற்பட்டது. அவருடைய நண்பர் நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியன் தற்கொலை செய்துகொண்டார். அதில் விஜயபாஸ்கரின் தலையும் உருண்டது. தற்கொலைக்குக் காரணம் குறித்து சுப்பிரமணியன் எழுதிய கடிதம், விஜயபாஸ்கரைக் கடைசி நேரத்தில் காப்பாற்றியது. அதன்பிறகு குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கர் சிக்கினார். மாதவ ராவ் என்கிற குட்கா வியாபாரி விஜயபாஸ்கருக்குப் பணம் கொடுத்தாக வெளியான ஆவணங்கள், பெரும் புயலைக் கிளப்பின. ‘‘மாதவ ராவ் யார் என்றே எனக்குத் தெரியாது’’ என விஜயபாஸ்கர் விளக்கம் கொடுத்தார். குட்கா பொருள்கள் தாராளமாகப் புழங்குவதாக சட்டமன்றத்திலே தி.மு.க புகாரைக் கிளப்பி விஜயபாஸ்கருக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. தொடர் குற்றச்சாட்டில் சிக்கிவரும் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று மு.க. ஸ்டாலின், ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

விஜயபாஸ்கரின் பின்புலம்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் இவருடைய சொந்த ஊர். இவருடைய அப்பா சின்னதம்பி அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்று ஒன்றிய சேர்மனாக இருந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார் விஜயபாஸ்கர். அதேபோல், மிக இளம்வயதிலே நேரடியாக ஜெயலலிதாவினால் சீட் வழங்கப்பட்டு எம்.எல்.ஏ-வாகவும் வெற்றி பெற்றார். குவாரி தொழிலைத் தொடங்கியவர், அதன்பிறகுக் கான்ட்ராக்ட், கல்லூரி என விஸ்வரூபம் எடுத்தார். இப்போது வருமானவரித் துறையால் முடக்கப்பட்டிருக்கும் ராசி புளூ மெட்டல் நிறுவனம் போல, பல கிரஷர்களும் குவாரிகளும் விஜயபாஸ்கரின் உறவினர்கள் பெயரில் உள்ளன. இந்த கிரஷர்களால்தான் இப்போது சிக்கலும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வியூகம் வகுக்கும் வருமானவரித் துறை! - வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கரோடு சுப்பையா!

விஜயபாஸ்கரின் ராசி புளூ மெட்டல் நிறுவனத்திலும், அதை ஒட்டிய கல் குவாரியிலும் இரண்டு முறை வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டன. ஆய்வு செய்தபோது, குவாரி தொடர்பான ஆவணங்களில் விஜயபாஸ்கர் பெயரோடு சுப்பையா என்கிற பெயரிலும், விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார் பெயரிலும் சில ஆவணங்கள் இருந்துள்ளன. அந்த ஆவணங்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விஜயபாஸ்கருக்கு சுப்பையா ஒருவகையில் உறவினர் எனச் சொல்லப்படுகிறார். இந்தச் சொத்துக்களை இடைப்பட்ட காலத்தில் யாருக்கும் விற்றுவிடக் கூடாது என்பதற்கான தடுப்பணைகளை ஏற்படுத்திய வருமானவரித் துறை, அடுத்த அஸ்திரத்தை வீசியது.

சொத்துகள் முடக்கம்

‘‘விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களோடு அவருடைய சொத்துகளையும் இணைத்தனர் வருமானவரித் துறையினர். இப்போது அவருக்குச் சொந்தமான குவாரி ஆவணங்களையும் அதில் இணைத்துவிட்டனர். குவாரி மற்றும் அதைச் சுற்றியுள்ள 97 ஏக்கர் இடம் இந்த வழக்கின் ஆவணங்களோடு இணைக்கப்பட்டு இருப்பதால், இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை இந்தச் சொத்துகளை விஜயபாஸ்கர் யாரிடமும் விற்க முடியாது. அதே நேரம் குவாரியை இயக்குவதில் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. குவாரியின் சர்வே எண்ணோடு கடிதம் ஒன்றை சென்னை வருமானவரித் துறை அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டப் பதிவாளர் சசிகலாவுக்கு, கடந்த ஜூலை 30-ம் தேதி அனுப்பினார்கள். அந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்து இந்தச் சொத்துகள் மீதான பரிவர்த்தனைக்குத் தடை விதித்தார் சசிகலா” என்கிறார்கள் அதிகாரிகள்.

விஜயபாஸ்கரின் குவாரிக்கான இடத்தை வருமானவரித் துறையின் ஆவணங்களோடு பதிவு செய்த சசிகலா, திடீர் என விருதுநகருக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் சர்ச்சைக்கு உள்ளானது.

சம்மன் மேல் சம்மன்!

வருமானவரித் துறை நடத்திய சோதனைக்குப் பிறகு இதுவரை நான்கு தடவை விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் குடும்பத்தையும் வருமானவரித் துறை விசாரித்துள்ளது. டெல்லியிலிருந்து கடந்த 3-ம் தேதி சென்னை வந்த நிலையில், அவருக்கு வருமானவரித் துறை சம்மன் அனுப்பியது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வில் இருந்தபோது அவருக்கு இந்தத் தகவல் சொல்லப்பட்டது. மாலையில் விசாரணைக்கு அவர் ஆஜர் ஆனார். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ரகம் வாரியாகப் பிரித்து விஜயபாஸ்கருக்குக் கிடுக்குப்பிடி போட்டு வருகிறது வருமானவரித் துறை.

‘‘120 குவாரிகள் உள்ளன!’’

இந்த விவகாரம் மற்றும் விசாரணை தொடர்பாக விஜயபாஸ்கரிடம் பேசினோம். ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 120 புளூ மெட்டல் கிரஷர்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் பிரதான தொழிலே கிரஷர்களும் குவாரிகளும்தான். நான் முழு நேர அரசியல்வாதியாக இருந்தாலும் எனக்கென்று தொழில் வேண்டும் என்றுதான் இந்த கிரஷரை, அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது 2008-ம் ஆண்டு ஆரம்பித்து நடத்தி வருகிறேன். ராசி புளூ மெட்டல்ஸ் என்ற அந்த கிரஷர் என் பெயரில்தான் உள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு முறையான அனுமதியுடன் நடத்தும் இந்த கிரஷருக்குத் தேவையான பாறைகளைக் குவாரியிலிருந்து உடைத்துத் தரும் சப்-கான்ட்ராக்டர்தான் சுப்பையா. வருமானவரிச் சோதனையில் புகார் கூறப்பட்ட ஆவணங்கள் தொடர்பான சொத்துகளை அந்த வழக்கோடு இணைப்பது (அட்டாச்மென்ட்) பொதுவான நடைமுறை. ஆனால், சொத்து முடக்கம் என்று தவறாக எழுதுகிறார்கள். இப்போதும் அந்த கிரஷரில் வழக்கமான கல் உடைக்கும் பணி நடந்துகொண்டுதான் இருக்கிறது’’ என்றார்.

வருமானவரித் துறையின் சுழலில் இருந்து விஜயபாஸ்கர் அவ்வளவு எளிதில் விடுபட முடியாது!

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்
படங்கள்: ம.அரவிந்த், சி.வெங்கடேசன்
ஓவியம்: பிரேம் டாவின்ஸி

விருது வரும் முன்னே... வில்லங்கம் வரும் பின்னே!

டந்த ஏப்ரல் 7-ம் தேதி, டெல்லியில் ஜனாதிபதி கரங்களால் ஒரு விருதைப் பெற்றுக்கொள்ள இருந்தார் விஜயபாஸ்கர். அன்று டெல்லிக்கே போக விடாதபடி, விஜயபாஸ்கரின் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை நடத்தி அதிர்ச்சி கொடுத்தது.

புதுக்கோட்டையில் கடந்த ஜூலை 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கம்பன் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. நிறைவு நாளான 30-ம் தேதி மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடந்த விழாவில், புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி அமையப் பாடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கரைப் பாராட்டி விருதும் சான்றிதழும் அளிக்கப்பட்டது. இரண்டே நாளில், விஜயபாஸ்கரின் சொத்துகளை வருமானவரித் துறை அதிகாரிகள் முடக்கியதாகத் தகவல் வெளியாக... சென்டிமென்டாக விஜயபாஸ்கர் தரப்பு அப்செட் ஆனது. ‘‘இனிமே நமக்கு விருதே வேண்டாம்ணே’’ என விஜயபாஸ்கருக்கு விபரீத அட்வைஸ் கொடுக்கிறார்கள் நண்பர்கள்!

- சி.ய.ஆனந்தகுமார்