Published:Updated:

கூவத்தூரில் குறட்டை... பெங்களூரில் ஆக்‌ஷன்!

கூவத்தூரில் குறட்டை... பெங்களூரில் ஆக்‌ஷன்!
பிரீமியம் ஸ்டோரி
கூவத்தூரில் குறட்டை... பெங்களூரில் ஆக்‌ஷன்!

ரெய்டால் அலற வைத்த பி.ஜே.பி

கூவத்தூரில் குறட்டை... பெங்களூரில் ஆக்‌ஷன்!

ரெய்டால் அலற வைத்த பி.ஜே.பி

Published:Updated:
கூவத்தூரில் குறட்டை... பெங்களூரில் ஆக்‌ஷன்!
பிரீமியம் ஸ்டோரி
கூவத்தூரில் குறட்டை... பெங்களூரில் ஆக்‌ஷன்!

மிழகத்தின் ஆளும்கட்சியான அ.தி.மு.க, சசிகலா அணி, பன்னீர் அணி எனக் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாக உடைந்தது. அப்போது சசிகலா அணி, அ.தி.மு.க-வின் 122 எம்.எல்.ஏ-க்களையும் கொத்தாக அள்ளிச் சென்று கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க(அடைத்து) வைத்தது. தமிழகத்தை 10 நாட்களுக்கும் மேலாக காமெடி மேடையாக மாற்றி வைத்த அந்தக் காட்சிகள், தற்போது மோடியின் குஜராத் மாநிலத்தில் அரங்கேற்றப்படுகிறது... சர்வம் பி.ஜே.பி மயம்!

குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு மூன்று பேரைத் தேர்வு செய்ய, வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் சட்டப் பேரவை 182 சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியது. பி.ஜே.பி கூட்டணிக்கு 122 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 57 எம்.எல்.ஏ-க்கள், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மூன்று எம்.எல்.ஏ-க்கள் என அந்த அணிக்கு 60 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். பி.ஜே.பி இரண்டு பேரையும், காங்கிரஸ் ஒருவரையும் நிறுத்தி இருந்தால், மூன்று பேரும் போட்டியின்றித் தேர்வாகி இருக்க முடியும். ஆனால், பி.ஜே.பி-க்கு அரசியல் செய்ய ஒரு வாய்ப்பு, காங்கிரஸின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா மூலமாகக் கிடைத்தது.

கூவத்தூரில் குறட்டை... பெங்களூரில் ஆக்‌ஷன்!

குஜராத் மாநிலத்துக்கு இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர உள்ளது. அதைக் கணக்குப் போட்ட வகேலா, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்குக் கோரிக்கை வைத்தார். அதற்கு எந்தப் பதிலும் இல்லை. இதில் அதிருப்தி அடைந்த அவர், தனது ஆதரவு  எம்.எல்.ஏ-க்களோடு சேர்ந்து ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி வேட்பாளராக நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களித்தார். அடுத்த அதிரடியாக, தன்னுடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியில் இருந்தும் விலகினார். அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களோடு சேர்த்து மொத்தம் ஆறு பேர் அடுத்தடுத்து விலகினர்.

பி.ஜே.பி-யின் இரண்டு வேட்பாளர்களாக அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் வேட்பாளராக, சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் நிறுத்தப்பட்டார்.

பி.ஜே.பி-க்கு இரண்டு எம்.பி-க்களைத் தேர்வு செய்ததுபோக, அவர்களிடம் 29 எம்.எல்.ஏ-க்கள் கூடுதலாக இருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தி அரசியல் செய்ய நினைத்த பி.ஜே.பி, அகமது படேலை ஆட்டம் காண வைக்க, மேலும் ஒரு வேட்பாளரை அறிவித்தது. காங்கிரஸில் இருந்து விலகிய எம்.எல்.ஏ-வான பல்வந்த் சிங் ராஜ்புத் என்பவரையே தங்களின் மூன்றாவது வேட்பாளராக அறிவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூவத்தூரில் குறட்டை... பெங்களூரில் ஆக்‌ஷன்!

இதையடுத்து, குஜராத் அரசியல் களம் ரணகளமானது. பி.ஜே.பியின் பக்கம் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுப்பதற்குக் குதிரை பேரம் நடைபெற்றது. பதறியடித்த காங்கிரஸ் தலைமை, கட்சித் தாவலைத் தடுப்பதற்காக குஜராத்தைச் சேர்ந்த 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை ‘மாநிலக் கடத்தல்’ செய்துள்ளது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரம் பெங்களூருக்கு விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட அவர்கள், தற்போது பெங்களூரு அருகில் உள்ள ராம்நகர் மாவட்டம், பிடதி ஈகிள்டன் கோல்ஃப் ரிசார்ட்ஸில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாநில அரசு, இந்த எம்.எல்.ஏ-க்களுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது. எம்.எல்.ஏ-க்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் தனித் தனி சொகுசு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொருவருக்கும் தனித் தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

குஜராத்தையே காலி செய்துவிட்டு காங்கிரஸ் சென்றுவிட்டது என்று மக்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக இந்த 44 எம்.எல்.ஏ-க்களைத் தவிர ஏழு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் குஜராத்தில் உள்ள அகமது படேல் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கூவத்தூரில் குறட்டை... பெங்களூரில் ஆக்‌ஷன்!

இவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவதற்காக ராம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்நாடக மின்சாரத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரையும் அவரது தம்பியும்  எம்.பி-யுமான டி.கே.சுரேஷையும் காங்கிரஸ் தலைமை நியமித்து இருக்கிறது. இதனால், அமைச்சர் சிவக்குமாருக்குச் சொந்தமான வீடுகள் அலுவலகங்கள் மற்றும் டி.கே.சுரேஷ் வீடு, அலுவலகம், ரிசார்ட் அறைகள் என 35-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை 2-ம் தேதி சோதனை நடத்தியது. இதில் பல ஆவணங்களையும் ரொக்கமாக ஒன்பது கோடி ரூபாயையும் கைப்பற்றியதாக தகவல்கள் வந்திருக்கின்றன. ‘நீங்கள் கிளம்பி குஜராத் போங்கள்’ என எம்.எல்.ஏ-க்களிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கவனிச்சா ‘கவனிப்போம்’ல?

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி