Published:Updated:

“எக்ஸ்க்யூஸ் மீ... எல்லா பேரும் தப்பா இருக்கு!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“எக்ஸ்க்யூஸ் மீ... எல்லா பேரும் தப்பா இருக்கு!”
“எக்ஸ்க்யூஸ் மீ... எல்லா பேரும் தப்பா இருக்கு!”

“எக்ஸ்க்யூஸ் மீ... எல்லா பேரும் தப்பா இருக்கு!”

பிரீமியம் ஸ்டோரி

‘‘சார், இந்த அட்ரஸ் எங்கே இருக்கு?’’

‘‘நேரா போய் ரைட்ல திரும்பி, அப்படியே யு டர்ன் அடிச்சு, ஃபர்ஸ்ட் லெப்ட் திரும்பி, செகண்ட் ரைட்ல போனா நாலாவது வீடு.’’

‘‘நானும் காலையிலிருந்து தேடிக்கிட்டு இருக்கிறேன். யாருக்குமே தெரியலை. ரொம்ப நன்றி சார்...’’

ஆட்டோ டிரைவரிடமோ, தெருமுனை தள்ளுவண்டி அயர்ன் கடையிலோ விசாரித்த இந்த அனுபவம் கிட்டத்தட்ட எல்லோருக்குமே இருக்கும். இதற்குத் தீர்வு தந்தது, கூகுள் மேப். ‘வாயில இருக்கு வழி’ என்ற பழமொழிக்கு இப்போது வேலை இல்லை. கூகுள்ல இருக்கு வழி!

கூகுள் மேப்பை பார்த்தே யார் உதவியும் இல்லாமல் எந்த இடத்துக்கும் சென்றுவிடலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர் முதல், ஆப் சேவை தரும் கார் டிரைவர்கள் வரை எல்லோருமே கூகுள் நிறுவனத்தின் மேப் சேவையைப் பயன்படுத்துவதைக் கவனிக்கத் தவறியிருக்க மாட்டோம். இப்போது கூகுள் மேப்பில், ஊர்ப் பெயர்கள் மற்றும் இடங்களின் பெயர்களை அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்கள்.

“எக்ஸ்க்யூஸ் மீ... எல்லா பேரும் தப்பா இருக்கு!”

இதில் நம் செம்மொழியான தமிழ் எப்படி சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. குறிப்பாக சென்னையின் பெயர்கள்... ‘கூவம் நதி’ என்பது ‘காயம் ஆறு’ என்றும், ‘லஸ் அவென்யூ’ என்பது ‘லூஸ் அவனுக்கே’ என்றும் கூகுள் டிரான்ஸ்லேட்டரால் குதறப்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த சுந்தர்பிச்சைதான் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. கூகுள் பார்வைக்குச் சில சாம்பிள்கள் இங்கே.

என்னடா இது... தமிழுக்கு வந்த சோதனை!

- பொன்.திருமலை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு