Published:Updated:

ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிப் பிரிவு மட்டும் போதுமா?

ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிப் பிரிவு மட்டும் போதுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிப் பிரிவு மட்டும் போதுமா?

ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிப் பிரிவு மட்டும் போதுமா?

ணவக்கொலைகளைத் தடுக்கவும், கலப்புத்திருமண ஜோடிகளைப் பாதுகாக்கவும் தமிழகத்திலேயே முதல் காவல் பிரிவு, மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. ‘‘இது எங்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி’’ என்று சிலரும், ‘‘உயர் நீதிமன்றத்தை ஏமாற்ற அரசு செய்யும் வெறும்  கண்துடைப்புதான் இது’’ என்று சில சமூக ஆர்வலர்களும் சொல்கிறார்கள்.

ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிப் பிரிவு மட்டும் போதுமா?

கடந்த சில வருடங்களாகவே, சாதி வெறியால் காதலர்களை, காதல் தம்பதிகளை அல்லது பெற்ற மகளையே கொல்வது என்கிற கொடூரச்செயல் தொடர்கிறது. எனவே, ‘சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களைப் பாதுகாக்க தனிப் போலீஸ் பிரிவு வேண்டும்’ எனத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். இதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை. 

சாமுவேல்ராஜிடம் பேசினோம். ‘‘இது, எங்களுடைய தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த சிறு வெற்றி. கடந்த 2014-ம் ஆண்டு உசிலம்பட்டியைச் சேர்ந்த விமலாதேவி என்ற பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த திலீப்குமாரைத் திருமணம் செய்துகொண்ட அவரை, போலீஸ் ஸ்டேஷனுக்கு விவகாரம் போனபிறகு கொன்றார்கள். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும், சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டுமென்றும் வழக்குத் தொடர்ந்தோம். 2016-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, ஒன்பது வழிகாட்டுதல் விதிகளைத் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது நீதிமன்றம். அதில் ஒன்றுதான் காவல்துறையில் தனிப் பிரிவு அமைக்க வேண்டுமென்பது. ஆனால், அரசு அதைச் செய்யவில்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டோம். அந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில்தான், மதுரையில் இப்பிரிவைத் தொடங்கியுள்ளனர். இதைத் தமிழகம் முழுக்கத் தொடங்க வேண்டும். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்’’ என்றார் அவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிப் பிரிவு மட்டும் போதுமா?

ஆணவக்கொலைகளுக்கு எதிராக தொடர்ந்து இயங்கி வரும் எவிடென்ஸ் கதிரிடம் பேசினோம். ‘‘ஏற்கெனவே சமுக நீதிக்கென்று தனிப் பிரிவு, சிறார் நீதிக்காக தனிப் பிரிவு என்று சட்டப்படி உருவாக்கப்பட்ட பல பிரிவுகளே சரியாக செயல்படாதபோது, பேருக்குத் தொடங்கியுள்ள இப்பிரிவால் என்ன நன்மை என்று தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல், பல ஆணவக்கொலைகளுக்குப் பின்புலத்தில் காவல்துறையே இருந்துள்ளது. ஆணவக்கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். அதுதான் நிரந்தரத் தீர்வு’’ என்றார்.

நாகரிகமற்ற ஆணவக்கொலை எனும் கொடுமை மாற இந்தத் தனிப்பிரிவு உதவ வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

- செ.சல்மான்
படம்: வீ.சதீஷ்குமார்