மணல் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.

சிவகங்கை தேவகோட்டையில் இரவு நேரத்தில் மணிமுத்தாறு ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரனுக்குத் தகவல் வர, அவர் ஸ்பாட்டுக்குச் சென்று மணல் லாரியையும், டிராக்டரையும் பிடித்துள்ளார். ‘சிவகங்கை அ.தி.மு.க எம்.பி செந்தில்நாதன், அதிகாரிகளிடம் பேசி அந்த வாகனங்களை விடுவித்தார்’ எனச் சர்ச்சை கிளம்பியது.

மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுபவர், அ.தி.மு.க-வின் தேவகோட்டை ஒன்றிய இளைஞர் அணிச்செயலாளர் பிர்லா கணேசன்.

இதுபற்றி தேவகோட்டை தி.மு.க நகரச் செயலாளர் பாலமுருகனிடம் பேசினோம். “பிர்லா கணேசன்தான் மணிமுத்தாற்றிலும், அதையொட்டிய பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களிலும் விதிகளை மீறி மணலைச் சுரண்டி லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இதற்கு, எம்.பி செந்தில்நாதன், தாசில்தார், கனிமவளத் துறை அதிகாரிகள், போலீஸ் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். இதற்குமுன் ஒருமுறை காளீஸ்வரன், திருட்டு மண் அள்ளிய வண்டிகளைப் பிடித்து தாசில்தாரிடம் ஒப்படைத்தார். இந்தத் தகவல் தெரிந்து அந்த இடத்தைப் பார்வையிட கலெக்டர் வருவதற்குள், அங்கு வாழைக்கட்டையை நட்டு வைத்து தோட்டம் போல ஜோடித்தனர். ஆனாலும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்பட்டதற்கு கலெக்டர் அபராதம் விதித்தார். அது, இன்றுவரை வசூலிக்கப்படவில்லை. ஆனால், நேர்மையாகச் செயல்பட்ட காளீஸ்வரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

பிர்லா கணேசனிடம் பேசினோம். “இரு மாதங்களுக்கு முன்பு, என் பட்டா இடத்தில் மணல் அள்ளும்போது ஒரு டிராக்டர் பிடிக்கப்பட்டது. அதற்கு அபராதம் செலுத்தி விட்டேன். என் பட்டா நிலத்தில் செங்கல் சூளைக்காக மண் எடுக்கிறேன். அதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளேன். கலெக்டர் ஆய்வு நடத்தியபோது கூடுதலாக அள்ளப்பட்ட மண்ணுக்குப் பணம் கட்டச்சொல்லி யிருக்கிறார். அதைக் கட்டத் தயாராக இருக்கிறேன். ஆர்.ஐ மாற்றப்பட்டதற்கு நானோ எம்.பி-யோ காரணமல்ல” என்றார்.

ஆர்.ஐ காளீஸ்வரனிடம் பேசினோம். “பிர்லா கணேசன் மணல் குவாரியிலேயே ஒரு டிராக்டரைப் பிடித்தேன். அதன்பின், அனுமதியின்றி வரக்கூடிய மணல் வண்டிகளைத் தொடர்ச்சியாகப் பிடித்து மேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன். என் கடமையைச் செய்தேன். அதற்குப் பரிசாக சிவகங்கை மாவட்டத்தின் கடைசி வருவாய் கிராமமான மல்லலுக்கு மாற்றப்பட்டுள்ளேன்” என்றார் சகஜமாக.

துணிச்சலுக்குக் கிடைத்த பரிசு!

- தெ.பாலமுருகன்
படங்கள்: சாய் தர்மராஜ்