Published:Updated:

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி... நான்கு மணி நேரம் நடந்தது என்ன?

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி... நான்கு மணி நேரம் நடந்தது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி... நான்கு மணி நேரம் நடந்தது என்ன?

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி... நான்கு மணி நேரம் நடந்தது என்ன?

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி... நான்கு மணி நேரம் நடந்தது என்ன?

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி... நான்கு மணி நேரம் நடந்தது என்ன?

Published:Updated:
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி... நான்கு மணி நேரம் நடந்தது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி... நான்கு மணி நேரம் நடந்தது என்ன?

கஸ்ட் 16-ம் தேதி காலை 6.15 மணி. கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டுமுன் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் பரபரப்புடன் இருந்தனர். தலைவரின் பயணத்துக்காக பல மாதங்களாக வாசலில் காத்திருந்த கார் ஸ்டார்ட் செய்யப்பட, சிறிது நேரத்தில் லிஃப்ட் வழியாக வீல் சேரில் அழைத்து வரப்பட்டார் கருணாநிதி. காரின் லிஃப்ட் மூலம் உள்ளே அவர் அமர வைக்கப்பட, கார் காவேரி மருத்துவமனைக்குச் சென்றது. அங்கு காரை எதிர்பார்த்து பொன்முடியும் பூச்சி முருகனும் காத்திருந்தனர். ‘கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி’ என்ற செய்தி, அந்த அதிகாலை நேரத்தைப் பரபரப்பாக மாற்றியது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கருணாநிதிக்குச் சிறிய அளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக அவர் எடுத்துக்கொண்ட மாத்திரைகளால் அலர்ஜியாகி, ‘ஸ்டீவன்ஸ் ஜான்சன் சிண்ட்ரோம்’ என்ற பிரச்னை வந்தது. மருந்து அலர்ஜியால் உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்படும் பிரச்னை இது. அந்தக் கொப்புளங்களின் வலியால் கருணாநிதி தவித்தார். ஒரு மாத தொடர் சிகிச்சைக்குப் பிறகு அந்த நோயின் தாக்கம் குறைந்தாலும், முதுமையினாலும் பல்வேறு பக்க நோய்கள் தொற்றிக்கொண்டன. சளியும் இருமலும் அதிகரிக்கத் தொடங்கியதால் உணவே உட்கொள்ளமுடியாத நிலை. ஒருகட்டத்தில் மூச்சுத் திணறலும் ஏற்பட, அதன் தொடர்ச்சியாகத்தான் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை செய்து ஒரு குழாய் பொருத்தப்பட்டது. தொண்டையில் துளையிடப்பட்டு இந்தக் குழாய் வழியாகத் திரவ உணவுகள் செலுத்தப்பட்டன.

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி... நான்கு மணி நேரம் நடந்தது என்ன?

இதன்விளைவாக, அவரால் பேசமுடியாத நிலை ஏற்பட்டது. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு, திரவ உணவுகள் மட்டுமே தரப்பட்டதால் கருணாநிதியின் உடல் மெலிவுற்றது. ட்ரக்கியோஸ்டமி சிகிச்சையில் முதலில் பெரிய அளவிலான குழாய் பொருத்தப்பட்டிருந்தது. இரண்டு மாதங்கள் கழித்துச் சிறிய குழாய் பொருத்தப்பட்டது. இப்போது இந்தக் குழாயை மாற்றுவதற்காகத்தான், காவேரி மருத்துவமனையில் நான்கு மணி நேரம் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி.

“இந்தக் குழாயை மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் மாற்ற வேண்டும். அப்படி மாற்றாவிட்டால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உண்டு. அதற்காக அவருக்குச் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்தோம். முக்கால் மணி நேரம் இது நடைபெற்றது. கருணாநிதிக்கு நெருக்கமான மருத்துவர்கள் பழனிசாமி மற்றும் காது மூக்கு தொண்டை நிபுணர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர்தான் இதைச் செய்தனர். அறுவை சிகிச்சை முடிந்த அரை மணி நேரத்தில் கருணாநிதிக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. அதன் பிறகு சிறிய பரிசோதனை ஒன்றையும் செய்துவிட்டு, அவரை நலமுடன் அனுப்பி வைத்தோம்” என்றார், காவேரி மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர்.

தினமும் மருத்துவர்கள் வீட்டுக்்கே வந்து கருணாநிதியைப் பரிசோதனை செய்துவருகிறார்கள். கருணாநிதியின் குடும்ப மருத்துவர் கோபால், காலையில் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைச் சோதித்துச் செல்கிறார். அதேபோல் மருத்துவர் பழனிசாமியும் கவனிக்கிறார். இவர்கள்தான் கருணாநிதிக்குத் தொண்டையில் உள்ள குழாயை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அதிகாலையில் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியை அழைத்துச் செல்லும்போது, அவருடன் ராஜாத்தி அம்மாள், கனிமொழி, செல்வி, தமிழரசு ஆகியோர் சென்றனர். ஸ்டாலின் லண்டன் சென்றுவிட்டதால், அவருடைய மனைவி துர்கா வந்திருந்தார். காவேரி மருத்துவமனையின் மூன்றாவது மாடியில்தான் கருணாநிதிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. நான்காவது மாடியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காத்திருந்தனர்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி... நான்கு மணி நேரம் நடந்தது என்ன?

கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனையில் இருக்கக்கூடிய வசதிகள் சிலவற்றை அவருடைய அறையிலே இப்போது செய்துள்ளார்கள். கருணாநிதிக்குப் பணிவிடைகள் செய்யும் பணியை நித்யா என்பவர் கவனித்துவந்தார். இப்போது புதிதாக ஆண் செவிலியர் ஒருவரையும் நியமித்துள்ளார்கள். முதுமையின் காரணமாக  கருணாநிதியின் கழுத்தில் மாட்டியுள்ள குழாயை இப்போது அகற்றுவதற்கு வாய்ப்பில்லை என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். 

‘‘மருத்துவர்கள் உணவுக்குழாயை மாற்றவேண்டும் என்று சில நாள்களாகவே சொல்லிவந்தார்கள். வீட்டில் வைத்து அந்தச் சிகிச்சையைச் செய்யமுடியாது என்பதால், மருத்துமவமனைக்கு அழைத்துச் சென்றோம். இப்போது அவர் நன்றாக இருக்கிறார். எந்தக் குறையும் இல்லாமல் நலமாக வீடு வந்து சேர்ந்துள்ளார்” என நம்மிடம் கூறினார் கனிமொழி.

ஏறத்தாழ 80 ஆண்டுகளாகத் தன் கரகர குரலால் தமிழகத்தையே கட்டிப் போட்டவர்... பல்வேறு அரசியல் சோதனைகளைக் கடந்து வந்தவர்... இப்போது, பேசமுடியாமலும், நினைவுகளின் பிடி தளர்ந்தும் தவிப்பது... காலம் அவருக்கு வைத்த விநோதமான சோதனைதான்!

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: கே.ஜெரோம்