Published:Updated:

பாக்கி வைத்த லதா ரஜினி... பூட்டி வைத்த உரிமையாளர்! - அனல் பறக்கும் ‘ஆஸ்ரம் பள்ளி’ விவகாரம்

பாக்கி வைத்த லதா ரஜினி... பூட்டி வைத்த உரிமையாளர்! - அனல் பறக்கும் ‘ஆஸ்ரம் பள்ளி’ விவகாரம்
பிரீமியம் ஸ்டோரி

டிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா நடத்திவரும் ‘தி ஆஸ்ரம்’ பள்ளிக்கூடம், சென்னையின் சில இடங்களில் இயங்கி வருகிறது. அதில் ‘ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி’ என்ற கிளை, கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே வெங்கடேஸ்வரலு என்பவருக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக வாடகை பாக்கி இருப்பதால், இடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு, ஆகஸ்ட் 16-ம் தேதி பள்ளிக்கூடத்தின் கேட்டை உட்புறமாகப் பூட்டிவிட்டு, ‘இடத்தைக் காலிசெய்யுங்கள்... அல்லது பாக்கி பணத்தைக் கொடுத்துவிட்டுப் பள்ளிக்கூடத்தை நடத்துங்கள்’ என்று சொல்லிவிட்டார். இதனால், அங்கு படித்த மாணவர்கள் அனைவரையும் தனக்குச் சொந்தமான மற்றொரு பள்ளிக்கு லதா ரஜினிகாந்த் அனுப்பிவைத்திருக்கிறார்.

பாக்கி வைத்த லதா ரஜினி... பூட்டி வைத்த உரிமையாளர்! - அனல் பறக்கும் ‘ஆஸ்ரம் பள்ளி’ விவகாரம்

இது ஐந்தாண்டு காலப் பிரச்னை. கடந்த 2015-ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநரகத்தில் வெங்கடேஸ்வரலு புகார் செய்தார். இதற்கு லதா ரஜினிகாந்த் எழுத்துபூர்வமாக விளக்கம் தரவேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது. அப்போது பள்ளியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “பள்ளியின் நிலப்பிரச்னை தொடர்பாக இப்படி நோட்டீஸ் அனுப்ப அதிகாரம் கிடையாது’’ என வாதிட்டார். ஆனால், இதை நீதிமன்றம் நிராகரித்து, நேரில் சென்று விளக்கம் அளிக்குமாறு ஆணையிட்டது. அப்போதிருந்தே இரு தரப்புக்கும் உரசல் ஆரம்பித்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 பிரச்னை வலுக்கத் தொடங்கியதும் வெங்கடேஸ்வரலு இப்போது பள்ளிக்கூடத்தைப் பூட்டிவிட்டார். இதுகுறித்து வெங்கடேஸ்வரலுவின் மகள் பத்மாவிடம் பேசினோம். “கடந்த 2001-ம் ஆண்டு, எங்களுக்குச் சொந்தமான 14 கிரவுண்ட் நிலத்தில் பள்ளிக்கூடம் நடத்த வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் வாடகைக்குக் கேட்டார். 2001-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டு வரை மாத வாடகை ஆறு லட்ச ரூபாய் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்பின் 2006-ம் ஆண்டிலிருந்து 2013 வரை மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போதும் நாங்கள் அதே ஆறு லட்ச ரூபாய்தான் வாடகையாகச் சொன்னோம். 2013-ம் ஆண்டோடு அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது. 2014 முதல் 10 லட்ச ரூபாய் வாடகை கேட்டோம். அதன்பின் வாடகையே ஒழுங்காகக் கொடுக்கவில்லை. நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாகச் சொன்னதும், ஆறு மாத வாடகை பாக்கியை மட்டும் கொடுத்தார். ‘சீக்கிரம் முழு பணத்தையும் கொடுத்துவிடுகிறேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்றார். நாங்களும் சம்மதித்தோம்.

பாக்கி வைத்த லதா ரஜினி... பூட்டி வைத்த உரிமையாளர்! - அனல் பறக்கும் ‘ஆஸ்ரம் பள்ளி’ விவகாரம்

அதன்பிறகு வாடகை வரவில்லை. எவ்வளவோ கேட்டுப்பார்த்து, 2015-ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இணை இயக்குநரிடம் புகார் செய்தோம். பின் நீதிமன்றத்திலும் வழக்கு நடந்தது. ‘பாக்கியை உடனடியாகத் தர வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. லதா ரஜினிகாந்த் எங்களிடம், ‘மொத்தமாக இரண்டு கோடி ரூபாய் தருகிறேன். 2018 மே மாதம் இடத்தைக் காலி செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். நாங்களும் ‘வந்தவரைக்கும் வரட்டும். எப்படியாவது காலி செய்தால்போதும்’ என்று பொறுத்துக்கொண்டோம். ஆனால், இன்றுவரை அந்த இரண்டு கோடி ரூபாய் பணம் வரவில்லை. இப்படியே விட்டால் சரிவராது என்றுதான் அப்பா பள்ளிக்கூடத்தைப் பூட்டிவிட்டார். ஆனால், லதா ரஜினிகாந்த் இன்றுவரை எந்தப் பேச்சுவார்த்தைக்கும் எங்களை அழைக்கவில்லை. ரஜினி சார் மேல இருந்த நம்பிக்கையாலதான் அந்த இடத்தை வாடகைக்குக் கொடுத்தோம். ஆனால், ரஜினி மனைவி எங்களை இப்படி மோசம் பண்ணிவிட்டார்கள். எங்களை எந்தப் பத்திரிகையிடமும் பேசக் கூடாது என்று லோக்கல் போலீஸார் எச்சரித்துச் சென்றுள்ளார்கள்” என்றார்.

இந்தப் பிரச்னை குறித்து ‘தி ஆஸ்ரம்’ பள்ளி நிர்வாகத்தினர், ‘சமீப காலமாக நில உரிமையாளர், அவர்களின் குடும்பத் தகராறு காரணமாக எங்களுக்குப் பல சிக்கல்களைக் கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் நாங்கள் பேசிய தொகையைக் காட்டிலும் அதிகமாகப் பணம் கேட்கிறார்கள். இதுபற்றி அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த இடத்தைக் காலி செய்வதாக முடிவெடுத்துவிட்டோம். தற்போது இந்தப் பிரச்னையைச் சுமுகமாக முடிப்பது பற்றிப் பேசி வருகிறோம்’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பாக்கி வைத்த லதா ரஜினி... பூட்டி வைத்த உரிமையாளர்! - அனல் பறக்கும் ‘ஆஸ்ரம் பள்ளி’ விவகாரம்

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகத்தில் கேட்டபோது “இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களைத் தற்காலிகமாக, அவர்களின் மற்றொரு பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்தப் பள்ளியை எங்கள் அதிகாரிகள் குழு சோதனை செய்தது. ‘இன்னும் பத்து நாள்கள்  அவகாசம் கொடுங்கள், அதற்குள் பிரச்னையை  சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்கிறோம்’ என்று பள்ளி நிர்வாகத் தரப்பில் கேட்டுள்ளார்கள். அதன்பின் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து நடவடிக்கை எடுப்போம்’’ என்றனர்.

இதில் ரஜினி தலை உருள்வதுதான் மிச்சம்!

- ஜெ.அன்பரசன்
படங்கள்: பா.காளிமுத்து, கே.ஜெரோம்