Published:Updated:

வேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...

வேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...
பிரீமியம் ஸ்டோரி
வேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...

கோவை ஸ்மார்ட் சிட்டி கோல்மால்

வேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...

கோவை ஸ்மார்ட் சிட்டி கோல்மால்

Published:Updated:
வேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...
பிரீமியம் ஸ்டோரி
வேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...

ரசுப் பணம் பல கோடிகளைச் செலவிட்டு மாநகர வசதிகளை மேம்படுத்தும் ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் சி.இ.ஓ பொறுப்பில், அனுபவமே இல்லாத ஒரு இளம் பெண்ணை, அரசியல்வாதியின் மகள் என்ற ஒரே தகுதிக்காக நியமித்திருப்பது கோவையை உலுக்குகிறது.

வேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...

மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 109  நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. உலகத் தரம்வாய்ந்த முன்மாதிரி நகரங்களாக மாற்றுவதுதான், திட்டத்தின் நோக்கம். இதில் கோயம்புத்தூரும் ஒன்று. ‘‘திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், ஆரம்பப் பணிகளே ஆமை வேகத்தில் நடக்கின்றன’’ என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இப்போது அந்தத் திட்டத்துக்கான சி.இ.ஓ-வாக (தலைமைச் செயல் அதிகாரி) அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான கே.பி.ராஜுவின் மகள் சுகன்யா நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை எதிர்க்கும் மாநகராட்சி தி.மு.க முன்னாள் துணை மேயர் கார்த்திக்கிடம் பேசினோம். “ஸ்மார்ட் சிட்டி என்பது, மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து குளங்கள், சாலைகள், கண்காணிப்புக் கோபுரங்கள் எனச் சகலத்தையும் ஹைடெக்காக மாற்றி, ஒரு நகரத்தை முன்மாதிரி நகரமாக்கும் திட்டம். இது கோவையில் அவலமாக நடக்கிறது. 2015-ல் ஆரம்பித்து 2020-க்குள் முடிக்க வேண்டிய திட்டத்துக்கு 2017-ல்தான் சி.இ.ஓ-வையே நியமிக்கிறார்கள். அதிலும் அரசியல் விளையாடியிருக்கிறது. இவ்வளவு பெரிய திட்டத்துக்கு அனுபவமும் திறமையும் நிறைந்தவர்தான் சி.இ.ஓ-வாக இருக்கவேண்டும். இந்தப் பதவிக்கு மாதச் சம்பளம் இரண்டு லட்சம் ரூபாய். இதிலிருந்தே, எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவி இது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால், ‘இந்தப் பதவிக்கு 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்’ என்ற விதியை மாற்றி, ‘மூன்று ஆண்டுகள் போதும்’ என்ற புதிய அரசாணை வெளியிட்டுள்ளார்கள். பல லட்சம் பேர் வாழ்கிற கோவையில், மத்திய அரசு குறிப்பிட்ட தகுதிகளுடன் ஒருவர்கூட  இல்லையா? தளர்த்தப்பட்ட விதிகளின்படி, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வின் மகள் மட்டும்தான் அந்தப் பணிக்குத் தகுதியானவராக இருந்தாரா? அவர் ஒரு சிறிய நிறுவனத்தில் ஹெச்.ஆர் மேனேஜராக இருந்தவர். அவருக்கு ரோடு போடுவது குறித்தோ, குளங்கள் தூர் வாருவது குறித்தோ எதுவுமே தெரியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...
வேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...

இவ்வளவு பெரிய பதவிக்கு, முறைப்படி ஒரு கமிட்டி அமைத்து, விளம்பரங்கள் கொடுத்து, தகுதியானரைத் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், ரகசியமாக நேர்காணல் நடத்தி சுகன்யாவை நியமித்துள்ளார்கள். தகுதியைக் குறைத்திருப்பதால், மாதச் சம்பளத்தையும் ஒரு லட்சமாகக் குறைத்துள்ளார்கள். அரசியல்வாதியின் மகளை நியமித்திருப்பதால் அதில் பல முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த நியமனத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, நேர்மையாக நேர்முகத்தேர்வு வைத்து புதிய சி.இ.ஓ-வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றார்.

‘‘தன் அரசியல் குருவான கே.பி.ராஜுவுக்கு நன்றிக்கடனாக அவரின் மகளுக்கு இந்தப் பதவியை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தந்திருக்கிறார்’’ என அ.தி.மு.க.வினரே புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுபற்றி கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனிடம் பேசினோம். “என்ன நடந்தது என்று தெரியாமல் பேசக்கூடாது. முதலில் மத்திய அரசு அறிவித்த பி.இ மற்றும் எம்.பி.ஏ படித்து, 15 ஆண்டுகள் பணி அனுபவமும், அர்பன் செக்டார் பணியில் 5 ஆண்டு அனுபவமும் உள்ளவர்களின் விண்ணப்பங்களே கோரப்பட்டன. வந்த விண்ணப்பங்களில் ஒன்றுகூட தகுதியானதாக இல்லை. அதன்பிறகே சென்னை தவிர மற்ற ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ-க்களுக்கான தகுதிகள் தளர்த்தப்பட்டன. அந்தத் தகுதிகளின் அடிப்படையில் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 21 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 20 விண்ணப்பங்கள் தகுதியானவை அல்ல. எனவே, நேர்காணலுக்கு வந்ததே அந்த ஒரு பெண்தான். எல்லாவற்றுக்கும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது” என்று அதிர்ச்சியான தகவல்களைச் சொன்னவர், “இதற்காக முறைப்படி விளம்பரம் கொடுக்கப்பட்டது, நான் போகும் கல்லூரிகளில் எல்லாம் இதுகுறித்து சொல்லியிருக்கிறேன். வாட்ஸ்அப் மூலமாகத் தெரியப்படுத்தி இருக்கிறேன். இதில் துளியும் அரசியல் இல்லை” என்றார்.

வேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...
வேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...

சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டுள்ள சுகன்யாவைத் தொடர்புகொண்டபோது, “மீடியாவிடம் பேசக்கூடாது என்று கமிஷனர் சொல்லியிருக்கிறார்” என்று பேச மறுத்துவிட்டார்.

சுகன்யாவின் தந்தை கே.பி.ராஜுவிடம் பேசினோம். “என் பொண்ணு கடுமையான மன உளைச்சலில் இருக்கா. இந்த வேலையே வேண்டாம்னு அழுவுறா. அரசியல்வாதியோட மகளா பிறந்ததைத் தவிர, அவ வேற எந்தத் தப்பும் செய்யல. எம்பொண்ணு எல்லாத்துலயும் மெரிட்தான். முறைப்படிதான் அந்த வேலை கிடைச்சிருக்கு. தயவுசெஞ்சி அவளை விட்ருங்க” என்றார் பரிதாபக் குரலில்.

ஸ்மார்ட்டா எல்லாத்தையும் செய்திருக்காங்க!

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism