Published:Updated:

போர்முனைப் பதற்றம்... தயாராக இல்லை ராணுவம்!

போர்முனைப் பதற்றம்... தயாராக இல்லை ராணுவம்!
பிரீமியம் ஸ்டோரி
போர்முனைப் பதற்றம்... தயாராக இல்லை ராணுவம்!

டப்பா டான்ஸ் ஆடும் டாங்கிகள்

போர்முனைப் பதற்றம்... தயாராக இல்லை ராணுவம்!

டப்பா டான்ஸ் ஆடும் டாங்கிகள்

Published:Updated:
போர்முனைப் பதற்றம்... தயாராக இல்லை ராணுவம்!
பிரீமியம் ஸ்டோரி
போர்முனைப் பதற்றம்... தயாராக இல்லை ராணுவம்!

சிக்கிம் எல்லையிலும் காஷ்மீரின் லடாக் பகுதியிலும் சீன ராணுவம் அத்துமீறல்களில் ஈடுபட்டு, போருக்கான சூழலை வலிந்து நம்மீது திணிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றனர். இந்திய வீரர்கள் தடுத்தபோது, இரு தரப்புக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்தது.

போர்முனைப் பதற்றம்... தயாராக இல்லை ராணுவம்!

‘‘எந்தச் சவாலையும் சந்திக்க இந்தியா தயாராக இருக்கிறது” எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லியும், ராணுவ உயரதிகாரிகளும் கர்ஜித்தபோதிலும், உண்மை நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன இரண்டு நிகழ்வுகள். ஒன்று, ரஷ்யாவில் நடந்த சர்வதேச போர் டாங்கி போட்டியில் இந்தியா தகுதிநீக்கம் செய்யப்பட்டது. இரண்டாவது, சென்னையை அடுத்த ஆவடி ராணுவப் பயிற்சி முகாமில் டாங்கி பயிற்சியின்போது விஷவாயு தாக்கி ராணுவ வீரர் ஒருவர் இறந்த சம்பவம்.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் சர்வதேசப் போர் டாங்கி போட்டி அண்மையில் நடந்தது. இதில் இந்தியா, ரஷ்யா, கஸகஸ்தான், சீனா, உள்ளிட்ட 19 நாடுகள் கலந்து கொண்டன. இந்தியாவின் டி-90 ரக டாங்கிகள் இரண்டு, இந்தப் போட்டியில் பங்கேற்றன. தொடக்க சுற்றுகளில் இந்தியா முன்னிலை வகித்தது. இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றின்போது, இந்தியாவின் இரண்டு டாங்கிகளிலும் கோளாறு ஏற்பட்டது. ஒரு டாங்கியில் சுழலும் விசிறி உடைந்தது. மற்றொன்றில் என்ஜினிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. கோளாறைச் சரிசெய்ய முடியவில்லை என்பதால், போட்டியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனால், அவை தகுதிநீக்கம் செய்யப்பட்டன.

போட்டியில் பங்கேற்ற டாங்கிகள் இரண்டுமே ரஷ்ய தயாரிப்புகளாகும். நவீன வசதிகள் கொண்ட போர் வாகனங்கள் என்று சொல்லித்தான் இவற்றை இந்தியாவிடம் விற்றது ரஷ்யா. இந்த டி-90 டாங்கிகள் 1,000-க்கும் அதிகமாக நமது ராணுவத்தில் இடம்பெற்றுள்ளன.

இது ஒருபுறமிருக்க, சென்னையை அடுத்த ஆவடி ராணுவப் பயிற்சி முகாமில் கடந்த வாரம் டாங்கி பயிற்சியின்போது விஷவாயு தாக்கி சக்திவேல் என்ற ராணுவ வீரர் இறந்த சம்பவமும் நமது ராணுவத் தளவாடங்களின் தரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. விபத்து நேரிட்ட டி-72 ரக டாங்கியும் ரஷ்யத் தயாரிப்புதான். இந்த வகை டாங்கிகள் அணுகுண்டு தாக்குதல், ரசாயன குண்டு தாக்குதல், விஷவாயுத் தாக்குதல் ஆகியவற்றில் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டவை என்று சொல்லித்தான் இந்தியாவிடம் விற்கப்பட்டன.

இதெல்லாம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, நமது ராணுவ வீரர்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, பிற நாடுகளின் பார்வையில் இந்தியாவின் பாதுகாப்பு ஒரு கேலிப்பொருளாகியிருக்கிறது. ஆயுதப் பற்றாக்குறை, தரம் குறைந்த தளவாடங்கள் என நமது முப்படைகளில் மிக மோசமாக இருப்பது தரைப்படைதான். இன்று நேற்றல்ல; கடந்த பல பத்தாண்டுகளாகவே இதே கதைதான். இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த வி.கே.சிங், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார். பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் அவர் எழுதிய அந்தக் கடிதம், பிறகு பத்திரிகைகளில் கசிந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போர்முனைப் பதற்றம்... தயாராக இல்லை ராணுவம்!

‘இந்திய ராணுவத்துக்கு இரவில் போரிடும் திறன் ஏறக்குறைய இல்லை. நமது கவச டாங்கிகள் இரவில் செயல்படும் திறனற்று உள்ளன. நமது ஒட்டுமொத்தக் கப்பற்படை ஹெலிகாப்டர்களும் இரவுக் குருடாகவே உள்ளன. நமது ராணுவம் கடந்த மூன்றாண்டுகளில் ஒரே ஒரு 9 எம்.எம் துப்பாக்கியை வைத்துக்கூட சுடவில்லை. ஏனெனில் அதற்கான தோட்டாக்கள் இல்லை. அதேபோன்றே பீரங்கிக் குண்டுகள் இல்லை என்பதால், நமது ராணுவம் பீரங்கிகளை வெடித்துப் பயிற்சியும் பெறவில்லை. கடந்த 2011 நவம்பர் மாதம் நமது ராணுவம், பீரங்கிகளுக்காக அவசரமாக அறுபத்தாறாயிரம் 125 எம்.எம். குண்டுகளை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது. பற்றாக்குறை ஏற்பட்டவுடன் அவசரமாக வாங்கியதால், அதற்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது...’ என்று மேலும் பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார் வி.கே.சிங்.

அதற்குமுன்பு 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ‘தீவிரவாதிகளை ஏவிவிட்ட பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும்’ என ஆவேசமாகக் குரல்கள் எழும்பின. அப்போது, முப்படைத் தளபதிகளும் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு மிக நீண்ட ஆயுதப் பற்றாக்குறைப் பட்டியல் ஒன்றை அனுப்பி வைத்தனர். ‘திடீரென்று போர் வந்தால், நாம் எந்த அளவுக்குத் தயாரற்றவர்களாக இருக்கிறோம்’ என்பதை நமது பாதுகாப்பு வட்டாரம் அப்போதுதான் உணர்ந்தது. இப்போதும் நிலைமை மாறவில்லை என்பதைத்தான் ஆவடி நிகழ்வும், ரஷ்யா நிகழ்வும் உணர்த்துகின்றன.

இத்தகைய நிலை மாற வேண்டும். இல்லாவிட்டால் போர்முனையில் கத்திகள் உடைபடும் நிகழ்வுகள் தொடர்கதையாகத்தான் இருக்கும்!

- பா.முகிலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism