‘தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் செந்தில்ராஜ் ஐ.ஏ.எஸ்., தங்களைக் கொத்தடிமைகளைப் போல் நடத்துகிறார், திட்டி அவமானப்படுத்துகிறார்’ எனக் கொதிக்கிறார்கள் தொண்டு நிறுவனத்தினர். தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பினர், செந்தில்ராஜுக்கு எதிராகக் கூட்டம் நடத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.

நடந்ததை விளக்கினார் திருச்சி சேவைத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் கோவிந்தராஜு. “நாங்கள் 100 கிராமங்களில் ஹெச்.ஐ.வி விழிப்பு உணர்வு பணி செய்கிறோம். கடந்த 31-ம் தேதி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் செந்தில்ராஜ், திருச்சிக்கு ஆய்வுக்கு வருவதாகத் தகவல் வந்தது. அவர் வருகைக்காகக் காலையில் இருந்தே எங்கள் அலுவலர்கள் காத்திருந்தார்கள். ஆனால், அவர் தன்னுடைய அம்மாவின் பணி நிறைவு பாராட்டு விழாவுக்காக வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. ‘குடும்ப நிகழ்ச்சிக்காக வருபவரைத் தொந்தரவு செய்யக்கூடாது’ என்று நாங்கள் அவரைப் போய்ப் பார்க்கவில்லை.

இந்த நிலையில் எங்களுக்கு சென்னை வரும்படி திட்ட இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவே, நானும் எங்கள் அமைப்பின் நிர்வாகிகளும் சென்றோம். எங்களைப் போல் 15 மாவட்டங்களில் பணியாற்றும், தொண்டு நிறுவனத்தினரும் வந்திருந்தனர். முதல்நாள், எங்கள் நிறுவனங்களின் பணிகளை மதிப்பீடு செய்து, எங்கள் நிறுவனத்துக்கு 90 சதவிகிதம் மதிப்பெண் வழங்கினார்கள்.

அடுத்தநாள் திட்ட இயக்குநரைச் சந்திக்கும் நிகழ்ச்சி. நாங்கள் காலை 9 மணியில் இருந்தே காத்திருந்தோம். மாலை 6.10 மணிக்குத்தான் அவர் வந்தார். வந்தவர் தொண்டு நிறுவனத் தலைவர்களைப் பார்த்து, ‘புதிய நோயாளிகளைக் கண்டுபிடிக்கலயா?’ எனக் கேட்டார். நாங்கள் பணியாற்றும் 100 குக்கிராமங்களில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, முறையாகக் கவனித்து வருவதால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. ‘இந்த வருடம் புதிய கிராமங்களில் பணிசெய்ய வாய்ப்பு வழங்கினால், புதிய நோயாளிகளைக் கண்டுபிடிக்கிறோம்’ என்றோம். அதை ஏற்றுக்கொள்ளாத அவர், கோபமாகத் திட்டியதுடன், எங்களை மூன்று மணி நேரத்துக்கும் மேல் நிற்க வைத்தார்’’ என்றார் கோவிந்தராஜு.

தொடர்ந்தார் சேவை அமைப்பின் கூடுதல் இயக்குநர் சுதா. “அப்போது திட்ட இயக்குநர், ‘நான் திருச்சி வந்தபோது ஏன் நேரில் வந்து பார்க்கலை’ என்றார். ‘நீங்கள் சொந்த வேலையாக வந்திருப்பதாகச் சொன்னார்கள்’ என்றோம். ‘எதிர்த்துப் பேசுறியா? மன்னிப்புக் கேள்’ என்றார். ‘தவறு செய்யாம ஏன் மன்னிப்பு கேட்கணும்’ என்றேன். அவர், ‘வாயை மூடு. நாங்க போடுற பிச்சையில் புராஜெக்ட் நடத்துறீங்க. மன்னிப்புக் கேட்க மாட்டியா?’ என ஒருமையில் திட்டினார். இதேபோல், மற்ற தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் மிக மோசமாகத் திட்டினார். அந்த வார்த்தைகளை நினைத்தால் உடல் கூசுகிறது” என்றார் வேதனையுடன்.

தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவர் ராம்குமார், “அன்று அவர் நடந்துகொண்டவிதம் மிக மோசம். ஹெச்.ஐ.வி தடுப்புப் பணியை, அரசு மட்டுமே செய்யமுடியாது என்பதால், தொண்டு நிறுவனங்களைப் பங்கெடுக்கச் செய்கிறார்கள். ஹெச்.ஐ.வி. பாதித்த மக்களுடன் பணியாற்றுவது என்பது மிகவும் சிரமமானது. கடந்த 20 வருடங்களாகப் பணியாற்றுகிறோம். ஆனால், இப்படி ஓர் இயக்குநரை நாங்கள் பார்த்ததில்லை. எங்களைக் கொத்தடிமைகளைப் போல் நடத்துகிறார். 7,500 ரூபாய் மாத ஊதியம் தருகிறார்கள். இதை உயர்த்துவது குறித்து யாரும் சிந்திக்கவில்லை. இந்நிலையில் ‘புராஜெக்ட் வாங்க வேண்டுமானால், தொகையைக் குறிப்பிடாமல் திட்ட வரைவு அனுப்புங்கள்’ என அதிகாரிகள் சொல்கிறார்கள். அப்படி வழங்கியும், கடந்த 2015-16-ம் ஆண்டில் நாங்கள் செய்த பணிக்கான தொகை இதுவரை கிடைக்கவில்லை. நாங்கள் இந்தத் திட்டத்தில் பணி செய்யும் பணியாளர்களுக்குத் தொடர்ந்து எங்கள் பணத்தில் சம்பளம் வழங்கி வருகிறோம். கடந்த சில வருடங்களாக எய்ட்ஸ் நோய் விழிப்பு உணர்வு துண்டறிக்கைகள் வெளியிடப்படவே இல்லை. இவர்களின் செயல்பாடுகள் இப்படி இருக்க, எங்களைக் குறைகூறுவது சரியா?” என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து திட்ட இயக்குநர் செந்தில்ராஜிடம் கேட்டோம். ‘‘அன்று நடந்த கூட்டத்தில் தொண்டு நிறுவனத்தினரை நிற்க வைத்து கேள்வி கேட்டது உண்மைதான். தவறு செய்தவர்களை நிற்க வைத்துத்தானே கேள்வி கேட்க முடியும்? அரசின் பணத்தை வாங்கிக்கொண்டு செயல்படுபவர்களிடம் கேள்வி கேட்கக் கூடாதா? அவர்கள் பணி சரியாக இருந்தால் ஏன் கேள்வி கேட்கப் போகிறேன்? நான் என் பணியைச் செய்தேன். சரியில்லை என்றால் அரசு என்னை மாற்றட்டும். நான் இப்படித்தான் நடந்துகொள்வேன்” என்றார் கோபமாக.

நிற்க வைத்துக் கேள்வி கேட்க இவர் நீதிபதி இல்லையே!

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்