Published:Updated:

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Published:Updated:
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

.பி.எஸ், ஈ.பி.எஸ், டி.டி.வி, எம்.கே.எஸ் (அதாங்க, மு.க.ஸ்டாலின்!) என மூன்றெழுத்துக்காரர்களால் தமிழகமே பரபரத்துக் கிடக்கிறது. ‘இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல’ என்பது சகலருக்கும் தெரிந்ததால்தான் இந்த ஆடுபுலி ஆட்டம் எல்லாம். ஆனால், இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியிலும் சில வி.ஐ.பி அரசியல்வாதிகளின் இருப்பிடமே தெரியவில்லை. ஒருவேளை நிஜமாகவே காணாமல் போய்விட்டார்களோ என்ற தவிப்பில் எழுதிய அறிவிப்புகள் இவை.

பெயர்: மு.க.அழகிரி

வயது: 66

வேறு பெயர்கள்: அஞ்சாநெஞ்சன் மற்றும் இன்னபிற பேனர் வாசகங்கள்

இவரைப் பற்றி: ஒரு காலத்தில் நிஜமாகவே அரசியல்வாதியாக இருந்தவர். இடைத் தேர்தல்களில் நோட்டு ஃபார்முலாவைக் கண்டுபிடித்துக் கொடுத்த சமூக விஞ்ஞானி. ‘மத்திய உரத்துறை அமைச்சர்’ என்ற நேம்போர்டோடு ஐந்து ஆண்டுகள் சென்னை - டெல்லி ட்ரிப் அடித்த பயணி. ‘தெக்குச்சீமையில என்னைப் பத்திக் கேளு’ எனக் கெத்தாக பாட்டுப் பாடிக்கொண்டிருந்தவர். அ.தி.மு.க-வுக்கு முன்பாக தி.மு.க-வில் நடந்த தர்மயுத்தத்தில்(?) தோற்றவர். கடைசியாகக் காதுகுத்து விழாவின் பேனர்களில் இவர் தென்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: தல்லாகுளம், டி.வி.எஸ் நகர், காளவாசல், தெப்பக்குளம் உள்ளிட்ட மதுரை வட்டாரங்கள்.

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

பெயர்: கே.வி.தங்கபாலு

வயது: 67

வேறு பெயர்கள்: மாஜி மாநிலத் தலைவர்

இவரைப் பற்றி: தமிழக காங்கிரஸின் ஆயிரக்கணக்கான தலைவர்களுள் ஒருவர். கதர் வேட்டி கிழிந்தாலும் கட்டுக் குலையாத சிரிப்புக்குச் சொந்தக்காரர். மூன்றாண்டுகள் சத்தியமூர்த்தி பவனில் நடந்த கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு தலைமை தாங்கியவர். பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதை புரிந்துகொண்டு தன் மனைவியை மயிலாப்பூரில் போட்டியிட வைத்தவர். ‘முக்கியமான டாக்குமென்ட் இல்ல’ என மனைவியின் நாமினேஷன் ரத்தாக, டம்மி வேட்பாளராக பெயர் கொடுத்த இவருக்கு அடித்தது யோகம். மற்றபடி இவருக்கு  எம்.எல்.ஏ ஆகும் ஆசை இல்லவே இல்லை. (ரிசல்ட்தான் தெரியுமே!) நாமினேஷன் கூட ஒழுங்காக பண்ண வைக்கத் தெரியாத அப்பாவி அரசியல்வாதியான இவரைக் கண்டுபிடித்துத் தரவும்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: சத்தியமூர்த்தி பவன், சென்னை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெயர்: மணிசங்கர் அய்யர்

வயது: 76

வேறு பெயர்கள்: காங்கிரஸ் கட்சியின் சுப்ரமணியன் சுவாமி

இவரைப் பற்றி: ஒரு காலத்தில் கருத்து கந்தசாமியாகத் திகழ்ந்தவர். இவரின் அகாதுகா கருத்துகளுக்கு டெல்லி மேலிடமே பம்மிப் பதறி மன்னிப்புக் கேட்கும். மயிலாடுதுறை தொகுதியை சிங்கப்பூராக மாற்றுவதற்காக 27 ஆண்டுகளாக விட்டே தராத விடாக்கண்டர். மோடி, முலாயம் சிங் என எல்லாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வாங்கிக் கட்டிக்கொள்ளும் அக்மார்க் அரசியல்வாதி. இப்படி சகல வகைகளிலும் சுப்ரமணியன் சுவாமியின் மறு உருவமாகவே வாழும் இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அணுகவும்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: அக்பர் ரோடு, புதுடெல்லி.

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

பெயர்: சி.ஆர்.சரஸ்வதி

வயது: 53

வேறு பெயர்கள்: சின்னம்மா சிஷ்யை

இவரைப் பற்றி: சினிமாவில் சிரித்த முகமுடைய அம்மா. டி.வி விவாதங்களில் வறுத்தெடுக்கும் மாமியார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ‘அம்மா இட்லி சாப்பிட்டாங்க, அம்மா காபி சாப்பிட்டாங்க’ என அளந்து விட்டவர். அதனாலேயே விசாரணைக் கமிஷனின் பார்வை இவர் மீது விழலாம் என நம்பப்படுகிறது. பல்லாவரம் தொகுதியில் மக்களால் பல்லாங்குழி ஆடப்பட்ட இவர், கடைசியாக ‘சின்னம்மாதான் இனி எல்லாம்’ என தம் கட்டிக்கொண்டிருந்தபோது டி.வி-யில் வந்தார்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: அவங்க ஒரு முடிவுக்கு வரட்டும். அப்புறம் அட்ரஸ் சொல்றோம்

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

பெயர்: தா.பாண்டியன்

வயது: 84

வேறு பெயர்கள்: இரட்டை இலை தாங்கிய இளவல்

இவரைப் பற்றி: பல ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் அ.தி.மு.க தலைவர். பதவி ஆசை சுத்தமாக இல்லாதவர். அதன் காரணமாகவே தன் மகனுக்கு எல்லாப் பதவிகளையும் வாங்கித் தரப் போராடும் வள்ளல். வார்த்தைக்கு வார்த்தை அ.தி.மு.க-வைச் சிலாகிக்கும் மாற்றுக் கட்சி மாண்பாளர். கடந்த டிசம்பர் மாதம் சின்னம்மாவை சிவகாமி தேவியாக ஏற்றுக்கொண்ட பெருந்தன்மையாளர். கடந்த சில நாள்களாக கருத்து சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: டி.டி.வி இல்லம், கற்பகம் கார்டன்ஸ், அடையார்.

- எஸ்.நித்திஷ்,  ஓவியங்கள்: ரவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism