Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று விமர்சனமும் ‘யானோ அரசன்; யானே கள்வன்’ என்று சுயவிமர்சனமும் சேர்ந்து வளர்ந்தது நம் தமிழ் இலக்கியம். ‘இது நமக்குப் பிடித்த படைப்பு’, ‘இது நமது நட்புக்குரியவரின் எழுத்து’ என்ற விருப்பு, வெறுப்புகளைப் புறமொதுக்கிவிட்டு, ‘காமம் செப்பாது கண்டது மொழிந்த’ மரபு நம்முடையது. இலக்கியம் வளர வேண்டுமென்றாலும் இலக்கியவாதி வளர வேண்டுமென்றாலும் கூடவே விமர்சனத்துறையும் சேர்ந்து வளர வேண்டும் என்பது அடிப்படை நியதி.

தலையங்கம்
தலையங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழில் சிறந்த இலக்கியவாதிகள் என்று ஒரு நீண்ட பட்டியலிட முடிவதைப்போலவே இலக்கிய விமர்சகர்கள் என்றும் நீண்ட பட்டியலைப் போட முடியும். க.நா.சு, கைலாசபதி, கா.சிவத்தம்பி, பிரமிள், தி.க.சி, வெங்கட் சாமிநாதன், கோ.கேசவன், எம்.ஏ.நுஃமான், அ.மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ்கௌதமன், தமிழவன், க.பஞ்சாங்கம், எஸ்.வி.ராஜதுரை, நாகர்ஜுனன், ராஜன்குறை, பிரேம் - ரமேஷ், குமாரசெல்வா, வ.கீதா, தி.சு.நடராசன், ந.முத்துமோகன், சி.மோகன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, ந.முருகேச பாண்டியன் என்று தமிழின் முக்கியமான விமர்சகர்களைப் பட்டியலிடலாம். இவர்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியான ஆய்வு அணுகல் முறையைக் கொண்டவர்கள் அல்லர். மார்க்ஸியம், அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், விளிம்புநிலை ஆய்வுகள், நுண்ணரசியல், பிரதியியல் ஆய்வு என்று பல்வேறு வகையான கருத்தியல்கள் மற்றும் கருத்தாக்கங்களின் அடிப்படையில் இங்கு தமிழ் இலக்கிய விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எண்பதுகளில் தொடங்கி, தொண்ணூறுகளின் இறுதிவரை இங்கு வெவ்வேறு வகையான கோட்பாட்டு அறிமுகங்களும் அதன் அடிப்படையிலான இலக்கிய விமர்சனங்களும் அதையொட்டிய விவாதங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கும்மேல் இந்தத் திறனாய்வுத் துறையும் திறனாய்வு முறைகளும் தொய்வடைந்திருக்கின்றன. விமர்சனங்களின் அடிப்படையில் ஒரு படைப்பை அணுகுவது குறைந்துபோய், படைப்பாளிகளுடனான உறவுகள் அடிப்படையிலேயே படைப்புகள் அணுகப்படுகின்றன. நூல் விமர்சனம் என்ற பெயரில் எழுதப்படுபவை பெரும்பாலும் நூல் மதிப்புரைகளாகவும் பரிந்துரைகளாகவும் மட்டுமே சுருங்கிவிட்டன. நூல் விமர்சனக் கூட்டங்களும் பாராட்டுக் கூட்டங்களாகவே உள்ளன. இந்த நிலை மாற வேண்டும். விமர்சனங்களை அடிப்படையாகக்கொண்டே நல்ல படைப்புகள் உருவாகும். விமர்சனங்களற்ற இலக்கியங்கள் என்பவை தேங்கிவிடும். தேங்கிவிடும் நல்ல தண்ணீரீல்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன என்பதைக் கவனத்தில்கொள்ளுதல் நல்லது.

- ஆசிரியர்