Published:Updated:

மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்

மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்
பிரீமியம் ஸ்டோரி
மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்

மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்

மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்

மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்

Published:Updated:
மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்
பிரீமியம் ஸ்டோரி
மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்
மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்

புதுவை மாநிலம் காரைக்காலில் இருக்கும் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அதிலிருந்து விடுபடமுடியாமல் தவிக்கிறார்கள். இந்த நிலையில், அபாயகரமான திரவ எரிவாயுவை இறக்குமதி செய்ய துறைமுக நிர்வாகம் திட்டமிட்டிருப்பது இந்தப் பகுதி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.   

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் காரைக்காலில் ‘மார்க்’ என்ற தனியார் நிறுவனத்தின் துறைமுகம் அமைந்தது. வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் இங்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் தென் மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால், படுமோசமான சுற்றுச்சூழல் பிரச்னைகள் எழுந்துள்ளன. 

இதுபற்றி சமூக ஆர்வலர் இஸ்மாயில் நம்மிடம், ‘‘இங்கு நிலக்கரியைக் கையாள்வதால் எழும்பும் கரித்துகள் காற்றில் பல கிலோமீட்டர் தூரத்துக்குப் பரவுகிறது. இதனால் காரைக்கால் பகுதியில் மட்டுமல்ல, அருகில் உள்ள தமிழகக் கிராமங்களில் உள்ள வீடுகளிலும் கரித்துகள்கள் படிகின்றன. புகழ்பெற்ற நாகூர் தர்கா கோபுரங்கள்கூட கருமை நிறத்துக்கு மாறிவிட்டன. அத்துடன் துறைமுகம் அருகில் உள்ள கீழவாஞ்சூர், மேலவாஞ்சூர், பட்டினச்சேரி, திருப்பட்டினம் எனச் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் மக்கள், இந்தக் கரித்துகள் கலந்த காற்றைச் சுவாசிப்பதால் நுரையீரல் கோளாறு, இதயநோய், மலட்டுத்தன்மை மற்றும் தோல்நோய்கள் என பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர். கப்பல் வருவதற்காகக் கடலை ஆழப்படுத்தியதால், சுமார் 50 கி.மீ சுற்றளவுக்கு நிலத்தடி நீர் உப்பு நீராகி, குடிநீருக்கும் கேடு வந்துவிட்டது’’ என்றார்.

மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீழவாஞ்சூரைச் சேர்ந்த செல்வராஜ், ‘‘எங்கள் ஊரில் நிலக்கடலை விவசாயம் மிக நன்றாக இருக்கும். இப்போது விளைநிலம் பாழாகி விவசாயம் இல்லை. வறட்சியிலும் வாழக்கூடியவை பனை மரங்கள். `பனை மரங்கள் செத்தால் ஊரே நாசமாகிவிடும்’ என்பது முன்னோர் வாக்கு. துறைமுகம் வந்தபிறகு எல்லாமும் போச்சு. எங்கள் ஊரில் பனை மரங்கள் காய்ந்து எரிந்த நிலையில் இருப்பதைப் பார்த்தாலே எங்கள் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ளலாம்” என்றார். 
முருகேசன், சசிகுமார் ஆகியோர், ‘‘நெடுவாசலிலும், கதிராமங்கலத்திலும் ஓ.என்.ஜி.சி எண்ணெய் நிறுவனத்தால் கேடுவந்து வாழ வழியின்றிப் போராடுகிறார்கள். இங்கே துறைமுகத்தால் தினந்தோறும் கரித்துகள் காற்றைச் சுவாசித்து மெள்ள மெள்ளச் செத்துக் கொண்டிருக்கிறோம். துறைமுகத்தில் துப்புரவுப் பணியிலிருந்த தனுஷ்கோடி என்பவர் புற்றுநோய் தாக்கி இறந்தார். துறைமுக வாசலில் கேன்டீன் நடத்திவந்த அன்னக்கிளி என்ற 30 வயது பெண், மூன்று மாதங்களுக்கு முன்னால் என்ன நோயென்றே தெரியாமல் திடீரென இறந்து போனார். பல போராட்டங்கள் நடத்தி விடிவுகாலம் இல்லாததால் வழக்கு போட்டோம். கோர்ட் உத்தரவுப்படி மருத்துவர் குழு எங்கள் கிராம மக்களைப் பரிசோதனை செய்து, 58 பேருக்கு கரித் துகள் காற்றால் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்து அறிக்கை சமர்ப்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றனர். 

அ.தி.மு.க பிரமுகரான சக்திவேல் உடையார், “இவ்வளவு பிரச்னைகள் ஏற்கெனவே இருக்கும் நிலையில், இப்போது நச்சுத்தன்மை கொண்ட, வெடிக்கும் அபாயம் உள்ள திரவ எரிவாயுவை எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் இறக்குமதி செய்யத் திட்டமிடுகிறார்கள். இதற்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தை அவசர கதியில் நடத்தி முடித்தார்கள். எங்கள் உயிருக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது’’ என்றார். 

மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்

இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவரான டாக்டர் ஆனந்த குமார், ‘‘இங்கு இறக்குமதி செய்ய உள்ள எல்.என்.ஜி எனப்படும் திரவ இயற்கை எரிவாயுவில் அதிக அளவு எரியும் தன்மை கொண்ட மீத்தேன், சிறிய அளவில் எத்திலின், புரோப்பேன், பீட்டேன், நைட்ரஜன் ஆகிய வாயுக்கள் அடங்கியிருக்கும். இந்த வாயுவில் கசிவு ஏற்பட்டால் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படுவதோடு, மூச்சுத்திணறல் வந்து உயிரே பறிபோகும் அபாயமும் உண்டு. அமெரிக்காவில் சமீபத்தில் இப்படி ஓர் விபத்து நடந்து, ஒரு நகரத்தையே முடக்கிப்போட்டது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்தத் திரவ எரிவாயுவை இறக்குமதி செய்யவோ, சேமித்து வைக்கவோ கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். முன்னேறிய நாடுகளிலேயே, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தும் விபத்தைத் தவிர்க்க முடியவில்லை. இந்தத் துறைமுகத்தில் எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் 2,610 கோடி ரூபாய் முதலீட்டில் செய்யப்படும் இத்திட்டத்தால் மக்களுக்கோ, அரசுக்கோ எந்தப் பயனும் இல்லை.

2006-ம் ஆண்டு மத்திய அரசின் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு’ குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு மாறாக மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்துக்கு ஒப்புதல் தருவது சட்ட விரோதம். அதிக காற்றழுத்த நிலையில் வெடிக்கும் தன்மை கொண்ட வாயுவைக் கிடங்கில் அடைத்து வைப்பார்கள். அதன் அருகிலேயே நிலக்கரி இறக்குமதியும் நடக்கிறது. இப்படிப் பஞ்சையும், நெருப்பையும் ஒன்றாகக் கையாண்டு அதில் விபத்து ஏற்படுமானால், அதைத் தடுத்து நிறுத்தவோ, மக்களைப் பாதுகாக்கவோ எந்த ஏற்பாடும் இல்லை. வாயுக் கசிவு ஏற்பட்டால் மேலே சென்றுவிடும் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். மேலே சென்றால் காற்றுடன் கலந்து அதைச் சுவாசிக்கும் மக்கள் பாதிப்படைவார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். இந்தத் துறைமுகத்தைச் சுற்றிலும் வேதிப்பொருள் நிறுவனம், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனம், எண்ணெய்க் கிணறு என இருக்கும்போது, ஆபத்தான எரிவாயுவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது’’ என்று எச்சரித்தார். 

மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்
மிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி! - அதிர்ச்சியில் காரைக்கால்

மக்களின் இந்தப் புகார்கள் குறித்துத் துறைமுகப் பொது மேலாளர் ராஜேஸ்வர ரெட்டியிடம் விளக்கம் கேட்டோம். ‘‘சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளின்படிதான் எல்.என்.ஜி வாயுவை இறக்குமதி செய்ய உள்ளோம். ஏற்கெனவே கொச்சி துறைமுகத்தில் இந்த இறக்குமதி நடைபெற்று வருகிறது. பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியில்தான் ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்குத் திரவ எரிவாயுவை இறக்குமதி செய்து, அங்கிருந்து குழாய்கள் மூலமாகக் கொண்டுவர உள்ளோம். ஏற்கெனவே ‘கெயில்’ நிறுவனம் பைப் லைன் மூலம் எரிவாயுவை சப்ளை செய்துவருகிறது. மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் மாநில அரசு மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தியது. முறைப்படி விளம்பரம் செய்து கூட்டப் பட்ட கூட்டத்தில், மக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு முறையான பதில் சொல்லியுள்ளோம். இத்திட்டம் குறித்து ஓராண்டாக ஆய்வுசெய்து பாதுகாப்பு அம்சங்களுடன்தான் செயல்படுத்த உள்ளோம். 

நிலக்கரி இறக்குமதியில் கரித்துகள் காற்றில் பரவாமல் இருக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தலின்படி 15 மீட்டர் உயரத்துக்குத் தடுப்பு அமைத்துள்ளோம். அதிகமாகக் காற்று வீசும் நேரத்தில், அதையும் தாண்டி கரித்துகள் காற்றில் கலப்பதைத் தவிர்க்க முடியவில்லை. மர்மச் சாவுகள் என்றில்லை, ஒன்றோ இரண்டோ கான்ட்ராக்ட் வேலையில் நடந்திருக்கிறது. அவை பற்றி முறையாக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்தத் திட்டம் வந்தால் மின்சார உற்பத்தி அதிகரிக்கும். அதனால் மாநிலத்துக்கு நன்மைதானே’’ என்றார்.

மக்களின் உயிரைப் பணயம் வைத்து இப்படி ஒரு நன்மை தேவையா?

- மு.இராகவன்
படங்கள்: க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism