Published:Updated:

உளவுத்துறை அளவுக்கு இந்த அரசு வொர்த் இல்லையா?

உளவுத்துறை அளவுக்கு இந்த அரசு வொர்த் இல்லையா?
பிரீமியம் ஸ்டோரி
உளவுத்துறை அளவுக்கு இந்த அரசு வொர்த் இல்லையா?

உளவுத்துறை அளவுக்கு இந்த அரசு வொர்த் இல்லையா?

உளவுத்துறை அளவுக்கு இந்த அரசு வொர்த் இல்லையா?

உளவுத்துறை அளவுக்கு இந்த அரசு வொர்த் இல்லையா?

Published:Updated:
உளவுத்துறை அளவுக்கு இந்த அரசு வொர்த் இல்லையா?
பிரீமியம் ஸ்டோரி
உளவுத்துறை அளவுக்கு இந்த அரசு வொர்த் இல்லையா?

பாநாயகர் தனபாலைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கிறார்கள் தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியினர் இணைந்து டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குப் படையெடுக்கி றார்கள். அ.தி.மு.க-வின் பொதுக்குழுக்கள்(?) விரைவில் கூடவிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமியிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவியைப் பறிக்கிறார் தினகரன். இப்படியாக, அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து அதிரடியான சம்பவங்கள் அரங்கேறும் நிலையில், இவற்றையெல்லாம் தமிழக உளவுத்துறை எப்படி டீல் பண்ணுகிறது தெரியுமா?

தமிழக உளவுத்துறையில் அரசியல் விவகாரங்களை ‘பொலிடிக்கல் இன்டெலிஜென்ஸ்’ பிரிவின் ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி கவனிக்கிறார். உள்நாட்டு பாதுகாப்பு எனப்படும் தீவிரவாதச் செயல்பாடுகளைக் கவனிக்கும் பிரிவின் ஐ.ஜி-யாக ஈஸ்வர மூர்த்தி இருக்கிறார். ஈஸ்வரமூர்த்தி கவனிக்கும் பிரிவின் பணிகள் தொய்வின்றி நடக்கும் நிலையில், பொலிட்டிகல் இன்டெலிஜென்ஸ் பிரிவு தள்ளாடிவருகிறது. தற்போது தன் மகள் திருமணத்துக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு சத்தியமூர்த்தி போய்விட்டார்.

உளவுத்துறை அளவுக்கு இந்த அரசு வொர்த் இல்லையா?

சந்தேக லிஸ்ட்டில் சத்தியமூர்த்தி!

அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட் ஆன நேரத்தில், சத்தியமூர்த்தி அடிக்கடி விடுப்பில் செல்ல ஆரம்பித்தார். பிறகு, பன்னீர்செல்வம் முதல்வரானபோது, ஐ.ஜி-யாக உளவுத்துறைக்கு வந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் பொலிட்டிகல் இன்டெலிஜென்ஸைக் கவனித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் டேவிட்சன் மாற்றப்பட்டு, சத்தியமூர்த்தி வலுக்கட்டாயமாக மீண்டும் கொண்டு வரப்பட்டார்.

இப்போது அரசியல் சூழல் மாறிவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்குமே உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். பன்னீர் நியமித்த டேவிட்சனை மாற்றிவிட்டு சத்தியமூர்த்தி கொண்டுவரப்பட்டார். ‘இவர் நமக்கு விசுவாசமாக இருப்பாரா’ என்கிற சந்தேகம் பன்னீருக்கு வந்துள்ளதாம்.

அரசுக்கும் ஆளும்கட்சிக்கும் இடையே ‘ஷாக் அப்ஸார்பர்’ போலச் செயல்படுவது உளவுத்துறைதான். ஆளும்கட்சிக்குப் பெரிய பிரச்னை வரும்போது, அதை திசைதிருப்பும் வகையில் ஏதாவது செய்திகளைக் கிளம்பிவிடுவார்கள். சிக்கலான நேரத்தில் ஆளும்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் எதிர்க் கட்சியினரை முதலில் அன்பாக மிரட்டுவது, பேரம் பேசுவது, சைலன்ட் ஆக்குவது, எதிர்க்கட்சிகளை உடைப்பது, முக்கிய பிரமுகர்களைக் கட்சி மாறச் சொல்லுவது என சகல தகிடுதத்தங்களையும் அரங்கேற்றுவது உளவுத்துறையினர்தான். 

கம்பீரமாக... பிரமாண்டமாக... ஆனால், ரகசியமாகச் செயல்பட்ட உளவுத்துறை இன்று நொண்டியடிக்கிறது. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனது முதல் உளவுத்துறை சுணங்கிவிட்டது. காரணம், தமிழக அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாததுதான். பன்னீர் - எடப்பாடி ஜோடிக்கும் தினகரனுக்கும் குடுமிப்பிடிச் சண்டை ஆக்ரோஷமாக நடக்கும் சூழ்நிலையில், உளவுத்துறையினர் தூங்கி வழிகிறார்கள். ‘எந்த கோஷ்டியினர் எங்கே போகிறார்கள்... யார் யாரைச் சந்திக்கிறார்கள்’ என்பதைக்கூட உளவுத்துறையால் ஃபாலோ செய்யமுடியாத நிலைமை. முதல்வர் தலைமையில் எல்லோரும் கூடி எடுக்கும் முடிவுகள் உடனுக்குடன் தினகரன் தரப்புக்குப் போகிறது. ‘எங்களின் ஸ்லீப்பர் செல் ஆட்கள் அங்கே இருக்கிறார்கள்’ என தினகரன் தரப்பு மர்மப் புன்னகையோடு சொல்கிறது. ‘யார் அந்த ஸ்லீப்பர் செல்’ எனக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உளவுத்துறையின் வேலை. ஆனால், அவர்களால் செய்ய முடியவில்லை. காரணம், உளவுத்துறைக்கான பிரத்யேக சோர்ஸ் மற்றும் தொடர்புகள் சிதறிப் போய்விட்டன.

ஓட்டம் எடுக்கும் அதிகாரிகள்!

முன்பெல்லாம், உளவுத்துறைத் தலைவர் பதவியைப் பிடிக்கக் கடும் போட்டி இருக்கும். உளவுப் பணிக்குத் தரப்படும் அரசு ரகசியப் பணிச் செலவுக்குக் கேள்வியே கிடையாது. அந்தளவுக்கு பவர்ஃபுல் பதவி இது. ஆனால், இப்போது இந்தப் பதவிக்கு வர ஐ.ஜி-க்கள் மறுக்கிறார்கள். பர்சனல் காரணங்களைச் சொல்லிவிட்டுப் பின்வாங்குகிறார்கள். ‘நித்திய கண்டம் பூர்ண ஆயுசு’ நிர்வாகம் நடப்பதால், ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடுமோ என்ற பயம் அவர்களுக்கு. இந்தச் சூழலில்தான், சத்தியமூர்த்தியை அலேக்காகத் தூக்கிவந்து மீண்டும் மீண்டும் உட்கார வைக்கிறார்கள்.

அலர வைக்கும் ‘ஜெ’ பிரிவு!

உளவுத்துறையில் பல பிரிவுகள் உண்டு. அந்த வரிசையில் வருவதுதான் ‘ஜெ’ பிரிவு. இந்தப் பெயரைக் கேட்டாலே, அரசியல் தலைவர்கள் அலறுவார்கள். டி.ஜி.பி ஆபீஸின் முதல் மாடியில் இயங்கும் இந்தப் பிரிவின் பக்கத்தில் போக யாருக்கும் அனுமதி கிடையாது. அரசியல் தலைவர்கள், பினாமிகள், மந்திரிகள் என்று அனைத்துத் தரப்பினரையும் திரைமறைவிலிருந்து இந்தப் பிரிவினர்தான் கண்காணிக்கிறார்கள். கண்காணிப்பு என்றால், டெலிபோன் உட்பட அனைத்தும் அடங்கும். இது ஒரு காலத்தில் நன்றாக நடந்தது. இந்தப் பிரிவு பற்றி வி.ஐ.பி-க்கள் பலருக்கும் தெரிய ஆரம்பித்த பிறகு, செல்போன் சிம் கார்டை மாற்றுவது, இடங்களை மாற்றுவது எனப் பல டெக்னிக்குகளை உஷாராகக் கையாளுகிறார்கள். அதனால், இந்தப் பிரிவின் வேலை குறைந்துவிட்டது. ஆறாயிரம் போன்களைக் கண்காணிக்கும் நவீனக் கருவிகளை ஏழு கோடி ரூபாய்க்கு தி.மு.க ஆட்சியில் வாங்கினார்கள். இப்போது, சுமார் 100 முதல் 200 போன்களைத்தான் கண்காணிக்கிறார்கள். இதனால், தகவல்கள் வருவது குறைந்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உளவுத்துறை அளவுக்கு இந்த அரசு வொர்த் இல்லையா?

முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் பேசியபோது, “இப்போதுள்ள உளவுத்துறை அதிகாரிகளை முழுமையாக ஆட்சியாளர்கள் நம்புவதில்லை. தங்களுக்கு வேண்டப்பட்ட ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு ‘பாஸ்’ யார் தெரியுமா? அவர், உளவுத்துறையில் கில்லாடி என்று வர்ணிக்கப்பட்டவர்தான்” என்றார்.

பொதுவாக, ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரிகளை எதிர்க்கட்சிகள்தான் பயன்படுத்திக்கொள்ளும். ஆனால், இப்போது ஆளுங்கட்சியும் இதையே செய்கிறது. இதனால், படு ஆக்டிவாக இருப்பவர்கள், முன்னாள் அதிகாரிகள்தான். தினம் தினம் அவர்கள் தரும் தகவல்களை வைத்தே அரசியல் முடிவுகளை ஆட்சியாளர்கள் எடுக்கிறார்கள்.

இப்போதைய உளவுத்துறை அளவுக்குத் தாங்கள் வொர்த் இல்லை என இந்த ஆட்சி நினைக்கிறதோ! 

- நமது நிருபர்

உளவுத்துறை மேப்!

டி.எஸ்.ஆர் பிரிவு: முந்தைய நாள் இரவுவரை நடக்கும் விவகாரங்களை மறுநாள் காலையில்... முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர்,  டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஐ.ஜி (உளவுப்பிரிவு), ஐ.ஜி (இன்டர்னல் செக்யூரிட்டி), எஸ்.எஸ்.பி என ஒன்பது பேருக்கு இவர்கள் ரிப்போர்ட் அனுப்புவார்கள். தமிழகத்தில் நடக்கும் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், சட்டம் - ஒழுங்கு மற்றும் க்ரைம் விவகாரங்களில் ஈடுபட்டவர்களின் கைது விவரங்கள், பெரிய விபத்துகள், கல்லூரி மாணவர்கள் மோதல், ஜாதி - மதச் சண்டைகள், தொழிலாளர் பிரச்னை, அரசு ஊழியர்களின் அதிருப்தி செயல்பாடு, பல துறை சலசலப்புகள் என்பன போன்ற விவரங்கள் அந்த ரிப்போர்ட்டில் சுருக்கமாக இருக்கும்.

‘ஜெ’ பிரிவு:  தீவிரவாதம், அரசுக்கு எதிராகச் செயல்படக்கூடியவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் டெலிபோன்களை அரசின் அனுமதியுடன் கண்காணிக்கும் முக்கியமான பிரிவு இது. இந்தப் பிரிவின் அலுவலக அறை வாசல் கதவில் நம்பர் லாக் பொருத்தப்பட்டிருக்கும்.

எஸ்.பி.சி.ஐ.டி பிரிவு: மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் என்கிற கோணத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் பிரிவு. அன்றாடம் நடக்கும் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், அரசியல் கட்சிகளின் மாநாடுகள் என்று சகலத்தையும் நிருபர்களைப்போல போலீஸார் குறிப்பெடுப்பார்கள். அதைச் சென்னைக்கு அனுப்புவார்கள். இதன் சுருக்கமான ஃபைனல் ரிப்போர்ட் உயர் அதிகாரிகளுக்குப் போகும்.

புல்லட்டின்: ஃப்ளாஷ் நியூஸ் மாதிரி தமிழகத்தின் தினப்படி நடப்புகளைப் பட்டியலிட்டு காலை, மாலை, இரவு நேரங்களில் ரகசியமாக முக்கியப் அதிகாரிகள் ஒன்பது பேருக்கு அனுப்புவார்கள்.

ஓ.சி.ஐ.யூ:
தமிழக அளவில் நெட்வொர்க் வைத்திருக்கும் ரௌடிகள், போதை மருந்து பார்ட்டிகள், கள்ளநோட்டு ஆசாமிகள், கூலிப்படை போன்றவற்றைக் கண்காணிப்பது, சிறைச்சாலை மற்றும் நீதிமன்றங்களுக்கு வரும் பிரபல கிரிமினல்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது ஆகியவை இந்தப் பிரிவின் வேலை.

செக்யூரிட்டி எஸ்.பி 1:
முதல்வர், வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்புகளைக் கவனிப்பது செக்யூரிட்டி எஸ்.பி 2: வி.ஐ.பி-க்கள், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து அரசு முறையாகவோ, தனிப்பட்ட முறையிலோ வரும் முக்கியப் பிரமுகர்களின் மூவ்மென்ட்களைக் கவனித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது.

‘க்யூ’ பிரிவு: மாவோயிஸ்ட், தமிழ்த் தீவிரவாத அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களைக் கண்காணிப்பது.

ஸ்பெஷல் டிவிஷன்: மதத் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism