Published:Updated:

“நீங்க ஷட்அப் பண்ணுங்க!”

“நீங்க ஷட்அப் பண்ணுங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“நீங்க ஷட்அப் பண்ணுங்க!”

எடப்பாடியையும் பன்னீரையும் எச்சரித்த மக்கள்

“நீங்க ஷட்அப் பண்ணுங்க!”

எடப்பாடியையும் பன்னீரையும் எச்சரித்த மக்கள்

Published:Updated:
“நீங்க ஷட்அப் பண்ணுங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“நீங்க ஷட்அப் பண்ணுங்க!”

சாலையோரம் கடைபோடும் அன்றாடம்காய்ச்சிகளை ‘இது விதிமீறல்’ என்று அடித்துத்துரத்தும் காவல்துறை யும் மாநகராட்சியும், சாலைகளை மறித்து ஆளும் கட்சியினர் பேனர்கள் வைத்தால் அதற்கு பாதுகாப்பு கொடுக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அ.தி.மு.க சார்பில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆலந்தூரிலிருந்து வண்டலூர் வரை சாலை நெடுக விதிகளை மீறி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை அது. வண்டலூரைத் தொடும் மற்ற சாலைகளிலும் இதே நிலைதான். சில இடங்களில் சாலைகளின் நடுவே அமைக்கப்பட்டிருந்த வளைவுகள் சரிந்து விழுந்ததில் பலருக்குக் காயமும் ஏற்பட்டது. இதற்காக பல கி.மீ தொலைவுக்குச் சாலைகளும் சிதைக்கப்பட்டன. ஏராளமான பேனர்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

“நீங்க ஷட்அப் பண்ணுங்க!”

ஆளும்கட்சியினரின் இந்த அடாவடி குறித்து, அறப்போர் இயக்கத்தின் கவனத்துக்குவர, பேனர்களை அகற்றுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனுக்கும் சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க சொல்லி சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வ நாதனுக்கும் புகார் மனு அனுப்பியது அறப்போர் இயக்கம். ஆனால், அதிகாரிகளிடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை.

இதைத் தொடர்ந்து, பேனர்கள் வைக்கப் பட்டிருந்த பகுதிக்குச் சென்று, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகரக் காவல் துறை ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் அறப்போர் இயக்கத்தினர் நாடகம் போல நடித்துக் காட்டினர். மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனைப் போல அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனும், காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனைப்போல அந்த இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் பாசித் காசிமும் நடித்தனர். அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில், அந்த அதிகாரிகள் தங்களுடைய பொறுப்பைத் தட்டிக்கழித்து, எவ்வாறு ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல் படுகிறார்கள் என்பதையும் விளக்கியுள்ளனர்.

‘‘பொதுமக்கள் நடக்கும் பாதைக்குக் குறுக்கே பேனர்களை வைக்கக் கூடாது; ஒரு பேனருக்கும் மற்றொரு பேனருக்கும் 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என சில வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அவை எதையும் பின்பற்றாமல், ஆளும்கட்சியினர் அராஜகமாகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்தார்கள். இதுபற்றிய புகாருக்கும் நடவடிக்கை இல்லை. 

மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘எங்களால் அந்த இடத்துக்குச் சுதந்திரமாகப் போய் பேனர்களை அகற்ற முடியாது. ஆளும்கட்சியினர் மிரட்டுகிறார்கள். காவல் துறையும் பாதுகாப்புக்கு வருவதில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார். அதைக் கேட்டு அதிர்ந்துவிட்டேன். காவல்துறை அதிகாரிகளிடம் பேசினாலும் ‘கமிஷனர் எங்களுக்கு உறுதுணையாக இருந்தால்தானே எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று சொல்கிறார்கள். ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.

பேனர்களை அகற்ற வேண்டும் என்று நாங்கள் போராடுவதற்கு முன்பாக, டிராஃபிக் ராமசாமி அங்கே போராட்டம் நடத்தியுள்ளார். அப்போது கண்துடைப்புக்காக சில பேனர்களை மட்டும் அகற்றியுள்ளனர். அங்கிருந்து மாநகராட்சி அலுவலர்கள் சென்றதும், மீண்டும் பேனர்களை ஆளும்கட்சியினர் வைத்துள்ளனர். 2015-ல் அ.தி.மு.க-வினர் வைத்த பேனர்களை எங்களுடைய அமைப்பினர் அகற்றியபோது, ரௌடிகள் எங்களைத் தாக்கினர். அப்போது போலீஸார் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து விட்டு, எங்களைச் சிறையில் அடைத்தனர். இப்படி ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் காவல்துறைதான் பொதுமக்களின் நண்பனா? காவல்துறை கமிஷனரும் மாநகராட்சி ஆணையரும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியுள்ளனர். இவர்கள் இருவர்மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“நீங்க ஷட்அப் பண்ணுங்க!”

எதைச் செய்தாலும் மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது’’ என்றார் ஜெயராம் வெங்கடேசன்.

நடைபாதையைப் பயன்படுத்த முடியாத ஆத்திரத்தில் ‘சட்டப் பஞ்சாயத்து இயக்க’ உறுப்பினர் ஒருவர், ‘இது எங்கள் பயன்பாட்டுக்கான இடம்... நீங்கள் விளம்பரம் செய்வதற்கான இடமல்ல’ என துண்டுக் காகிதங்களில் எழுதி எடப்பாடி பழனிசாமி வாய்மீதும், ஓ.பன்னீர் செல்வம் வாய்மீதும் பேனரில் ஒட்டிச் சென்றிருக்கிறார். ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என மக்கள் சொல்வதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் விளக்கம் கேட்பதற்காக அவருடைய செல்போனுக்குப் பலமுறை அழைத்தும், அழைப்பை அவர் ஏற்கவில்லை. மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனும் போனை எடுக்கவில்லை. ஆனாலும், ‘இப்போது என்னால் பேச முடியாது’ என்று நமக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.

மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவும் காவல்துறை, சட்டத்துக்கு விரோதமாக பேனர் வைத்து பொது மக்களைத் துன்புறுத்தும் கரைவேட்டிகளை ஏன் கண்டுகொள்வதில்லை?

- கே.புவனேஸ்வரி