Published:Updated:

எம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்!

எம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்!
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்!

எம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்!

எம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்!

எம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்!

Published:Updated:
எம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்!
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்!

மாவட்டங்கள்தோறும் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பட்டியலில் செப்டம்பர் 3-ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட விழா. பொன்னேரி வட்டம், பஞ்செட்டி கிராமத்தில் இந்த விழாவுக்காக ஆற்று மணலை அரசே சுரண்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விழாவுக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடம், பரந்து விரிந்து கிடந்தாலும் முள்புதர்கள் வளர்ந்து பொட்டல் காடாக இருந்தது. விழாவுக்கு வரும் கட்சிக்காரர்களும் பொதுமக்களும் வசதியாக அமர வேண்டும், விழா அரங்கமும் பிரமாண்டமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இந்தப் பகுதி முழுவதுமே முள்செடிகளை அகற்றி, நிறைய மணல் கொட்டி மைதானத்தைச் சமப்படுத்தினார்கள். ‘‘இதற்காக அதிகபட்சமாகப் பத்தாயிரம் லோடு மணலை கொசஸ்தலை ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக எடுத்துள் ளார்கள்’’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் திருவள்ளூர் மக்கள்.

எம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்!

பொதுவாக இதுபோன்ற நேரங்களில், ‘எங்கள் ஊரில் இப்படி மண் எடுப்பதால் நிலத்தடி நீருக்குப் பாதிப்பு இல்லை. அருகில் உள்ள மேம்பாலம் பலவீனப்படவும் வாய்ப்பு இல்லை’ என்று குறிப்பிட்ட ஊராட்சியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்புவார்கள். அதன் பின்னரும் குறிப்பிட்ட அளவே மணல் எடுக்க உத்தரவு கிடைக்கும். ஆனால், இந்த நடைமுறைகள் எதையும் இங்கே பின்பற்றவில்லை. மேலும், ஆற்றில் மணல் எடுக்கவும் இப்போது தடை இருக்கிறது. ஆனாலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக இந்த விதிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டிருக்கின்றன.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காரனோடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரனோடை மேம்பாலத்தின் அடிவாரத்திலும், நேரடியாக கொசஸ்தலை ஆற்றிலும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளி இந்த மைதானத்துக்கு எடுத்துச் சென்றார்கள். இதற்காக மணல் அள்ளும் பணிக்கு ராட்சதப் பொக்லைன் எந்திரங்கள் அரசின் சார்பிலேயே வாடகைக்கு எடுக்கப் பட்டன. ஏற்கெனவே மணல் கொள்ளையர்களின் எல்லை மீறிய சுரண்டலால், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த காரனோடை மேம்பாலம் அப்படியே சரிந்து ஆற்றுக்குள் இறங்கிவிட்டது. மீட்புப் பணிக்கு வந்த ராணுவ வீரர்கள், இரும்புக் கம்பிகளால் முட்டுக்கொடுத்து பாலத்தைச் சீரமைத்தனர். அதன்பின் இதன் அருகிலேயே புதிதாக மற்றொரு மேம்பாலமும் அமைக்கப்பட்டது. இப்போது ஆட்சியாளர்கள் மணல் சுரண்டுவது, இந்தப் பாலங்களின் இடுப்புக்குக் கீழேதான். காரனோடைப் பாலத்தைக் காப்பாற்ற மீண்டும் ராணுவம் வர வேண்டிய சூழலை அரசு அதிகாரிகளும், ஆளுங் கட்சியினரும் போட்டி போட்டு உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

வர்தா புயலுக்கு மனிதர்கள்மீது அத்தனை கோபம் வந்ததில் தப்பே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!

 - ந.பா.சேதுராமன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!