Published:Updated:

கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பாஸ்!

கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பாஸ்!

கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பாஸ்!

கீழ்க்காணும் கேள்விகளுக்கு முடிந்தால் பதில் சொல்லவும்! முடியலைன்னா... அப்படி எல்லாம் இல்ல, கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பாஸ்!

1) பல கோடி மக்களின் ‘உயிரை’ வாங்கிய தர்மயுத்தம் நடைபெற்ற ஸ்தலம் எது?

அ) போயஸ் கார்டன்
ஆ) கூவத்தூர்
இ) புதுச்சேரி

2) இவர்களுள் அதிக முறை முதுகில் குத்தப்பட்டு துரோகங்களால் வீழ்ந்தவர் யார்?

அ) சின்னம்மா சசிகலா
ஆ) அல்டிமேட் ஸ்டார் அஜித்
இ) இன்லேண்ட் லெட்டர்

3) இவற்றில் எது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என நீங்கள் மம்மி ப்ராமிஸ் செய்வீர்கள்?

அ) ரஜினி அரசியலுக்கு வருவது
ஆ) அ.தி.மு.க-வின் அனைத்து அணிகளும் இணைவது
இ) அன்புமணி முதல்வராவது

கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பாஸ்!

4) சகலரையும் ஆட்டி வைக்கும் அந்த ‘டுப்புசிக்கு டுப்புசிக்கு பிக் பாஸ்’ யார்?

அ) கமல்
ஆ) ஸ்பீக்கரின் வழி வரும் குரல்
இ) மோடி

5) இவர்களில் யாருடைய காமெடியை நீங்கள் மிகவும் மிஸ் செய்கிறீர்கள்?

அ) கவுண்டமணி
ஆ) தீபா
இ) வடிவேலு


6) இவர்களுள் தலைசிறந்த மரபியல் விஞ்ஞானி யார்?

அ) க்ரிகோர் மெண்டல்
ஆ) ஜேம்ஸ் வாட்ஸன்
இ) செந்தமிழன் சீமான்

7) எப்போதும் ஜென் நிலையிலேயே இருக்கும் துறவி இவர்களுள் யார்?

அ) நாகசேனா
ஆ) நாகார்ஜுனா
இ) ஜெயா டி.வி செய்தி ஆசிரியர்

8) இவர்களில் யாருக்கு வேலைப்பளு அதிகம்?

அ) வி.ஜி.பி வாசலில் சிலையாக நிற்கும் விகடகவி
ஆ) செயல் தலைவர் ஸ்டாலின்
இ) ‘கற்க கசடற’ படத்தில் சும்மாவே இருக்கும் வடிவேலு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பாஸ்!

9) இவற்றுள் அதிக இரைச்சலை உண்டாக்குவது எது?

அ) தீபாவளிப் பட்டாசுகள்
ஆ) போர் போடும் இயந்திரம்
இ) பி.ஜே.பி தலைவர்கள் பங்குபெறும் டி.வி விவாதம்

10) குட்டிக் கதைகள் சொல்வதில் யார் கில்லி என நினைக்கிறீர்கள்?

அ) ஜெயலலிதா
ஆ) முன்னாள் இளைய தளபதி, இந்நாள் தளபதி விஜய்
இ) சாலமன் பாப்பையா

(டிஸ்க்ளைமர்: வைகோ சொல்லும் கதைகள் கன்னித்தீவை விட சைஸில் பெரியவை என்பதால், அவரை இந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது!)

இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில்களைத் தேர்ந்தெடுத்து... எங்கேயும் அனுப்ப வேண்டாம். எப்படியும் டி.வி-யில நியூஸ் பார்த்து டென்ஷனாகத்தான் போறீங்க. இதை ஜாலி பிரேக்கா எடுத்துக்கோங்க மக்களே!

- எஸ்.நித்திஷ்
ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி