Published:Updated:

கூலா பதில் சொல்லும் ஓலா! - கொந்தளிக்கும் டிரைவர்கள்

கூலா பதில் சொல்லும் ஓலா! - கொந்தளிக்கும் டிரைவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
கூலா பதில் சொல்லும் ஓலா! - கொந்தளிக்கும் டிரைவர்கள்

டார்கெட்... சர்வீஸ் பேமென்ட்... ஃபைன்... பவுன்சர்ஸ்...

கூலா பதில் சொல்லும் ஓலா! - கொந்தளிக்கும் டிரைவர்கள்

டார்கெட்... சர்வீஸ் பேமென்ட்... ஃபைன்... பவுன்சர்ஸ்...

Published:Updated:
கூலா பதில் சொல்லும் ஓலா! - கொந்தளிக்கும் டிரைவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
கூலா பதில் சொல்லும் ஓலா! - கொந்தளிக்கும் டிரைவர்கள்

‘விரைந்த பயணம்... பாதுகாப்பான பயணத்துக்கு நாங்க கியாரன்டி’ - வாடிக்கையாளர்களுக்கு இப்படி உறுதியளிக்கிறது ‘ஓலா’ கால் டாக்ஸி நிறுவனம். ஓலா கார் ஓட்டுநர்களோ, “ஓலாவுடன் இணைந்த எங்கள் வாழ்க்கைப் பயணம், பிரேக்டவுனாகிக் கிடக்கிறது” எனக் குமுறுகிறார்கள்.

ஓலா உள்ளிட்ட பெரிய வாடகை கார் நிறுவனங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க, சமீபத்தில் பழவந்தாங்கலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒன்று கூடினார்கள் ஓட்டுநர்கள். அவர்களிடம் பேசினோம்.

கூலா பதில் சொல்லும் ஓலா! - கொந்தளிக்கும் டிரைவர்கள்

“நாங்களே பார்ட்டி பிடிச்சு தர்றோம். நீங்க ஓட்டுற முதல் நான்கு கி.மீ-க்கு 110 ரூபாயும், அதற்கடுத்து ஒவ்வொரு கி.மீ-க்கும் 14 ரூபாயும் தருகிறோம் என்று சொல்லி, தொடக்கத்திலேயே எங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முன்பணமும் கொடுத்து இணைச்சாங்க. ஆனா, சொன்ன மாதிரி எங்களுக்கு கி.மீ-க்கான பணம் தருவதேயில்லை. காருக்குத் தகுந்த மாதிரி டார்கெட் வைக்கிறாங்க. நான் ஓட்டுற சின்ன காருக்கு ஒரு நாளைக்கு 3,300 ரூபாய் டார்கெட். இதை அடைஞ்சா எங்களுக்கு அதுக்கு இணையாக இன்சென்டிவ் கொடுப்பாங்க. இந்த மொத்தப் பணத்துக்கும் 21 சதவிகிதம் சர்வீஸ் பேமென்ட் என்ற பெயரில் ஓலா கமிஷன் எடுத்துக் கொள்ளும். (ஊபரில் 26 சதவிகிதம்)

ஆப் (App) புக்கிங்ல கஸ்டமர் ஒரு ரைடு போனா, உதாரணத்துக்கு ரூ. 300 சார்ஜ் வருதுன்னா, அதுல கஸ்டமர் சேவைனு ரூ. 100 எடுத்துக்கிட்டு, எங்களுக்கு ரூ. 200-ஐ ஓலா கொடுக்கும். இந்தப் பணத்துக்கும் 21 சதவிகிதம் கமிஷன் எடுத்துக்கும். ஒவ்வொரு ரைடுக்கும் ஒரே மாதிரி பிக்ஸட் ரேட் இல்லாம, மாறி மாறி வரும். இப்படி எங்களுக்குக் காட்டுற தொகையில இருந்து எங்க டார்கெட்டை அடையணும்னா, ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 18-20 மணி நேரம் உழைச்சாலும் முடியறதில்ல. இப்படி அவங்க போடுற கணக்கு, கமிஷன் எல்லாம் போக நம்ம அக்கவுன்டுக்கு ஒரு நாளைக்கு ரூ. 1,200 வந்தா பெருசு. இதுல பெட்ரோல் செலவு, வண்டிக்கு வாங்குன கடன் தவணை பணம் போக, கையில. 200 ரூபாய்தான் நிக்குது” என்கிறார்கள் ஓட்டுநர்களான சங்கர் மற்றும் அண்ணாதுரை.

அடுத்ததாக நம்மிடம் பேசிய ராஜன், “கட்டணம் நிர்ணயிக்க எந்த வரைமுறையும் அவங்களுக்கில்லை. எங்களுக்கான ரேட்டிங்-ல கஸ்டமர் எங்களுக்குக் குறைஞ்ச ஸ்டார் கொடுத்துட்டா, அந்தக் காரணத்தைக் காட்டி ஃபைன் போட்டு பேமன்டையும் நிறுத்தி வச்சுடுறாங்க. எங்க பிரச்னையைச் சொல்ல ஓலா கம்பெனிக்குப் போனா, வெளியே ‘பவுன்சர்ஸ்’ வெச்சு மிரட்டுறாங்க. எங்களைக் கொத்தடிமையைப் போல நடத்துறாங்க” என்றார் வேதனையாக.

‘தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு’ மாநிலத் தலைவரும், ‘ஃபாஸ்ட்டிராக் கால் டாக்சி’ நிறுவனத்தை நடத்துபவருமான ரெட்சன் அம்பிகாபதியிடம் பேசினோம்.

“ஓலா, ஊபர் போன்ற பெரிய நிறுவனங்கள், தமிழ்நாட்டு டாக்சி நிறுவனங்களை அழித்து விட்டன. ஓட்டுநர்களையும் கொத்தடிமைகளைப் போல நடத்துகின்றன. முன்பிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் பல முறை மனு கொடுத்தும், எந்தப் பலனுமில்லை. எனவே, பெரியளவில் போராட்டம் நடத்தப் போகிறோம்” என்றார் அழுத்தமாக.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூலா பதில் சொல்லும் ஓலா! - கொந்தளிக்கும் டிரைவர்கள்

ஓலா நிறுவனத்தின் விளக்கமறிய ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அதன் அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கிருந்த ‘பவுன்சர்ஸ்’ நம்மைப் பல அலுவலகங்களுக்கு அலைக்கழித்தனர். நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பின் நம்மிடம் பேசியவர், செக்யூரிட்டி பசுபதி. “ ‘நாங்க எதுவும் சொல்லமுடியாது. வேணும்னா தலைமைக்கு மெயில் அனுப்பி விளக்கம் கேட்டுக்கச் சொல்லுங்க’னு எங்க  மேனேஜர் சொல்ல சொல்லிட்டாரு” என்றார். மெயில் அனுப்பியும் பதில் இல்லை.

பிறகு, பெங்களூருவில் உள்ள ஓலா நிறுவனத்தின் பெயர் வெளியிட விரும்பாத தென்னிந்திய மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசினார். “பீக் ஹவர்ல டிமாண்டு இருக்கும்போது, கூடுதல் கட்டணம் வாங்குவது என்பது உலகம் முழுக்க கடைபிடிக்கப்படுகிற நியதி. எங்களைப் பொறுத்தவரை ஓலா டிரைவர்களை எங்கள் ஒர்க்கிங் பார்ட்னர்களாகவே கருதுகிறோம். சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்குப் புள்ளிகளை வழங்கி, அதன் அடிப்படையில் வீடு, டி.வி., கார் போன்ற ஊக்குவிப்புப் பரிசுகளைக் கொடுக்கிறோம். நாங்கள் வாடிக்கையாளர்களுக்கும் டிரைவர் களுக்கும் பாலமாக இருக்கிறோம். அதனால், சேவைக் கட்டணம் வாங்குகிறோம். முன்பைவிட ஓலா மூலமாக அதிக ரைடு டிரைவர்களுக்குக் கிடைக்கிறது. டெல்லி, பெங்களூரை விட சென்னையில் கொஞ்சம் டிமாண்டு குறைவு என்பதால் டார்கெட் ரீச் செய்ய கடினமாக இருக்கலாம். பவுன்சர்ஸைப் பொறுத்தவரை யாரையும் மிரட்ட வைத்திருக்கவில்லை. பாதுகாப்புக்காக மட்டுமே அவர்கள் உள்ளனர்” என்றார்.

- சே.த.இளங்கோவன்
படங்கள்: ப.சரவணகுமார்