அந்த அடர்ந்த காட்டுல திருவிழாவுக்கு ஏற்பாடு நடந்துச்சு. சிங்கராஜாவுக்குக் குட்டிகள் பிறந்ததை முன்னிட்டு நடக்கப்போகும் பெரிய்ய்ய்ய திருவிழா அது. ஆடல் பாடல், பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு நடக்கப்போகும் திருவிழான்னா சும்மாவா? எல்லா விலங்குகளும் ரொம்ப குஷியாகிடுச்சு. ‘மத்தவங்களைவிட நாம அழகா தெரியணும், அசத்தலா பெர்பாமன்ஸ் செய்யணும்னு பயங்கரமா பிளான் போட ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்காக விதவிதமா புதுப் புது டிரெஸ்களுக்கு தையல்காரரான தூக்கணாங்குருவிகிட்டே ஆர்டர் குவிய ஆரம்பிச்சது.

அதே காட்டின் மரத்தில் ஒரு குட்டிப் புழுவும் இருந்துச்சு. அதுக்கு அப்பா அம்மா இல்லே. அதனால, புதுத் துணியை வாங்கிக் கொடுக்கவும் ஆளில்லை. இருந்த பழைய டிரெஸ் ஆங்காங்கே கிழிஞ்சிருந்துச்சு. மத்த எல்லா விலங்குக் குட்டிகளும் புழுவைப் பார்த்து கிண்டல் பண்ணுச்சுங்க.

‘‘நாங்க எல்லோரும் திருவிழாவுக்குப் போயிட்டா உனக்குத் தனியா இருக்க பயமா இருக்குமே என்ன செய்யப்போறே?’’ எனக் கேட்டுச்சு அணில்பிள்ளை.

‘‘அவன் ஏன் தனியா இருக்கப்போறான்? அவனும் திருவிழாவுக்கு வருவானே’’ என்றது கிளிக்குஞ்சு.

‘‘இந்தக் கிழிஞ்ச டிரெஸ்ஸோடு வந்தா துரத்தி அடிச்சிருவாங்க’’ என்று சிரித்தது முயல்குட்டி.

‘‘அட... அங்கே அடுப்படியில் எடுபுடி வேலை செய்யறதுக்கு எதுக்கு புது டிரெஸ்? அப்படி திருவிழாவுக்கு வருவான்னு சொன்னேன்’’ என்று கிளிக்குஞ்சு சொன்னதும் எல்லாம் சிரிச்சதுங்க... புழுவுக்குக் கோபமும் அழுகையுமா இருந்துச்சு. மெதுவா கிளையில் ஏறி, ஒரு ஓரமா படுத்துக்கிச்சு. அழுது அழுது புழுவைச் சுத்தி கண்ணீர்க் குளமே உருவாகிடிச்சு. அடிச்ச காற்றுல தூசிகளும் பறந்துவந்து கண்ணீரில் விழுந்து மிதந்துச்சு. இரவு நெருங்க நெருங்க வீசின குளிர் காற்றுல அந்தக் கண்ணீர் எல்லாம் கெட்டியாகி, புழுவின் மேல ஒட்டிக்கிச்சு. கண்ணீர் ஓட்டுக்குள் அடைபட்ட புழு காணாமல் போயிடுச்சு.

திருவிழாவுக்கு நாள் நெருங்க நெருங்க காட்டில் பரபரப்பு அதிகமாச்சு. தூக்கணாங்குருவி ராத்திரி பகலா உழைச்சு உழைச்சு துணிகளைத் தைச்சு தைச்சு கொடுத்துட்டே இருந்துச்சு. புதுத் துணியை வாங்கின விலங்குகள் எல்லாம் அதை ஒருமுறை போட்டுப் பார்த்து ரிகர்சலும் நடத்தினாங்க... இந்த கலாட்டாவில், அந்தப் புழு என்ன ஆச்சு, எங்கே போச்சுன்னு யாருமே தேடலை.

திருவிழா நாளும் வந்துச்சு. எல்லா விலங்குகளும் புது டிரெஸ், மேக்கப் போட்டு ஜோரா தயாராகிக் கிளம்பினாங்க. சிங்கராஜாவின் குட்டிகளுக்கு அழகழகான டிரெஸ்களைப் போட்டு மேடையில் உட்கார வெச்சிருந்தாங்க. அப்போ, பட்டு டிரெஸ் போட்டுட்டு ஜோரா பறந்து வந்து, அழகான ரோஜாப் பூ மேலே உட்கார்ந்தது ஒண்ணு.

சிங்கராஜா உட்பட எல்லோரின் பார்வையும் அந்தப் பக்கம் திரும்புச்சு. எல்லோரும் வாயைப் பிளந்து பார்த்தாங்க. பின்னே... நீலநிறப் பட்டாடையில், தங்க நிற ஜிகினாக் கோடுகளோடு, வைரத்தை ஒட்டிவெச்ச மாதிரி ஆங்காங்கே புள்ளிகளோடு தகதகன்னு மின்னினா, யாருதான் பிரமிக்க மாட்டாங்க?

‘‘ஹேய் யாருப்பா நீ? இதுவரைக்கும் உன்னைப் பார்த்ததே இல்லியே... பக்கத்துக் காட்டிலிருந்து சீஃப் கெஸ்ட்டா வந்திருக்கியோ?” எனக் கரடி மந்திரி கேட்டுச்சு.

‘‘காட்டின் இன்சார்ஜ், இந்தத் திருவிழாவின் இன்சார்ஜான உங்களுக்குத் தெரியாமல் எப்படி புதுசா வரமுடியும்?’’ எனச் சொல்லிச்சு அந்தப் பட்டு ராணி.

‘‘அதானே... எப்படி வந்தே?’’ என மூக்கு மேலே விரலைவெச்சு யோசிச்சது கரடி.

‘‘நீ யாரா இருந்தாலும் பரவாயிலை. எங்க குழந்தைகள் விழாவுக்கு வந்து சிறப்பிச்சதுக்கு ரொம்ப நன்றி. நீதான் விழாவை ஆரம்பிச்சு வைக்கணும்’’ எனச் சொல்லிச்சு சிங்கராஜா.

‘‘ராஜா, நான் விஷயத்தைச் சொல்றேன். நான் இதே காட்டிலிருந்த ஒரு புழு. புதுத்துணி இல்லையேன்னு அழுது அழுது கண்ணீர்க் கூட்டுக்குள்ளே அடைபட்டுட்டேன். அந்த நீரும் தூசியும் வெயிலின் வெப்பமும் சேர்ந்து என் உடம்பை என்னென்னமோ செஞ்சது. ஆனாலும் நான் பொறுத்துக்கிட்டு, புத்தாடை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்தேன். கொஞ்ச நாளில் என் உடம்பில் மாற்றம் நடந்து இந்த அழகான சிறகு ஆடை வந்துச்சு. கூட்டை உடைச்சுக்கிட்டு பறந்து வந்தேன்’’ என சந்தோஷமா சொல்லிச்சு அந்தப் பட்டு ராணி.

‘‘சபாஷ்! நம்பிக்கையோடு முயற்சி செஞ்சா நினைச்சது கிடைக்கும்னு நிரூபிச்சுட்டே புழுவே. பட்டு மாதிரி இருக்கிற உன்னை இனிமே பட்டாம்பூச்சின்னே கூப்பிடறோம். விழாவை ஆரம்பிக்கலாம்’’ எனச் சொல்லிச்சு சிங்கராஜா.

அந்தப் புழுவை கேலி செஞ்சவங்க எல்லாம், ‘‘எங்களை மன்னிச்சிடுங்க பட்டாம்பூச்சியே. இன்னியிலிருந்து நாம ஃப்ரெண்ட்ஸ்’’ எனச் சொல்லி, பட்டாம்பூச்சிகிட்டே ஆட்டோகிராப் வாங்கிச்சுங்க.
ஆட்டம் பாட்டமா திருவிழா ஆரம்பிச்சது.