Published:Updated:

“சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன்” - ஹெச்.ராஜா

“சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன்” - ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
“சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன்” - ஹெச்.ராஜா

“சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன்” - ஹெச்.ராஜா

“சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன்” - ஹெச்.ராஜா

“சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன்” - ஹெச்.ராஜா

Published:Updated:
“சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன்” - ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
“சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன்” - ஹெச்.ராஜா
“சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன்” - ஹெச்.ராஜா

மிழ்நாடு சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு அரசியல்வாதி ஒருவர் போட்டியிடுவது இதுவே முதன்முறை. பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா களமிறங்கியிருப்பது சர்ச்சைகளை விதைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் 1916-ம் ஆண்டு அன்னிபெசன்ட் மற்றும் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோரால் சாரண - சாரணியர் இயக்கம் தொடங்கப்பட்டது. அதில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருப்பார்கள். தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். இதற்கான தேர்தலில் முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் என மொத்தம் 505 பேர் வாக்களிப்பார்கள். இதில் வெல்பவர், சுமார் மூன்று லட்சம் சாரண இயக்க மாணவர்களை நிர்வகிக்கும் அதிகாரம் பெறுவர். பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் இயக்குநர் மணிக்கு எதிராக, ஹெச்.ராஜா போட்டியிடுகிறார்.

சாரணர் இயக்கத்தின் ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘தற்போது துணைத் தலைவராக இருக்கும் மணி, இயக்கத்தில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவர், கல்வித்துறை இயக்குநராக இருந்தபோதும் சாரண இயக்கத்தைத் தீவிரமாக வளர்த்தெடுத்தார். இந்த இயக்கத்தை மெட்ரிக் பள்ளிகளிலும் கட்டாயம் தொடங்க வேண்டுமென வலியுறுத்தினார். மணிக்கு ஆதரவாகப் பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கும் நிலையில், ‘ஹெச்.ராஜாவுக்கே வாக்களியுங்கள். மாற்றி வாக்களித்தால் துறை ரீதியான நடவடிக்கைக் கடுமையாக இருக்கும். இது கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் வாய்மொழி உத்தரவு’ என்று முதன்மைக் கல்வி அதிகாரிகள் எங்களை மிரட்டுகின்றனர். திருச்சியில் நடந்த பி.ஜே.பி கூட்டத்தில், ‘ஆசிரியர்கள் யாரும் வகுப்பறைகளில் பாடம் நடத்துவதில்லை. அவர்கள் கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து வசூலிக்கும் தொழிலைச் செய்கின்றனர்’ என ஆசிரியர் இனத்தை மோசமாகச் சித்திரித்தார் ஹெச்.ராஜா. அப்படிப்பட்டவரை எங்களுக்கான தலைவராக எப்படித் தேர்வு செய்ய முடியும்? ஆனால், அரசின் பள்ளிக்கல்வித் துறை ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாக உள்ளது. இதற்கு ஒரு சின்ன உதாரணம், தேர்தல் விதிகள் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் இளங்கோவன், ஹெச்.ராஜாவைச் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்” எனச் சொல்லி குமுறினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன்” - ஹெச்.ராஜா

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி, “கல்வி நிலையங்களுக்கு வெளியே முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட்டு, மாணவர்களிடையே பொறுப்பு உணர்வு, தற்சார்பு, இயற்கை நேயம், தன்னம்பிக்கை, கூட்டு வாழ்வு, ஒற்றுமை உணர்வு ஆகிய பண்புகளை இளம் வயதிலேயே வளர்க்க வேண்டும் என்பதே சாரணர் இயக்கத்தின் நோக்கம். இதில் உயர்ந்து சேவையாற்றும் மாணவர்களுக்கு, குடியரசுத் தலைவர் விருது அளிப்பார். அவ்வாறு அன்றைய குடியரசுத் தலைவர் சஞ்சீவி ரெட்டியின் கையால் ‘சாரணி’ என்று விருது பெற்றவள் நான். அந்த உரிமையில் கேட்கிறேன், ஹெச்.ராஜாவுக்கும் சாரணர் இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம்? இவர் தலைவர் ஆகிவிட்டால், தமது மதவெறி விஷத்தை மாணவ சமூகத்தின் நெஞ்சில் திணிக்கவே செய்வார். இந்த இயக்கம் நாளடைவில் ‘சாகா’  ( ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு ) ஆக மாறிவிடும். இது தடுக்கப்பட வேண்டும்” என்றார் அழுத்தமாக.

“சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன்” - ஹெச்.ராஜா
“சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன்” - ஹெச்.ராஜா

இந்த நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “சாரணர் இயக்கத்துக்குள் புகுந்து காவி, மதவாதக் கொள்கையைப் புகுத்தி ஒற்றுமையான மாணவ சமூகத்தில் குழப்பம் விளைவிக்க முயலுகின்றனர். இதற்காகவே, ஹெச்.ராஜாவைப் பதவியில் அமர்த்த, தேர்தல் விதிகளை உள்நோக்கத்தோடு அ.தி.மு.க அரசு மாற்றியுள்ளது” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஹெச்.ராஜாவிடம் பேசினோம். “என் அப்பா, 20 ஆண்டுகளுக்கு மேல் சாரண - சாரணியர் இயக்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். அந்த வகையில் எனக்குச் சிறுவயது முதலே இந்த இயக்கத்துடன் தொடர்பு உண்டு. காவி என்பது இங்கு தவறாகப் பொருள் தரப்படுகிறது. உண்மையில், நம் தேசியக் கொடியில் காவி நிறம் தியாகத்தையும், வெள்ளை நிறம் தூய்மையையும், பச்சை நிறம் பசுமையையும் குறிக்கும். ஸ்டாலினுக்கு இது தெரியாதா? எனவே, தியாக உணர்வை வளர்க்கும் பொருளில், சாரணர் இயக்கத்தை நிச்சயம் காவிமயம் ஆக்குவேன்” என்றார் ஆவேசமாக.

“நாடு, மதம் கடந்து அனைவரும் ஒரே சகோதரர்கள் என்ற மனப்பான்மையை வளர்ப்பதே நமது இயக்கத்தின் அறம்” எனக் குறிப்பிடுகிறார் சாரணர் இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவுல். அந்த நோக்கம், ஒரு அரசியல்வாதியின் நுழைவால் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.

- சே.த.இளங்கோவன்
படங்கள் : பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism