‘‘செப்டம்பர் மாதம்... செப்டம்பர் மாதம்... வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம். அக்டோபர் மாதம்... அக்டோபர் மாதம்... வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்’’ எனப் பாடியபடியே உள்ளே வந்தார் கழுகார்.

பாடலுக்கானப் பொருளைக் கழுகாரே அவிழ்ப்பார் எனக் காத்திருந்தோம். ‘‘இந்த செப்டம்பர் மாதம், தினகரன் அணிக்கு இன்பமாக இருக்குமா அல்லது எடப்பாடி அணிக்கு இன்பமாக இருக்குமா? அக்டோபர் மாதம் தினகரன் அணிக்குத் துன்பமாக இருக்குமா அல்லது எடப்பாடி அணிக்குத் துன்பமாக இருக்குமா என்பதற்கெல்லாம் விடை கிடைக்கலாம்’’ எனப் பொழிப்புரை எழுதிவிட்டு மேட்டருக்குத் தாவினார் கழுகார்.

‘‘ ‘உங்கள் மீது பழைய வழக்குகள் இருக்கின்றன. கொலை வழக்குக்கூட பதிவு செய்ய முடியும். பார்த்துக்கொள்ளுங்கள்’ என முன்னாள் அமைச்சர் பழனியப்பனை முதல்வர் எடப்பாடி மிரட்டியதாக இரண்டு வாரங்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன். அதன்படியே இப்போது பழனியப்பனைக் குறிவைத்துத் துரத்துகிறார்கள். தினகரன் கோஷ்டியில் துறுதுறுவென செயல்படும் எம்.எல்.ஏ-க்களில் பழனியப்பனும் ஒருவர். இவரின் ஆதரவில் ஒன்றிரண்டு எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர். துறை ரீதியான கான்ட்ராக்ட் விடும் விஷயத்தில் நாமக்கல் கான்ட்ராக்டர் சுப்பிரமணியத்தை பழனியப்பனுக்குத் தெரியும். ஒரு கட்டத்தில், சுகாதாரத் துறையின் கான்ட்ராக்ட்களை எடுக்க ஆரம்பித்தார் சுப்பிரமணியம். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நெருக்கமானார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் விஜயபாஸ்கர் வீட்டில் ஐ.டி. ரெய்டு நடந்தது அல்லவா? அதன் தொடர்ச்சியாக, சுப்பிரமணியத்தின் வீட்டிலும் சோதனை நடந்தது. ரெய்டு நடந்தபோது அவர் வெளிநாட்டில் இருந்தார். அங்கிருந்து திரும்பியவருக்கு வருமானவரித் துறை விசாரணை வளையத்தை விரித்தது. அப்போது ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார் சுப்பிரமணியம். அவர் எழுதிவைத்துவிட்டுப்போன கடிதத்தில் பலரின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அதில் பழனியப்பன் பெயரும் இருந்தது. தினகரனுக்கு ஆதரவாக பழனியப்பன் உறுதியாக இருந்த நிலையில், சுப்பிரமணியன் வழக்குத் தொடர்பாக பழனியப்பனுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது.’’

‘‘பழனியப்பன் என்ன சொல்கிறார்?’’

‘‘எடப்பாடியை முதல்வர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் எனச் சொல்லி, கவர்னருக்குக் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்து ஜக்கையன் எம்.எல்.ஏ எடப்பாடி முகாமுக்குத் தாவியதால் மற்ற எம்.எல்.ஏ-க்களை குடகில் இருக்கிற ரிசார்ட்டுக்கு மாறினார்கள். அங்கே வந்த பழனியப்பன், அதன்பிறகு வேறு இடத்துக்கு எஸ்கேப் ஆகிவிட்டார். போலீஸில் சிக்கினால் அவரைச் சிறையில் தள்ளிவிடுவார்களோ என்கிற பீதியில் இருக்கிறார்கள் தினகரன் தரப்பினர். பழனியப்பன் தலைமறைவு ஆவதற்கு முன்பு, தினகரனைச் சந்தித்தாராம். சுப்பிரமணியம் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தனக்கு எந்தச் சம்பந்தமுமில்லை என விளக்கினாராம். அப்போது பழனியப்பன் சொன்ன ஒரு தகவலைக் கேட்டு ஆடிப்போய்விட்டாராம் தினகரன்.’’

‘‘அது என்ன தகவல்?’’

‘‘ஒருமுறை முதல்வர் பழனிசாமியை பழனியப்பன் சந்தித்தபோது, சுப்பிரமணியம் விவகாரம் பேசப்பட்டிருக்கிறது. ‘அந்த கேஸ் ரொம்ப சீரியஸானது. சாதாரணமாக இருந்து விடாதீர்’ என மர்ம புன்னகையுடன் எடப்பாடி சொல்ல... பழனியப்பனோ, ‘எனக்கும் அதற்கும் என்னங்க சம்பந்தம்?’ என எதிர்கேள்வி கேட்டாராம். இந்த உரையாடலை தினகரனிடம் நினைவுப்படுத்திய பழனியப்பன், ‘போலீஸ் துறையைத் தன் வசம் வைத்திருக்கும் முதல்வர், மறைமுகமாக மிரட்டும் வகையில் பேசினார். அந்த வழக்கை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே தனக்கு டார்ச்சர் கொடுக்கலாம்’ என தினகரனிடம் பழனியப்பன் சொல்லியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் பழனியப்பனை விசாரணைக்கு அழைத்தார்களாம். ஒருமுறை பழனியப்பனும் ஆஜர் ஆகியிருக்கிறார். இரண்டாவது முறை சம்மன் அனுப்பியபோது, திட்டமிட்டு ஆப்சென்ட் காட்டவேண்டும் எனக் காய்கள் நகர்த்தப்பட்டதாம். ‘இந்த சம்மன் ஒன்றும் முக்கியமில்லை. நீங்கள் அரசியலில் பிஸியாக இருப்பீர்கள். அதைக் கவனியுங்கள்’ என அவரிடம் போனில் போலீஸார் சொல்லியிருக்கிறார்கள். அதை நம்பி, பழனியப்பன் போகவில்லை. இந்த ஆப்சென்ட் விஷயத்தைச் சுட்டிக்காட்டித்தான், குடகு ரிசார்ட்டுக்கு பழனியப்பனைத் தேடி போயிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்.’’

‘‘தினகரன் ரியாக்ஷன் என்ன?’’

‘‘ தினகரனோ, ‘சட்டப்படி எதிர்கொள்ளுங்கள்; மீதியை பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ எனச் சொல்லியிருக்கிறார். இதே நேரத்தில், தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த சேலம் பிரமுகர்கள் சிலர், பத்து வருடங்களாகக் கிடப்பில் உள்ள கட்சித்தொண்டர் சுகுமாரின் மர்ம சாவு பற்றி நினைவுப்படுத்தினார்களாம். சுகுமார் மர்ம மரணம் நிகழ்ந்தபோது எடப்பாடி பழனிசாமியும், சபாநாயகர் தனபாலும் அப்போது எந்த முக்கியப் பதவியிலும் இல்லை. மின்துறை அமைச்சர் தங்கமணி அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். இந்த மூவரை மையம் கொண்ட சுகுமார் சாவு விவகாரத்தை தினகரனிடம் சொல்லியிருக்கிறார்கள் சேலம் பிரமுகர்கள். அதனால் அந்த வழக்கை தினகரன் தரப்பு தற்போது கிளறிக்கொண்டிருக்கிறது.’’

‘‘சுகுமார் மரணத்தில் என்ன மர்மம்?’’

‘‘தி.மு.க. ஆட்சியின்போது பொதுமக்கள் பிரச்னைக்காக சேலம் மாவட்டத்தில் போராட்டம் நடத்தினார்கள் அ.தி.மு.க-வினர். அப்போது பலர் கைது செய்யப்பட்டனர். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் சுகுமாரும் ஒருவர். திடீரென சுகுமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல விடாமல் பழனிசாமி, தனபால், தங்கமணி உள்ளிட்டோர் தடுத்ததால், சுகுமார் இறந்துவிட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் புகார் தெரிவித்தார்களாம். அந்தப் புகாரை மீண்டும் விசாரிக்கச் சொல்லி, தினகரன் தரப்பு வக்கீல்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். பழனியப்பன் மீதான வழக்கை பழனிசாமி துரிதப்படுத்தினால், சுகுமார் மர்மச் சாவுக்கு சி.பி.ஐ விசாரணை கேட்டு நீதிமன்றத்தை நாட முடிவு எடுத்திருக்கிறார்கள். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குக் குடைச்சலைக் கொடுத்து, அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக அரசின் அத்தனை இயந்திரங்களையும் களமிறக்கியிருக்கிறது எடப்பாடி தரப்பு. பழனியப்பன் மட்டுமே எடப்பாடியின் குறியல்ல! குடகு விடுதியில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவரும் குறிவைத்துத் துரத்தப் படுகின்றனர். இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சேர்ந்து நடத்திய பொதுக்குழுவுக்கு முன்பே, பிரச்னைகள் தொடங்கிவிட்டாலும், பொதுக்குழுவுக்குப் பிறகு தினகரன் அணி எம்.எல்.ஏ-க்களை வெளிப்படையாக மிரட்டும் வேலையில் இறங்கிவிட்டார்கள். சாம, பேத, தான, தண்டம் என அனைத்து வழிகளிலும் குடைச்சல்கள் ஆரம்பித்துவிட்டன. ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்கள் மீதும் இருக்கும் பழைய வழக்குகளைத் தோண்டி எடுத்து, அதை வைத்து மிரட்டும் வேலைகள், கோடிகளில் பேரம், தமிழ்நாடு போலீஸை கர்நாடகாவுக்கு அனுப்பி விசாரணை... எனப் பல வகைகளில் மிரட்டல்கள் தொடங்கிவிட்டன.’’

‘‘குடகு ரிசார்ட்டில் என்ன நடந்தது?’’

‘‘நான்கு டி.எஸ்.பி-க்கள் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தமிழக போலீஸார், குடகுக்குப் போயினர். ‘கான்ட்ராக்டர் சுப்பிரமணியம் தற்கொலை வழக்கில் பழனியப்பனை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம்’ எனச் சொல்லியிருக்கிறது தமிழ்நாடு போலீஸ். முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வுமான செந்தில்பாலாஜிதான் போலீஸ்காரர்களை டீல் செய்துள்ளார். ‘என்ன சார் நினைச்சுட்டு இருக்கீங்க? அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் உள்ளது. பழனியப்பனை விசாரிக்க வேண்டுமானால், உரிய முறையில் சம்மன் அனுப்புங்கள். அதற்கு வழக்கறிஞர் மூலம் உரிய பதில் அனுப்புவோம். அதையும் மீறி அவரை விசாரணைக்கு அழைக்க வேண்டுமானால், சி.பி.சி.ஐ.டி போலீஸ்தானே வர வேண்டும். நீங்கள் எதற்கு வந்துள்ளீர்கள்?” எனச் சத்தம் போட்டாராம். உடனே போலீஸார், ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் சொல்லித் தர வேண்டியதில்லை’ என எகிறியுள்ளனர். போலீஸ் விசாரணை பற்றி மீடியாவிடம் பிறகு பேசிய தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ, ‘எதற்கு பிரச்னை செய்கிறீர்கள். இந்தாங்க முதல்வரிடம் போனில் பேசுங்கள். உங்கள் பிரச்னையை அவரிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 20 கோடி ரூபாய் தருகிறார்கள். வாங்கிக் கொண்டு பிரச்னையை முடியுங்கள். வேண்டுமானால், கூடுதலாக இன்னும் ஐந்து கோடி ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள். அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இப்படியே எத்தனை நாளைக்கு ஊர் ஊராகப் போகப் போகிறீர்கள் என்றெல்லாம் எங்களை போலீஸ் மிரட்டுகிறது’ எனச் சொல்லியிருக்கிறார்.’’

‘‘ஓஹோ’’

‘‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் மூன்று பேரைத் தவிர மற்ற அனைவரிடமும் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது தொலைபேசியில் பேசிவிடுகிறார். தினகரன் அணி எவ்வளவு உஷாராக இருந்தாலும், எதாவது ஒரு லைனில் வந்து எடப்பாடி பேசி சமரசம் செய்ய முயன்று வருகிறார். அவர்கள் யாரும் மனம் மாறவில்லை. காரணம் அவர்களுக்கு ஏற்கனவே பத்து கோடி வரை செட்டில்மென்ட் ஆகிவிட்டது. அதனால்தான் எடப்பாடி 15 கோடி வரை போகிறார். மொத்தத்தில் எம்.எல்.ஏ-க்கள் கோடிகளில் புரள்கிறார்கள். அவர் 15 கோடி போனால், தினகரன் 20 கோடி என சிக்னல் காட்டுகிறார்.”

“ஓஹோ!”

“ இதனால்தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்யும் முயற்சிகளை அரசு மேற்கொண்டது. முதல்வரை மாற்ற வேண்டும் எனச் சொல்லி, கவர்னரிடம் அளித்த கடிதம் தொடர்பாக சபாநாயகர் விளக்கம் கேட்டிருந்தார். அதன்மீது எம்.எல்.ஏ தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்க அரசு காய்களை நகர்த்தியது. இதை மோப்பம் பிடித்த தினகரன் தரப்பினர், சபாநாயகரைச் சந்தித்து ‘எந்த அடிப்படையில் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினீர்கள்’ என விளக்கம் கேட்டிருக்கிறார்கள். எடப்பாடி ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டசபையைக் கூட்ட கவர்னருக்கு உத்தரவிட கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்துவிட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க அரசு முயன்று வருகிறது என்கிற வாதத்தை தி.மு.க. தரப்பு வைத்தது. அதனால் 20-ம் தேதி வரையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம்.’’

‘‘அ.தி.மு.க. பிரச்னை இப்போது நீதிமன்றம் Vs சட்டமன்றம் என மாறியிருக்கிறதே?’’

‘‘சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்கிற சர்ச்சை நீண்ட வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிஇழப்பு செய்தால் அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் செல்லவும் தினகரன் அணி தயாராக இருக்கிறது. எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 11 பேர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல், எங்கள் மீது நடவடிக்கை எடுப்பது பாரபட்சமானது என நீதிமன்றத்தில் சொல்வார்களாம். இதனால் சபாநாயகருக்குத்தான் சிக்கல். நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் எல்லாம் முடிவதற்குள் கொஞ்ச காலம் ஆட்சியை ஓட்டிவிடலாம் என நினைக்கிறது எடப்பாடி தரப்பு. நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவந்து ஆட்சியைக் கவிழ்த்தாலும் சட்டசபையை மத்திய அரசு கலைக்காது. அதற்குள் மேலும் எம்.எல்.ஏ-க்களை இழுத்து, மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு எடப்பாடிக்கு வழிவகை செய்து தருவார்களாம். எந்த வகையிலும் எடப்பாடி அரசுக்கு ஆபத்து வந்தாலும் அதைத் தடுக்கும் அஸ்திரங்களை மத்திய அரசு எடுக்குமாம்.’’

‘‘அ.தி.மு.க பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரொம்ப அப்செட்டில் இருந்தாராமே?’’

‘‘அமைப்புச் செயலாளர் பதவியில் இருக்கிறார் வைத்திலிங்கம். ராஜ்யசபா எம்.பி வேறு. சசிகலா குடும்பத்தினரின் முதல் அரசியல் எதிரி இவர்தான் என டெல்டா ஏரியாவில் பேச்சு உண்டு. வைத்திலிங்கம் வசம் ஏழு எம்.பி-க்கள், ஐந்து எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். அவர்களை முன் நிறுத்தி வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக டெல்டா ஏரியாவில் அரசியல் செய்யவேண்டுமானால், முக்கியப்பதவி ஒன்றைத் தாருங்கள் என்று கேட்டார். அவருக்குப் பொதுச்செயலாளர் பதவி தருவதாக எடப்பாடி தரப்பில் தூது போனவர்கள் வாக்குக் கொடுத்தார்களாம். அதை நம்பித்தான் அவரும் எடப்பாடி கோஷ்டியில் ஐக்கியமானாராம். ஆனால், வந்த கொஞ்ச நாட்களில் எடப்பாடி போட்ட தூண்டிலில் அவரிடமிருந்த எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சிக்கிவிட்டார்களாம். தனி மரமானார் வைத்திலிங்கம்.’’

‘‘அட!’’

‘‘ஒ.பன்னீர்செல்வமும் எடப்பாடியும் இணைந்தபோது, சசிகலாவைப் பொதுக்குழுவைக் கூட்டி நீக்குவோம் என வைத்திலிங்கத்தைச் சொல்ல வைத்தார்களாம். கட்சி நிர்வாகிகள் புரோட்டோகாலில் நாலாவது இடத்தைத்தான் வைத்திலிங்கத்துக்குத் தந்தார்களாம். இதனால், டென்ஷன் ஆனாராம் வைத்திலிங்கம். அடுத்து, மத்திய அமைச்சர் பதவி மீது அவர் குறி வைத்திருந்தார். அதுவும் கிடைக்கவில்லை. தனக்குக் கையெழுத்திடும் அதிகாரம் படைத்த ஒரு பதவியை எதிர்பார்த்தாராம். அதையும் தரவில்லை எடப்பாடி பழனிசாமி. இரண்டு துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி, அதில் ஒன்றுக்கு வைத்திலிங்கம் பெயரை அறிவித்தார்கள். இதுவும் அவர் அப்செட்டிற்கு இன்னொரு காரணம். தனது கோபத்தை எடப்பாடியிடம் காட்டிவிட்டு அவசரமாக ஊருக்குக் கிளம்பிப்போனாராம்.’’

‘‘ஹெச்.ராஜா மு.க.ஸ்டாலினை நேரில் போய் சந்தித்திருக்கிறாரே?’’

‘‘ஹெச்.ராஜாவின் மணிவிழா வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காகத்தான் போனார். ஆனால், உண்மையான காரணம் வேறு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தமிழ்நாடு சாரண இயக்கத்தின் தலைவர் பதவிக்கு ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பள்ளிக்கல்வித் துறை முன்னாள் இயக்குநர் மணி போட்டியிடுகிறார். மணி, தி.மு.க-வின் முழு ஆதரவு பெற்றவர். ஹெச்.ராஜா போட்டியிடுவதை, தி.மு.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இந்தச் சூழலில்தான் ஹெச்.ராஜா, ஸ்டாலினைச் சந்தித்திருப்பது விவாதமாகி விட்டது.’’ என்றபடியே ஜூட் விட்டார் கழுகார்.

அட்டை ஓவியம்: ஹாசிப்கான்
படம்: என்.கண்பத்

ஆலுமா டோலுமா... ஆளும்கட்சி டீலுமா!

தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்களின் உறவினர்களைக் கண்காணிப்பதை, உளவுத்துறையினர் சிரத்தையுடன் செய்துவருகிறார்கள். உறவினர்கள் மூலம் எம்.எல்.ஏ-க்களின் மனதைக் கரைக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. ஜக்கையனிடம் பேச்சு நடத்தினால் ஒன்றும் நடக்காது என்பதால், அவருடைய மகன் மூலமாக காய் நகர்த்தியுள்ளனர். மகன் மூலமே அப்பாவுக்குத் தூது சென்றுள்ளது. இந்த சக்ஸஸ் ஃபார்முலாவைத்தான் குடகில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் உறவினர்களிடம் மேற்கொண்டுவருகிறது ஆளும் தரப்பு.

ஒரு எம்.எல்.ஏ-வின் சம்பந்தியிடம் இப்போதே சில அரசு ஒப்பந்தங்களுக்கான ஆர்டர்களைக் கையில் திணித்துள்ளார் முக்கிய அமைச்சர். உங்கள் சம்பந்தியை மட்டும் எங்கள் பக்கம் கொண்டுவந்துவிடுங்கள் என்று அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். சம்பந்தியும் எம்.எல்.ஏ-விடம் தொடர்ந்து பேசிவருகிறார். இதனால் என்ன செய்வது என்று குழப்பத்தில் உள்ளாராம் அந்த எம்.எல்.ஏ. இதே போல், பல எம்.எல்.ஏ-க்களின் உறவுகளுக்கு போன் போய்க்கொண்டிருக்கிறதாம். ‘நீங்கள் எந்த இடத்தில் செட்டில்மென்ட் செய்யச் சொல்கிறீர்களோ, அங்கே செய்துவிடுகிறோம்’ என்று ஓபனாகவே பேசியுள்ளார்கள். சில தினங்களுக்கு முன், குடகில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் அனைவரும், தங்களுக்கு எந்த வழிகளில் எல்லாம் பிரஷர் வருகிறது என்று ஒருவருக்கொருவர் சொல்லி சிலாகித்துள்ளார்கள்.பேரம் ஒருபுறம் நடந்துவருவது போலவே, மிரட்டல் ஒருபுறமும் எம்.எல்.ஏ-க்களுக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது.