அவ்வளவும் நாம்.
நான் யாரென்ற சிந்தனையில்
நானிருக்கும் போதெல்லாம்
அநேகமாக என் அப்பா
ஓர் ஆட்டுக்குட்டியோடுதான் விளையாடிக்கொண்டிருப்பார்
ஆட்டுக்குட்டியின் கேள்விகளை நான் கேட்பேன்
மேய்ப்பனின் பதில்களை அவர் சொல்வார்

அப்பா நாம் யார்
நாம் நொண்டிபெருமாளின் வாரிசுகள்
அப்பா அதற்குமுன் நாம் யார்
கிழவன் பரியேறும்பெருமாளின் வாரிசுகள்
அப்பா அதற்குமுன் நாம் யார்
சம்போரையன் ஐயரின் உழவர்கள்
அப்பா உழவனாவதற்கு முன் நாம் யாராக இருந்தோம்
உழவனாவதற்கு முன் நாம் நிலமாக இருந்தோம்
வயல் வரப்பு வாய்க்கால் பறவைக்கூட்டமெனவும் நாமே இருந்தோம்
காடாக இருந்த நினைவும் பல கனவுகளில் உண்டு
நதியாகக் கடல் வந்தடைந்த வழித்தடமும் பாடத்தில் உண்டு
மொத்தத்தில் நாம் எல்லோருக்கும் எல்லாமுமாக இருந்தோம்
போதுமா என் மகனே

இதுமட்டும்தானா அப்பா அப்படியெனில்
நாம் அரசனாக இருந்த நினைவில்லையா உனக்கு
வாள் வீரம் போர் மகுடம் கோபுரமென
செங்கோல் ஏந்தி நாம் வாழ்ந்த கதையில்லையா உன்னிடம்
அப்படியொரு கதை நிச்சயமாய் இருந்திருக்கும்
மன்னித்துக்கொள் மகனே
பேராசைகளை பெருந்துரோகங்களை
ஆண்ட பெருமைகளை
அடக்கிய உயிர்களைச் சொல்லும் கதைகளை
நாம் நினைவில் வைத்துக்கொள்ளவே கூடாது மகனே
அப்படியெனில் அப்பா
நாம் அரசனாக இருந்தோமென்ற நினைவு உன் நெஞ்சை நிமிர்த்தவேயில்லையா
நிச்சயமாக இல்லை மகனே
நாம் எல்லாமுமாக இருந்தோமென்ற நினைவே என்னை
இந்த ஆட்டுக்குட்டியோடு விளையாடச் சொல்கிறது

சரி அப்பா
இந்த ஆட்டுக்குட்டிக்கு நாம் இப்போது யார்
எஜமானர்களாக இருக்கலாம்
தோல் வியாபாரிகளாக இருக்கலாம்
இறைச்சிக் கடைக்காரராக இருக்கலாம்
மேய்ப்பர்களாக இருக்கலாம்
சக வழிப்போக்கர்களாகவும் இருக்கலாம்
இன்னொரு ஆட்டுகுட்டியாகவும் இருக்கலாம்
ஆனால், சரியான பதில் நம்மிடத்தில் இல்லை மகனே
அது அந்த ஆட்டுகுட்டியின் கண்களில் இருக்கிறது
போதும் அப்பா இப்போது சொல்லுங்கள்
நான் யார்
நீ என் விதை
நீங்கள் இல்லாமல் நான் யார்
என் பயிர்களின் நிலம்
விளையாடாதீர்கள் அப்பா இன்னொருவருக்கு நாம் யார்
இன்னொருவருக்கு நாம் இன்னொருவர்
ஐயோ அப்பா
அவ்வளவுதானா நாம்
ஐயோ மகனே