Published:Updated:

கறுப்பு... கதறும் காக்கி!

கறுப்பு... கதறும் காக்கி!

பிரீமியம் ஸ்டோரி

றுப்பு நிறத்தைப் பார்த்தாலே கதிகலங்கிப் போகிறார்கள் ஆட்சியாளர்கள். கறுப்புச் சட்டை போட்டவர்களுக்கு மெரினாவில் 144 போட்டவர்கள், இப்போது கிரிக்கெட் மைதானத்தையும் விட்டுவைக்கவில்லை.  இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. சிலர், ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும் கறுப்புச் சட்டை அணிந்து அங்கு வந்திருந்தனர். போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். அதனால் கறுப்பு உடை அணிந்து வந்தவர்கள் அனைவரையும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரானவர்கள் என முடிவு செய்த போலீஸ், கறுப்புச் சட்டைக்காரர்களை விரட்டியடித்தனர். முடி கருப்பாக இருப்பவர்கள் அனைவரையும் மொட்டை அடிக்கச் சொல்வார்கள் போல! அண்ணா தி.மு.க-வின் கொடியில் கறுப்பு எதற்கு? கறுப்புச்சட்டையைத் தன்மானத்தின் அடையாளமாக தந்துவிட்டுப்போன பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாடும் அருகதை ஆட்சியாளர்களுக்கு இல்லை.

கறுப்பைப் பார்த்து சுனாமி போல பயப்படுகிறது பினாமி!

கறுப்பு... கதறும் காக்கி!
கறுப்பு... கதறும் காக்கி!
கறுப்பு... கதறும் காக்கி!

- தா.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு